தனியார் வசம் மின்சாரம் தவிர்க்கப்பட வேண்டிய நடவடிக்கை:

பெ.சண்முகம்(தலைவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்)- தொடர்புக்கு: pstribal@gmail.com 2022 ஆகஸ்ட் 8ஆம் தேதி, மின்சாரச்சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக, உடனடியாக நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு இம்மசோதா அனுப்பப்பட்டுவிட்டது. ஆனால், அடுத்தடுத்து நடக்க உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில், ஏதேனும் ஒன்றில் இம்மசோதா சட்டமாக்கப்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை. சரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்ப்பதுஏன்? இந்தச் சட்டத்திருத்தத்தால் நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படுமா? கால் பதிக்கும் தனியார் நிறுவனங்கள்: மின்சார உற்பத்தியில்…

Read More

வேலையின்மைப் பிரச்சினை: வென்றெடுக்கும் வழிகள்:

மனித உரிமைகளில் முதன்மையானது உயிர் வாழும் உரிமை. உயிருடன் இருப்பது என்றில்லாமல், தன்மானத் துடன் உயிர் வாழ வேண்டும் என்பதுதான் இதன் பொருள். தன்மானத்துடன் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான இரண்டு அம்சங்கள் சுதந்திரமும் வாழ்வதற்கான ஆதார வளங்களும். ஆதார வளங்களான நிலங்கள் பெரும் பணக்கார விவசாயிகள், தொழிற்சாலை முதலாளிகள், அரசு ஆகியோரின் வசம் உள்ளன. உற்பத்திச் சாதனங்கள் உழைப்பவர்களின் கையில் இல்லை. இந்த நிலையில், உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடைப்பதில்லை. மனிதர்கள் வாழ வேண்டும் என்றால் உணவு, உடை,…

Read More