அய்க்கிய அமெரிக்காவில்‌ தொழிலாளர்‌ திருவிழா:

கட்டுரையாளர்: செம்பா. கம்யூனிஸ்ட்‌ இதழ்‌ அக்‌ – 2023

2008 பொருளாதார நெருக்கடிக்குப்‌ பிறகு அய்க்கிய
அமெரிக்க தொழிலாளர்‌ ஊதியம்‌ 19% சரிந்துள்ளதாக அய்க்கிய
அமெரிக்காவின்‌ பொருளாதார கொள்கை நிறுவனம்‌
சொல்கிறது.

அய்க்கிய அமெரிக்க சராசரி தொழிலாளி யின்‌ ஊதியம்‌
அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது
குறைந்துவிட்டது என்று அய்க்கிய அமெரிக்க செனட்‌
உறுப்பினரும் தொழிலாளர்‌ உரிமை செயல்பாட்டாளரு மான
பெர்னி சான்டர்ஸ்‌ சொல்கிறார்‌.

அய்க்கிய அமெரிக்க வளமையின்‌ அடை யாளங்களாக
கருதப்படுகிற கார்‌ உற்பத்தி நிறுவனங்களான ஃபோர்ட்‌,
ஜெனரல்‌ மோட்‌ டார்ஸ்‌ மற்றும்‌ கிரிஸ்லர்‌ (இன்று
ஸ்டெல்லான்‌ டிஸ்‌) ஆகிய மூன்று நிறுவனங்களுமாகச்‌
சேர்ந்து, 2013 – 2022 காலகட்டத்தில்‌ மட்டும்‌, 250 பில்லியன்‌
டாலர்‌, ரூ.21,25,000 கோடி, லாபம்‌ ஈட்டியுள்ளன.

ஜெனரல்‌ மோட்டார்ஸ்‌ நிறுவனத்தின்‌ தலைமை நிர்வாக
அதிகாரி மேரி பாரா 2022ல்‌ 29 மில்லியன்‌ டாலர்‌
(ரூ.246,50,00,000) ஊதியம்‌ பெற்றார்‌. இது நிறுவனத்தின்‌ சராசரி
ஊதியமான 80,034 டாலர்‌ (ரூ.602,890) போல்‌ 362 மடங்கு
கூடுதல்‌.

போர்ட்‌ நிறுவனத்தின்‌ தலைமை நிர்வாக அதிகாரி ஜிம்‌
பர்லே 2022ல்‌ 21 மில்லியன்‌ டாலர்‌ ஸரூ.17850,00,000) ஊதியம்‌
பெற்றார்‌. இது நிறுவனத்தின்‌ சராசரி ஊதியமான 74,681 டாலர்‌
(ரூ.63,48,735) போல்‌ 281 மடங்கு கூடுதல்‌.

ஸ்டெல்லான்டிஸ்‌ நிறுவனத்தின்‌ தலைமை நிர்வாக
அதிகாரி கார்லஸ்‌ டவரஸ்‌ 2022ல்‌ 24.8 மில்லியன்‌ டாலர்‌(ரூ.210,80,00,000) ஊதியம்‌ பெற்றார்‌. இது நிறுவனத்தின்‌ சராசரி
ஊதியமான 67,789 டாலர்‌ (ரூ.5702,065) போல 3 மடங்கு
கூடுதல்‌.

2008 பொருளாதார நெருக்கடி சமயத்தில்‌ இந்த மூன்று
நிறுவனங்களின்‌ தொழிலாளர்களும்‌ நிறுவனங்கள்‌ கேட்டுக்‌
கொண்டதால்‌ தங்கள்‌ ஊதியத்தை, பிற சலுகைகளை
குறைத்துக்‌ கொண்டனர்‌. நிலைமை மாறிய பின்னரும்‌ லாபம்‌
கொட்டோகொட்டு என்று கொட்டுகிற போதிலும்‌
தொழிலாளர்கள்‌ விட்டுக்‌ கொடுத்தது அவர்களுக்கு திருப்பித்‌
தரப்படவில்லை.

