
உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்- ஜான் ரீடு
நவம்பர் 7 மானுட வரலாற்றில் மகத்தான நாள். மாபெரும் சோவியத் புரட்சி வெற்றியடைந்தது. பாட்டாளிகளின் கையில் ஆட்சியதிகாரம் வந்தது. முதலாளித்துவ பிற்போக்காளன் கெரன்ஸ்கியை செம்படை வீழ்த்தியது. உலகப் பந்தில் உழைப்பவர் வாழ்க்கையில் வெளிச்சக் கீற்று நுழைந்தது. மார்க்சிய தத்துவத்தை உருவாக்கிய மாமேதைகள் கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கெல்சுக்கு பெருமை சேர்த்தார்கள் ரஷ்யப் பாட்டாளிகள். தோழர் லெனின் மார்க்சியம் வெறும் வறட்டுச் சூத்திரம் அல்ல. நடைமுறைக்கு வழிகாட்டி என நிரூபித்தார். ரஷ்ய மண்ணில் நடந்த ஆயுதப் புரட்சியை கண்…