தமிழ்நாடு அரசின் நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதலும் – 12மணி நேர வேலை சட்டமும்:

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023 (Tamil Nadu Land Consolidation (for special projects) Act 2023) கடந்த ஏப்ரல் மாதம் சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சூழலில், இந்த மசோதாவிற்கு ஆளுநர் ரவி 25/08/2023 அன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்தின் மூலம் எந்தவொரு நிலங்களையும் சிறப்பு திட்டங்கள் என வகைப்படுத்தி அரசு கையகப்படுத்த முடியும். அதை சுற்றியுள்ள நீர்நிலைகளும் அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும் .(எ.கா) தனியார் கல்வி…

Read More

நில ஒருங்கிணைப்புச் சட்டம்: புதிய பேராபத்து!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளான ஏப்ரல் 21 அன்று, 17 மசோதாக்கள் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023 ( *Tamil Nadu Land Consolidation (for special projects) Act 2023)* மிக ஆபத்தானது எனக் கருதப்படுகிறது. நிலத்தைக் கையகப்படுத்துவது தொடர்பாக, நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (2013), தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (1978), தமிழ்நாடு தொழில் துறை நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல்…

Read More

இந்திய தொழிலாளர் வர்க்கம் வளர்ந்து வந்த வரலாறு பகுதி-3

ராபர்ட் ஓவனின் கூட்டுறவு தத்துவம் சரிவுக்கு பிறகு தொழிலாளர்கள் அதுவரையில் அடைந்திருந்த அனுபவமானது பொருளாதார கோரிக்கைகளை மட்டுமே கொண்ட நடவடிக்கைகளின் மூலம் முன்னேற்றம் அடைய முடியாது என்பதை படிப்படியாக புரிந்து கொள்ள வழிவகுத்தது. மக்கள் சாசனம்: இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தின் அடுத்த கட்டத்தில் வாக்குரிமை என்பது பிரதான அம்சமாக மாறியது .1836 ஆம் ஆண்டில் லண்டன் நகர உழைக்கும் ஆண்களின் கழகம் என்ற அமைப்பு நிறுவப்பட்டது. அடுத்த ஆண்டில் வில்லியம் லோவெட் மற்றும் பலரின் முன்முயற்சியின் விளைவாக…

Read More

ஜெனரல் மோட்டார் நிறுவனத்தை கையகப்படுத்திய ஹுண்டாய் நிறுவனமும்- தொழிலாளர்களின் போராட்டமும்

ஜெனரல் மோட்டார்ஸின் மகாராஷ்டிராவில் உற்பத்தி ஆலையை வாங்க ஹூண்டாய் ஒப்பந்தம் செய்துள்ளது . ஹூண்டாய் மோட்டார் இந்தியா (எச்எம்ஐஎல்)16/08/2023 அன்று ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா (ஜிஎம்ஐ) உடன் மகாராஷ்டிராவில் உள்ள தலேகான் ஆலையின் “நிலம், கட்டிடங்கள், சில இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி உபகரணங்களை” கையகப்படுத்துவதற்கான கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஜெனரல் மோட்டார் நிர்வாகத்தின் விருப்ப ஓய்வு(VRS) திட்டத்தை ஜெனரல் மோட்டார்ஸின் தொழிற்சங்கம் நிராகரித்துள்ளது 1000 தொழிலாளர்களின் பணிவாய்பினை உறுதி செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது இதுபோன்று குஜராத்…

Read More

தொழிற்சங்க உரிமை போராட்டத்தில் ஜப்பான் நிறுவனத்தின் அடாவடித்தனமும் தொழிலாளர்களின் வெற்றியும் :

காஞ்சிபுர மாவட்டம் ஒரகடத்தில் அமைந்துள்ள யுனிபிரஸ் என்ற ஜப்பான் நிறுவனம் தொடர்ந்து தொழிற்சங்க உரிமைகளை மறுத்து அடாவடி தனம் செய்து வருகிறது . தொழிலாளர்களால் எந்த வித இடையூறும் இல்லாமல் நிறுவப்பட்ட சிஐடியு தொழிற்சங்க கொடி மற்றும் பெயர் பலகையை புல்டோசர் கொண்டு அகற்றி நிர்வாகம் அடாவடிதனம் செய்தது. இதற்கு பதிலடியாக தொழிற்சங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பான்மையான தொழிலாளர்களை திரட்டி ஊர்வலமாக சென்றுஅதே இடத்தில் நேற்று(24/08/2023) மாலை கொடியேற்றியது. ஒரகடம் பகுதி தொழிற்சாலை நிர்வாகங்கள் தொடர்ந்து தொழிலாளர்களை…

Read More

ஆகஸ்ட் 21 கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் மறைந்த ப.ஜீவானந்தம் அவர்களின் பிறந்த நாள். அவரைப் பற்றிய ஒரு நினைவு குறிப்பு:

