அய்க்கூ கவிதைகள்: பகுதி-2 மகரந்தத்துகள்கள்..( – வானவன் ( சென்னை)

★ நிலா வந்ததுபசி நிற்கவில்லைசாலையோர குழந்தை. ★ மெல்ல வருடிதூக்கம் தந்ததுமின்விசிறி. ★ இரவில் பயணம்கவிழ்ந்த பேருந்துஎஞ்சின் மட்டும் உயிரோடு. ★ தூக்கம் வரவில்லைபுரண்டு படுத்தேன்மகளின் திருமணம். ★ வேலையில்லா பணம்ஏழையின் சந்தோஷம்இடைத்தேர்தல். ★ இதய அறுவைசிகிச்சைகாணாமல் போனதுகிட்னி. ★ அறுசுவை உணவுஅம்மனுக்கு படையல்அம்மா காப்பகத்தில். ★ பயிற்சி பெறாமல்நன்றாக ஓடியஃபைனான்ஸ் அதிபர். ★ வெளிநாடு செல்வாய்ஜோசியம் சொன்னதுகூண்டுக்கிளி. ★ பொது இடங்களில்புகை பிடிக்காதீர்போலீஸ் தவிர.

Read More

அய்க்கூ கவிதைகள் மகரந்ததுகள்கள் ..(வானவன்)

★ எவ்வளவு ஓடியும்மூச்சிறைக்கவில்லைகடிகாரமுள். ★பிடித்த வேலைதொடரவில்லைவிருப்ப ஓய்வு. ★ பேருந்தில் எப்போதும்இவருக்கு இடமுண்டுஓட்டுனர். ★அனைவரும் அழுதோம்அப்பா சிரித்தார்போதையில். ★ ஏ.சி. காரில்இறங்கினார் நடிகர்ஏழையாய் நடிக்க. ★ இனி குடிப்பதில்லைஒவ்வொரு முறைகுடித்த பின்னும். ★ பொறுத்தது போதும்கொடியோரை அழிப்பாய்அறுவா கையில் உள்ள அய்யனாரே ★ கிடைத்தது சுதந்திரம்சுகமாய் வாழ்கிறார்கள்அரசியல்வாதிககள். ★ வியர்வை சிந்தினான்உயர்ந்ததுபணக்காரன் மாளிகை. ★ இருவருக்கும்திருமணம்இடங்கள் வேறு. ★ வலியும் வேதனையும்பறிமுதல் செய்யும்குழந்தை. ★ உலகமயம்,தாராளமயம்உழைப்பவன்வாயில் மண். ★ பிடித்தபாடல்காதில் விழ மறுத்ததுகுடிகார கணவன். ★ தினமும்…

Read More

பிறந்தநாள் பரிசு

சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் தொழிலாளர்களின் போராட்டம் முன்பை விட அதிகமாக வகையில் நடத்து கொண்டிருக்கிறது…தகவல் தொழில்நுட்பம் சாமான்ய மனிதர்களை நெருங்காத காலம் அது. ஓடிய வேகத்தில் வீட்டிற்குள் நுழைந்ததும்,மூச்சு வாங்கி கொண்டே அவளின் அம்மாவிடம்,‘ அம்மா அப்பா இன்னும் வரவில்லையா அம்மா என்று கேட்டாள்.மீனாட்சி அவள் தலையை தடவிகொடுத்துகொண்டே ‘ கை கால் கழுவிட்டுட்டு வா ‘ காபி குடிக்கலாம் என்றாள்,‘ஏன் அம்மா அப்பா இன்னும் வரல,என்றாள் ,அப்பா இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார்,நீ…

Read More