தனியார் வசம் மின்சாரம் தவிர்க்கப்பட வேண்டிய நடவடிக்கை:

பெ.சண்முகம்(தலைவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்)- தொடர்புக்கு: pstribal@gmail.com 2022 ஆகஸ்ட் 8ஆம் தேதி, மின்சாரச்சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக, உடனடியாக நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு இம்மசோதா அனுப்பப்பட்டுவிட்டது. ஆனால், அடுத்தடுத்து நடக்க உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில், ஏதேனும் ஒன்றில் இம்மசோதா சட்டமாக்கப்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை. சரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்ப்பதுஏன்? இந்தச் சட்டத்திருத்தத்தால் நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படுமா? கால் பதிக்கும் தனியார் நிறுவனங்கள்: மின்சார உற்பத்தியில்…

Read More

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்- ஜான் ரீடு

நவம்பர் 7 மானுட வரலாற்றில் மகத்தான நாள். மாபெரும் சோவியத் புரட்சி வெற்றியடைந்தது. பாட்டாளிகளின் கையில் ஆட்சியதிகாரம் வந்தது. முதலாளித்துவ பிற்போக்காளன் கெரன்ஸ்கியை செம்படை வீழ்த்தியது. உலகப் பந்தில் உழைப்பவர் வாழ்க்கையில் வெளிச்சக் கீற்று நுழைந்தது. மார்க்சிய தத்துவத்தை உருவாக்கிய மாமேதைகள் கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கெல்சுக்கு பெருமை சேர்த்தார்கள் ரஷ்யப் பாட்டாளிகள். தோழர் லெனின் மார்க்சியம் வெறும் வறட்டுச் சூத்திரம் அல்ல. நடைமுறைக்கு வழிகாட்டி என நிரூபித்தார். ரஷ்ய மண்ணில் நடந்த ஆயுதப் புரட்சியை கண்…

Read More

நவம்பர் 7 ரஷ்ய புரட்சி தினம் நினைவு கூர்வோம்:

“புரட்சி” என்ற வார்த்தை நம் காதுகளில் விழுந்தவுடன் நம் எண்ணத்தில் உடனே தோன்றுபவர்கள்; புரட்சித்தலைவர் எம்ஜிஆர். புரட்சித்தலைவி ஜெயலலிதா. புரட்சிக்கலைஞர் விஜயகாந்த். திரைத்துறையிலிருந்து அதிகார அரசியலுக்கு வந்த இவர்களுக்கு புரட்சியின் பொருள் கூட புரியாது. ஆனால்….. புரட்சித்தலைவன் என்ற சொல் உலகில் ஒரே ஒருவரைத்தான் குறிக்கும். அவர்தான் மேதை லெனின்! அந்த புரட்சி வென்ற நாள்தான் 1917 நவம்பர் 7 ஆம் நாள். இந்நாள் உலக கம்யூனிஸ்ட்களால் கொண்டாடப்படுகின்ற ஓர் ஒப்பற்ற நாள். புரட்சிக்கு முன்னால் ஜார்ஜ்…

Read More