
பாட்டாளி வர்க்கத்தின் அறிவுப் பொக்கிஷம் மூலதனம் 1867 செப்டம்பர் 14ந்தேதி அதன் முதல் தொகுதி வெளியிடப்பட்டது:
இந்த செப்டம்பர் மாதத்தில் தான் கார்ல் மார்க்ஸ் தனது மூலதனம் புத்தகத்தின் முதல் தொகுதியை வெளியிட்டார். அவர் எழுதிய ஏராளமான அரசியல் பொருளாதார கட்டுரைகள் மூலதனமாயிற்று. உலகில், அதுவரை இது போன்ற புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், அவை ஒருபக்க சார்பானவை. முதலாளித்துவம் நீடித்திருக்க எழுதப்பட்டவை. மாமேதை கார்ல் மார்க்ஸ் மட்டுமே பாட்டாளி வர்க்க விடுதலையை அறிவியல் கண்ணோட்டத்தில் கண்டு, அதன் உழைப்பை எப்படியெல்லாம் முதலாளித்துவம் உறிஞ்சுகிறது என்பதை உலகுக்கு முதன்முதலில் விளக்கிச் சொன்னார். அதுவே மூலதனம் ஆயிற்று….