ஹூண்டாய் தொழிற்சாலையில் பணியிடத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்த திரு பூபதி என்ற தொழிலாளியின் வாரிசுக்கு வேலை கோரி, CITU தலைமையிலான HMIEU சங்கம் எதிர்ப்பு நடவடிக்கை எடுத்தது.
சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சட்டமன்ற தேர்தல் நேரத்தில் 78 பேருக்கு ஏன் தண்டனை வழங்க கூடாது என குறிப்பாணை தந்துள்ளது. அவர்களில் 10 பேரை ஏன் வேலை நீக்கம் செய்யக்கூடாது எனக் காரணம் கேட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு, தொழிலாளர் மத்தியில் எதிர்ப்பு எழக்கூடாது என்று அச்சுறுத்தும் வகையில் ஆலை வாயிலில் காவல் துறையை குவித்துள்ளது.
25 வருடங்களுக்கு மேல் பணிக்காலம் உள்ள அவர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் தண்டிப்பது போன்ற ஒரு அணுகுமுறையை ஹூண்டாய் நிர்வாகம் எடுத்துள்ளது. விரும்பிய சங்கம் வைத்து அந்த சங்கத்தில் தொடர விருப்பம் கொண்டிருந்தவர்களை தண்டிப்பது தொழிற்சங்க உணர்வை தண்டிப்பதாகாதா.?
CITU தலைவர் தோழர் இ.முத்துக்குமாரை தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு விடுமுறை நாட்களுக்கு முன் சிறை வைத்து இதுவரை பிணை வழங்காமல் காவல்துறை வழக்கு மேல் வழக்கு போடுகிறது.
ஆளும் பாஜகவுக்கு இஸ்லாமியர் வாக்குகள் ஒரு பொருட்டல்ல. அதேபோல் திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலில் தனக்கு தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் எந்த விதத்திலும் முக்கியமல்ல என்ற ஓர் அணுகுமுறையை எடுக்கலாமா? அத்தகைய அணுகுமுறை ஏற்கத்தக்கது அல்ல. அது ஜனநாயகத்தை மிதிக்கும் அணுகுமுறையாகும்.
திமுக அரசு ஹூண்டாய் தொழிலாளிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திரும்ப பெற வைக்க தலையிட வேண்டும், தோழர் இ.முத்துக்குமாரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், தொடர்புடைய வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என *ஒருமைப்பாடு மன்றம்* வலியுறுத்துகிறது.
*-ஒருமைப்பாடு மன்றம்,*
*தலைநகர் மண்டலம்.*