
.ஆவடி வீராபுரம் அருகில் அமைந்துள்ள செலிபிரிட்டி ஃபேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நேற்று காலை முதல் தற்போது வரை தொடர்கிறது..
ஆலை மூடலுக்கு எதிராக பெண் தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு முறையான அறிவிப்பு எதுவும் தராமல் திடீரென இந்த கதவடைப்பை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். நிர்வாகம் தரப்பில் தாம்பரம் ஃமெப்ஸ் ல் செயல்பட்டு வரும் இதே நிறுவனத்திற்கு மாற விருப்பம் உள்ள தொழிலாளர்களுக்கு வேலை தருவதாக கூறப்படுகிறது .
தொழிலாளர்கள் ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தின் தொலைதூர கிராமங்களில் இருந்து வந்த பணிபுரிகிறார்கள் சுமார் 30,40 கிலோமீட்டர் தொலைவில் வருகிறார்கள் தாம்பரம் செல்ல வேண்டும் என்றால் இன்னும் கூடுதலாக 35 கிலோமீட்டர் ஆகும் எனவே நிர்வாகத்தின் அறிவிப்பு என்பது ஆட்குறைப்பு நடவடிக்கை என்பதை தெளிவாக காட்டுகிறது.
தங்களுக்கான பணிபலன்களை தொழிலாளர்கள் கோருகிறார்கள் இந்த குறைந்தபட்ச கோரிக்கைகளை கூட நிர்வாகம் ஏற்க மறுக்கிறது
*ஆறு மாத ஊதியம் , இந்தாண்டு வழங்க வேண்டிய போணஸ் தொகை போன்றவற்றை உடனடியாக வழங்கும் வேண்டும் என போராடி வருகிறார்கள்
.
ஏற்கனவே பணியில் இருந்து விலகிய இரண்டு ஆண்டுகள் மூன்றாண்டுகள் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இது வரை பணிபலன்கள் நிர்வாகம் வழங்கவில்லை அதனால் தங்களுக்கு உடனடியாக வழங்கும் வேண்டும் என்பது பெண் தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
Garments and Fashion Workers Union தற்போது இந்த தொழிலாளர்களின் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். உணவு ஏற்பாடுகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து வருகிறார்கள் தொழிலாளர்களுக்கு காலையில் உணவு கொண்டு செல்ல சில தடைகள் ஏற்பட்டது உள்ளூர் மக்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் தலையீடு காரணமாக தற்போது உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஊடகங்கள் பெரிதாக எதுவும் செய்தி வெளியிட்டதாக தெரியவில்லை Workers unity Tamil Labour News சில தொழிலாளர் சார்ந்த சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.