சென்னை தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் ஒரு பூங்கா இருக்கிறது. அதற்கு ஜீவா என்று பெயரிட்டுள்ளார்கள் அந்த பகுதி மக்கள். பலமுறை தாம்பரம் போயிருந்தாலும் மறைந்த தோழர் ஜீவாவுக்கும் இந்த பகுதிக்கும் என்ன உறவு? என்று ஆராயத் தொடங்கினேன். கிடைத்த தகவல்களை அப்படியே தருகிறேன். இன்றைக்கு அறுபது எழுபது வருடங்களுக்கு முன்பு, தாம்பரத்தில் கல் உடைக்கும் தொழிலாளர்கள் ஏராளமாய் வசித்து வந்தனர். அவர்களெல்லாம் வெளியூர் மக்கள். எனவே, கிடைத்த இடங்களில் சிறுசிறு குடிசைகள் போட்டு அரசு பறம்போக்கு…

Read More

இந்திய தொழிலாளர் வர்க்கம் வளர்ந்த வந்த வரலாறு பகுதி -2

தொழில்மயமாக்கலும் வர்க்கங்களின் வளர்ச்சியும்: ஆங்கிலேய ஃப்ரெஞ்சு யுத்தங்கள் தொடர்ந்த ஆண்டுகளில் தொழிற்சங்க வாதமானது பல்வேறு இடையூறுகளை சந்திக வேண்டிய நிலை ஏற்பட்டது .கூட்டு பேரம் என்ற குறிக்கோளை முதலாளிகள் பெரும்பாலனோர் ஏற்க மறுத்ததன் விளைவாக வேலை நிறுத்த நடவடிக்கைகளின் போது அடிக்கடி கலவரங்களும் ஏற்பட்டன. அதேபோன்று வேலைநிறுத்தங்கள் தோல்வியுறவும் ,தொழிலாளர்கள் பழிவாங்கபடுவதும் அவர்களின் அமைப்புகள் தற்காலிகமாகப் பிளவுபடவும் இவை வழிவகுத்தன . தொழில்மயமாக்கலானது ஃப்ரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் வேகமாக வளர்ந்து வந்தது மேலெந்து வந்துகொண்டிருந்த முதலாளித்துவத்தின் பலம்…

Read More

நிலக்கரி அல்ல, விவசாயம்தான் வாழவைக்கும்!

பெ.சண்முகம்( தலைவர்  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்) – தொடர்புக்கு: pstribal@gmail.com ‘வாடிய பயிரைக் கண்டபோதெல் லாம் வாடினேன்’ என்று பாடிய வள்ளலார் வாழ்ந்து மறைந்த கடலூர் மாவட்டத்தில் கதிர் வரும் பருவத்தில் இருந்த நெற்பயிர்கள் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு அழிக்கப்பட்டது, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதியே அக்காட்சியைக் கண்டு கண்கலங்கியதாகக் கூறியிருக்கிறார். ஆட்சியாளர்கள் அல்லது நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி.) தரப்பில் என்ன காரணம் சொன்னாலும், பயிர்கள்…

Read More

அய்க்கூ கவிதைகள்: பகுதி-2 மகரந்தத்துகள்கள்..( – வானவன் ( சென்னை)

★ நிலா வந்ததுபசி நிற்கவில்லைசாலையோர குழந்தை. ★ மெல்ல வருடிதூக்கம் தந்ததுமின்விசிறி. ★ இரவில் பயணம்கவிழ்ந்த பேருந்துஎஞ்சின் மட்டும் உயிரோடு. ★ தூக்கம் வரவில்லைபுரண்டு படுத்தேன்மகளின் திருமணம். ★ வேலையில்லா பணம்ஏழையின் சந்தோஷம்இடைத்தேர்தல். ★ இதய அறுவைசிகிச்சைகாணாமல் போனதுகிட்னி. ★ அறுசுவை உணவுஅம்மனுக்கு படையல்அம்மா காப்பகத்தில். ★ பயிற்சி பெறாமல்நன்றாக ஓடியஃபைனான்ஸ் அதிபர். ★ வெளிநாடு செல்வாய்ஜோசியம் சொன்னதுகூண்டுக்கிளி. ★ பொது இடங்களில்புகை பிடிக்காதீர்போலீஸ் தவிர.

Read More

அய்க்கூ கவிதைகள் மகரந்ததுகள்கள் ..(வானவன்)

★ எவ்வளவு ஓடியும்மூச்சிறைக்கவில்லைகடிகாரமுள். ★பிடித்த வேலைதொடரவில்லைவிருப்ப ஓய்வு. ★ பேருந்தில் எப்போதும்இவருக்கு இடமுண்டுஓட்டுனர். ★அனைவரும் அழுதோம்அப்பா சிரித்தார்போதையில். ★ ஏ.சி. காரில்இறங்கினார் நடிகர்ஏழையாய் நடிக்க. ★ இனி குடிப்பதில்லைஒவ்வொரு முறைகுடித்த பின்னும். ★ பொறுத்தது போதும்கொடியோரை அழிப்பாய்அறுவா கையில் உள்ள அய்யனாரே ★ கிடைத்தது சுதந்திரம்சுகமாய் வாழ்கிறார்கள்அரசியல்வாதிககள். ★ வியர்வை சிந்தினான்உயர்ந்ததுபணக்காரன் மாளிகை. ★ இருவருக்கும்திருமணம்இடங்கள் வேறு. ★ வலியும் வேதனையும்பறிமுதல் செய்யும்குழந்தை. ★ உலகமயம்,தாராளமயம்உழைப்பவன்வாயில் மண். ★ பிடித்தபாடல்காதில் விழ மறுத்ததுகுடிகார கணவன். ★ தினமும்…

Read More