தொழிற்சங்கம் பற்றி அண்ணல் அம்பேத்கர்…

முதலாளிகள் உழைப்பை விழுங்கும் முதலைகளாக இருக்கும் வரை தொழிலாளர்கள் துயரத்தில் மூழ்கி கொண்டு தான் இருப்பார்கள்.இந்த நாட்டில் தொழிலாளர்கள் பார்ப்பனியம்–முதலாளித்தும் என்ற இரண்டு எதிரிகளை எதிர்த்து போராட வேண்டி உள்ளது.

தீண்டத்தகாதவர்கள் என்ற முத்திரை குத்தி ஒடுக்கப்பட்ட சாதி தொழிலாளிகளுக்கு பெரும்பாலான வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன உயர் பதவிகள் அனுமதிக்கப்படுவதில்லை.

இனம், மதம், என்ற காரணங்களை காட்டி ஒரு தொழிலாளி மற்றொரு தொழிலாளி மீது பகைமை கொண்டிருப்பதற்கான காரணங்களை அகற்றுவது தொழிலாளர் ஒற்றுமையை கொண்டு வருவதற்கான உண்மையான வழியாக இருக்கும்.

” திறமையான செயல்வீரர்கள்” இல்லை என்றால் சங்கம் ஒரு செயல்படும் அமைப்பாக இருக்க முடியாது.

தொழிற்சங்கங்கள் அரசியல் நோக்கங்களுக்காக அணி திரள வேண்டும். ஒரு கட்சியின் வயது என்ன? என்பதெல்லாம் பிரச்சனை அல்ல அதன் கொள்கைகள் என்ன?அது எந்த லட்சியத்திற்காக நிற்கிறது. அதன் உள்ளாற்றல் என்ன? என்பதே முக்கியமாகும்.

தொழிலாளர்கள் அதிகாரத்தை கைப்பற்றாத வரையில் அவர்களுடைய பிரச்சனைகளை தீர்க்க முடியாது. தொழிலாளர்களின் நலன்களுக்காக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் இருந்து எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பின்வாங்கி விடக்கூடாது ஒரு பொதுவான தொழிலாளர் கட்சியை உருவாக்குவதற்கு தொழிலாளர் அரசை கொண்டு வருவதற்கும் முயல வேண்டும்.அது எவ்வளவு விரைவில் நடைபெறுகிறதோ அந்த அளவுக்கு தொழிலாளர்களின் தேவைகளை சிறப்பாக நிறைவேற்ற முடியும்.

முதலாளித்துவ அமைப்பில் செயல்பட்டு வருகின்ற நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இரண்டு விஷயங்கள் மிகவும் அபாயகரமானவை 1.உழைப்பவர்கள் வறுமையில் வாழ்ந்து வருகிறார்கள் 2.உழைக்காதவர்கள் மாபெரும் மூலதனத்தை வைத்திருக்கிறார்கள் அரசியல் ரீதியான சமத்துவம் நிலவுகின்ற அதே நேரத்தில் பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வு நிலை வருகிறது.

தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான எந்த ஒரு தகராறிலும் அரசாங்கம் எப்பொழுதுமே முதலாளிகள் பக்கமே நிற்கிறது.

தன் சகத் தொழிலாளிக்கு தரத் தயாராக இல்லாத சலுகைகளை தான் மட்டுமே கோருவது தவறானது என அத்தொழிலாளிக்கு சொல்வதே தொழிலாளர் ஒற்றுமையை கொண்டு வருவதற்கான உண்மையாக வழியாக இருக்கும்

(இந்தியாவில் இரு எதிரிகள் பார்ப்பனியம் முதலாளியம்)

சாதி இந்து தொழிலாளர்கள் முஸ்லிம் தொழிலாளர்களோடு இணைந்து பணியாற்றுவது குறித்து கவலைப்படுவதில்லை ஆனால் தீண்ட தகாதவர்களோடு இணைந்து பணியாற்ற மறுக்கிறார்கள்.

முதலாளியதிற்கு எதிராக தொழிற்சங்க தலைவர்கள் அனல் பறக்க பேசுவதை கேட்டிருப்போம் எந்த ஒரு தலைவரும் தொழிலாளர்கள் மத்தியில் பார்ப்பனியத்திற்கு எதிராக பேசியதை கேட்டதில்லை தொழிலாளர்களை பிளவுபடுத்துவதில் பார்ப்பனியத்திற்கு பெரும் பங்குண்டு என்று உண்மையை ஒப்புக் கொண்டுள்ளதால் இவர்கள் இப்படி அமைதி காக்கிறார்கள்.

தொழிலாளிகளை அமைப்பாக்குவது அவர்களுக்கு கற்றுக் கொடுப்பது கிளர்ச்சி செய்ய உதவி செய்வது இவையெல்லாம் தொழிற்சங்க தலைவர்களின் கடமையாக கருதுவதில்லை தங்களுக்கு தலைவர் செயலாளர் போன்ற பதவிகள் வேண்டும் என்ற நோக்கத்திற்காக தங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்ள தங்கள் சங்கங்களை தனியாக வைத்திருப்பது மாற்று சங்கங்கள் மீது அவர்கள் ஒரு பகைமை உணர்வை உருவாக்கி வருவார்கள் தொழிலாளிக்கு முதலாளிக்கும் இடையில் நிலவும் பகைமையை காட்டிலும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் மிக தீவிரமான பகைமை நிலவும் ஒரு வெட்கக்கேடான அதிர்ச்சியான நிகழ்வை நாம் பார்க்கிறோம் இதையெல்லாம் எதற்காக தொழிலாளர்களிடையே தலைமை பதவி பிடிக்க வேண்டும் என்ற ஒரு சில சுயநல நோக்கத்திற்காகவே.

நியாயமான குறைந்தபட்ச கூலி, சீரான வேலை நேரம்,கூட்டு பெற உரிமை, போன்ற லட்சியங்களை வெறும் தொழிற்சங்கங்கள் மூலம் அடைந்து விட முடியாது. இம்மாதிரியான சீர்திருத்தங்களை அடைவதற்கு கூட தொழிற்சங்கங்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் தொழிற்சங்க வலிமையை அதிகரித்துக் கொள்ள அமைப்பின் கீழ் அணி திரளுவதுடன் மட்டுமல்லாமல் நாட்டின் அரசியலில் தங்களுடைய பாத்திரத்தை ஆற்றுவதன் மூலம் தான் வெற்றி பெற முடியும்.

அரசியல் என்பது வர்க்க உணர்வின் அடிப்படையில் இருக்க வேண்டும். வர்க்க உணர்வு இல்லாத அரசியல் என்பது பித்தலாட்டமே.

ஆகவே வர்க்க நலன் வர்க்க உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஒரு அரசியல் கட்சியில் ஒவ்வொரு தொழிலாளியும் சேர வேண்டும்.

உங்களுக்கான அமைப்பை கட்டத் தொடங்குங்கள் வெற்றி பெறும் வரை ஓய்வு கொள்ளாதீர்கள்…

ஆசிரியர்:அண்ணல் அம்பேத்கர்

தமிழில் வெ. கோவிந்தசாமி.

வெளியீட்டகம்:அலைகள் 98417 75112

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *