ஜனவரி 21 தோழர் லெனின் நினைவு நாள்:

ஜார் மன்னனும் நிலபிரபுத்துவமும்
ரஷ்ய மக்களை சுரண்டிக்கொண்டிருந்த வேளையில், அதை வீழ்த்த போராடிய புரட்சிகர குழுவின் போராளியான தனது அண்ணன் அலெக்சாண்டர் கொலையுண்ட பின், அவர் வழியில் புறப்பட்டு, மக்கள் புரட்சி மூலம் ஜார் கொடுங்கோல் ஆட்சிக்கு 1917 ல் முடிவுரை எழுதிய புரட்சித் தலைவன்தான்….. 1870 ஏப்ரல் 22.ல் பிறந்த, சட்டம் பயின்ற மார்க்ஸ்- எங்கல்ஸ் மாணவன் தோழர் லெனின்.

உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு ஒன்று அமைக்கப்பட்டது.
ரஷ்யா சோசலிச நாடு என அறிவிக்கப்பட்டது.
அதன் தலைவராக தோழர் லெனின் அறிவிக்கப்பட்டார்.

மேதை லெனின் கடுமையாக உழைத்தார்,தீவிரமாக சிந்தித்தார், விவசாய, தொழிலாள தோழர்களுடன், அறிஞர்களுடன் தொடர்ந்து விவாதித்தார்.
விளைவு…..
வறுமை, பசி, பஞ்சம் கோரப்பிடியில் சிக்கித்தவித்த ரஷ்ய மண்ணில்,
நாடு முழுவதும் தொழிற்சாலைகள் எழுந்தன. நகரங்கள் உருவாகின.வேலை வாய்ப்புகள் பெருகின.கல்வி தரம் உயர்ந்தன, எல்லாருக்கும் எல்லாமும் உறுதி செய்யப்பட்டன.
ரஷ்ய மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சி மலர்ந்தன.

ரஷ்ய நாட்டு வளர்ச்சிக்காக ஓயாது உழைத்த மேதை லெனின் 1924 ஜனவரி 21 அன்று சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்.

எங்கிருந்து தொடங்குவது?, என்ன செய்ய வேண்டும்?
ஓரடி முன்னால் ஈரடி பின்னால்,
மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று கூறுகளும்,
பொருள்முதல்வாதமும், அனுபவவாத விமர்சனமும்,
தத்துவார்த்த குறிப்புகள்,
இடதுசாரி சீர்குலைவுவாதம் ஒரு இளம்பிள்ளை கோளாறு,
ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளின் முழக்கம் குறித்து,
ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் ,
அரசும் புரட்சியும்,
சமூக புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரண்டு உத்திகள்,
பெண்கள் விடுதலை…..
போன்ற நூல்களில் மேதை லெனின் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

அனைத்து நாட்டு விடுதலைக்கும் ஏற்றதொரு ஆயுதங்களை தமது நூல்களில் கொடுத்து விட்டு சென்றிருக்கிறார் புரட்சியாளர் லெனின்.

ஜார் மன்னர்கள் முற்றாக ஒழிந்துவிடுவதில்லை;
மோடி வடிவில் பிறந்துகொண்டுதான் இருப்பார்கள்.
அவர்களை ஒழித்துக்கட்ட லெனினியத்தால்தான் முடியும்.

லெனினை வாசிப்போம்…..!
லெனினை பேசுவோம்….!
லெனினின் புரட்சி சிந்தனைகளை பரப்புவோம்…..!

லெனினியம் வெற்றி பெற
மேதை லெனின் மறைந்த இந்த நூறாம் ஆண்டு நினைவு நாளில் உறுதி ஏற்போம்….‌!

இரா.திருநாவுக்கரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *