சிறப்புக் கட்டுரை ராமராஜ்ஜியம் அமைப்பதில் பாஜகவும் காங்கிரசும் ஒன்றே!சமரன்

ஆளும் மோடி அரசு நாட்டின் அனைத்து துறைகளில் தோல்வியடைந்து வருகிறது. நாட்டில் விலைவாசி உயர்வு, வறுமை, வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. வரலாறு காணாத ஊழலில் திளைக்கிறது. அதானி, அம்பானிகளுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் நாட்டை கூறுபோட்டு விற்கிறது. நெருக்கடியின் சுமைகள் மக்கள் மீது சுமத்தப்படுவதை மூடிமறைக்க மக்களை சாதி, மதவெறிகளில் ஆழ்த்தி வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்து மதவெறியூட்டி பெரும்பான்மை இந்துக்களை வாக்குவங்கியாக மாற்றும் நோக்கில் இந்த மாதம் 22ம் தேதி ராமர் கோவிலை திறக்கவுள்ளது. சொல்லொண்ணா துயரத்தில்…

Read More

லெனின் தொழிலாளி வர்க்கத்தின் ஆசிரியராகவும் நண்பராகவும் இருந்தார்:

நினைவுகூருதல் மற்றும் உத்வேகம் பெறுதல்… உழைக்கும் வர்க்கத்தின் மீதான கொடூரமான தாக்குதல்களின் இக்காலத்தில், தொழிலாளர் வர்க்கத்தின் மாபெரும் தலைவரும், ஆசிரியரும், நண்பரும், உலகின் முதல் வெற்றிகரமான தொழிலாளர் புரட்சியின் தலைவருமான லெனினை நினைவு கூர்வது இன்று மிகவும் பொருத்தமானது. சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையின் தளைகளிலிருந்து விடுபட்டு உழைக்கும் மக்கள் எவ்வளவு அற்புதங்களைச் செய்ய முடியும் என்பதை உலகுக்குக் காட்டிய சோவியத் யூனியனில் முதல் சோசலிச அரசு லெனின் தலைமையில் நிறுவப்பட்டது. விளாடிமிர் இலிச் லெனின் 1870 ஆம்…

Read More

ஜனவரி 21 தோழர் லெனின் நினைவு நாள்:

ஜார் மன்னனும் நிலபிரபுத்துவமும் ரஷ்ய மக்களை சுரண்டிக்கொண்டிருந்த வேளையில், அதை வீழ்த்த போராடிய புரட்சிகர குழுவின் போராளியான தனது அண்ணன் அலெக்சாண்டர் கொலையுண்ட பின், அவர் வழியில் புறப்பட்டு, மக்கள் புரட்சி மூலம் ஜார் கொடுங்கோல் ஆட்சிக்கு 1917 ல் முடிவுரை எழுதிய புரட்சித் தலைவன்தான்….. 1870 ஏப்ரல் 22.ல் பிறந்த, சட்டம் பயின்ற மார்க்ஸ்- எங்கல்ஸ் மாணவன் தோழர் லெனின். உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு ஒன்று அமைக்கப்பட்டது. ரஷ்யா சோசலிச நாடு என…

Read More

தொழிற்சங்கம் பற்றி அண்ணல் அம்பேத்கர்…

முதலாளிகள் உழைப்பை விழுங்கும் முதலைகளாக இருக்கும் வரை தொழிலாளர்கள் துயரத்தில் மூழ்கி கொண்டு தான் இருப்பார்கள்.இந்த நாட்டில் தொழிலாளர்கள் பார்ப்பனியம்–முதலாளித்தும் என்ற இரண்டு எதிரிகளை எதிர்த்து போராட வேண்டி உள்ளது. தீண்டத்தகாதவர்கள் என்ற முத்திரை குத்தி ஒடுக்கப்பட்ட சாதி தொழிலாளிகளுக்கு பெரும்பாலான வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன உயர் பதவிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இனம், மதம், என்ற காரணங்களை காட்டி ஒரு தொழிலாளி மற்றொரு தொழிலாளி மீது பகைமை கொண்டிருப்பதற்கான காரணங்களை அகற்றுவது தொழிலாளர் ஒற்றுமையை கொண்டு வருவதற்கான…

Read More

பற்றி எரிந்த வர்க்கப் போராட்டம் !***கீழ்வெண்மணி போராட்ட வரலாறு:

உழைப்புக்கு ஏற்ற கூலி வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலாக விவசாயத் தொழிலாளிகள் 1967-இல் முன்வைத்தனர். அதாவது இதுவரையில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாள் கூலியாகிய 1படி நெல்லுடன் மேலும் ஒருபடி நெல் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையே அவை. ஆனால் பல மிராசுதாரர்கள் விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தனர். நமக்கு கீழே கைகட்டி வாய் பொத்தி வேலை செய்தவர்கள் இன்று நிமிர்ந்து கேள்வி கேட்க ஆரம்பித்தது ஆதிக்க வர்க்கத்தால் ஜீரணிக்க முடியவில்லை. விவசாய தொழிலாளர் சங்கம்…

Read More

வெண்மணி தீயினும் கொடியவர் தீயிலிட்டாரே!……(தோழர் தியாகு )..

அந்தக்‌ கொடுமை நிகழ்ந்து அரை நூற்றாண்டு ஆயிற்று. 1968 திசம்பர்‌ 25 கிறிஸ்துமஸ்‌ நாளில்‌ கீழ வெண்மணியில்‌ பட்டியலின மக்கள்‌.வாழும்‌ சேரியின்‌ கடைக்கோடியிலிருந்த இராமையாலின்‌ குடிசையில்‌ 44 உயிர்கள்‌ உயிரோடு எரிந்து – உண்மையில்‌ எரிக்கப்பட்டு — சாம்பலாயின. அது விபத்தன்று, படுகொலை! இவ்வளவு கொடிய தண்டனை பெறுவதற்கு அவர்கள்‌ செய்த குற்றம்‌? ஒரு குற்றமில்லை, பல குற்றங்கள்‌! நால்வர்ணத்துக்கு அப்பால்‌ பஞ்சமர்களாக, பட்டியலின மக்களாக பிறந்தது. குற்றம்‌! அடங்கி ஒடுங்கி அடிமைவேலை செய்து கொண்டிருந்தவர்கள்‌ விழிப்புற்று…

Read More

வேளச்சேரி ராட்சத பள்ளத்தில் மேலும் ஒரு தொழிலாளரின் சடலம் 4 நாட்களுக்குப் பின் மீட்பு:

சென்னை: சென்னை வேளச்சேரியில் கட்டுமான நிறுவனம் தோண்டிய ராட்சத பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த மற்றுமொரு தொழிலாளர் ஜெயசீலனின் சடலம் இன்று (வெள்ளி) மதியம் 2 மணியளவில் மீட்கப்பட்டது. சடலத்தை பெட்டியில் வைத்து பேரிடர் மீட்புக் குழுவினர் வெளியே கொண்டுவந்தனர். சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இன்று அதிகாலையில் நரேஷ் என்ற இளைஞரின் உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மீட்புக் குழுவில் ஈடுபட்ட நபர் ஒருவர் அளித்த பேட்டியில், ”பள்ளத்தில் மீட்புப் பணிகளுக்காக நாங்கள் வந்தபோது எங்களிடம்…

Read More

தனியார் வசம் மின்சாரம் தவிர்க்கப்பட வேண்டிய நடவடிக்கை:

பெ.சண்முகம்(தலைவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்)- தொடர்புக்கு: pstribal@gmail.com 2022 ஆகஸ்ட் 8ஆம் தேதி, மின்சாரச்சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக, உடனடியாக நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு இம்மசோதா அனுப்பப்பட்டுவிட்டது. ஆனால், அடுத்தடுத்து நடக்க உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில், ஏதேனும் ஒன்றில் இம்மசோதா சட்டமாக்கப்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை. சரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்ப்பதுஏன்? இந்தச் சட்டத்திருத்தத்தால் நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படுமா? கால் பதிக்கும் தனியார் நிறுவனங்கள்: மின்சார உற்பத்தியில்…

Read More

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்- ஜான் ரீடு

நவம்பர் 7 மானுட வரலாற்றில் மகத்தான நாள். மாபெரும் சோவியத் புரட்சி வெற்றியடைந்தது. பாட்டாளிகளின் கையில் ஆட்சியதிகாரம் வந்தது. முதலாளித்துவ பிற்போக்காளன் கெரன்ஸ்கியை செம்படை வீழ்த்தியது. உலகப் பந்தில் உழைப்பவர் வாழ்க்கையில் வெளிச்சக் கீற்று நுழைந்தது. மார்க்சிய தத்துவத்தை உருவாக்கிய மாமேதைகள் கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கெல்சுக்கு பெருமை சேர்த்தார்கள் ரஷ்யப் பாட்டாளிகள். தோழர் லெனின் மார்க்சியம் வெறும் வறட்டுச் சூத்திரம் அல்ல. நடைமுறைக்கு வழிகாட்டி என நிரூபித்தார். ரஷ்ய மண்ணில் நடந்த ஆயுதப் புரட்சியை கண்…

Read More

நவம்பர் 7 ரஷ்ய புரட்சி தினம் நினைவு கூர்வோம்:

“புரட்சி” என்ற வார்த்தை நம் காதுகளில் விழுந்தவுடன் நம் எண்ணத்தில் உடனே தோன்றுபவர்கள்; புரட்சித்தலைவர் எம்ஜிஆர். புரட்சித்தலைவி ஜெயலலிதா. புரட்சிக்கலைஞர் விஜயகாந்த். திரைத்துறையிலிருந்து அதிகார அரசியலுக்கு வந்த இவர்களுக்கு புரட்சியின் பொருள் கூட புரியாது. ஆனால்….. புரட்சித்தலைவன் என்ற சொல் உலகில் ஒரே ஒருவரைத்தான் குறிக்கும். அவர்தான் மேதை லெனின்! அந்த புரட்சி வென்ற நாள்தான் 1917 நவம்பர் 7 ஆம் நாள். இந்நாள் உலக கம்யூனிஸ்ட்களால் கொண்டாடப்படுகின்ற ஓர் ஒப்பற்ற நாள். புரட்சிக்கு முன்னால் ஜார்ஜ்…

Read More