இதற்கு மேல்‌ ஏன்‌ பொறுமை காக்க வேண்டும்‌ என்று இந்த மூன்று
நிறுவனங்களின்‌ தொழிலாளர்களும்‌ வேலை நிறுத்தப்‌ போராட்டத்தில்‌
இறங்கியிருக்கிறார்கள்‌. செப்டம்பர்‌ 14 அன்று இரவு 11.59 மணிக்கு
தற்போது அமலில்‌ உள்ள ஒப்பந்தம்‌ முடிவுக்கு வந்தவுடன்‌, 12 மணி
முதல்‌ வேலை நிறுத்தத்தை துவக்கியுள்ளார்கள்‌.

ஒன்றரை லட்சம்‌ தொழிலாளர்கள்‌ கொண்ட இந்த மூன்று பகாசுர
நிறுவனங்களின்‌ தொழிலாளர்களும்‌ ஒரே நேரத்தில்‌ இது வரை வேலை
நிறுத்தம்‌ செய்ததில்லை என்பதால்‌, பல தலைமுறைகளில்‌ நடந்த
வேலை நிறுத்தப்‌ போராட்டங்களில்‌, இது ஆகப்பெரிய வேலை நிறுத்தம்‌
என்று சொல்லப்படுகிறது.

தொழிலாளர்‌ வர்க்கத்துக்கும்‌ கார்ப்பரேட்‌ பெருந்தொழில்குழும)
பேராசைக்கும்‌ இடையில்‌ நடக்கும்‌ போர்‌ என்று வேலை நிறுத்தத்தை
வழிநடத்துகிற யுனைட்டட்‌ ஆட்டோ ஒர்க்கர்ஸ்‌ சங்கத்தின்‌ தலைவர்‌
ஷான்‌ ஃபெய்ன்‌ சொல்கிறார்‌.

கடந்த நான்காண்டுகளில்‌ தலைமை நிர்வாக அதிகாரிகளின்‌
ஊதியம்‌ 40% உயர்ந்துள்ளதால்‌, இந்த மூன்று நிறுவனங்களிலும்‌ உள்ள
1,50,000 தொழிலாளர்களுக்கு தொழிலாளர்களின்‌ ஊதியமும்‌ 40%
து வேண்டும்‌ என்று யுனைட்டட்‌ ஆட்டோ ஒர்க்கர்ஸ்‌ சங்கம்‌ கேட்கிறது.

40% ஊதிய உயர்வு, நிறுவனத்தில்‌ இருக்கும்‌ இரண்டடுக்கு ஊதிய முறை
ஒழிப்பு (புதிதாக பணிக்கமர்த்தப்படும் தொழிலாளிக்கு ஒரே வேலைக்கு குறைந்த சம்பளம்) வாரத்தில் 32 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகள்‌ மீது இந்த வேலை நிறுத்தப்‌ போராட்டம்‌
துவக்கப்பட்டது.

உற்பத்திக்கு பெரிய பாதிப்பு ஏற்படாமல்‌ திட்டமிட்டு வேலை
நிறுத்தத்தை நடத்துகிறார்கள்‌. வேலை நிறுத்தத்தில்‌ ஈடுபடும்‌
தொழிலாளர்களுக்கு சங்கத்தில்‌ இருந்து வாரமொன்றுக்கு 500 டாலர்
(ரூ.42,500) தரப்படுகிறது.

வேலை நிறுத்தம்‌ துவங்கிய சில மணி நேரத்திலேயே போராடும்‌
தொழிலாளர்கள்‌ மத்தியில்‌ பேசிய அய்க்கிய அமெரிக்க அதிபர்‌ ஜோ
பிடன்‌, கார்ப்பரேட்‌ லாபம்‌ தொழிலாளர்களுடன்‌ பகிர்ந்து கொள்ளப்பட
வேண்டும்‌ என்று சொல்கிறார்‌.

தொழிலாளர்களின்‌ வேலை நிறுத்தத்தால்‌ ஆடிப்போயிருக்கும்‌
நிறுவனங்கள்‌, இந்த வேலை நிறுத்தத்தை ‘போர்‌ என்றெல்லாம்‌
சொல்லக்‌ கூடாது, நாமெல்லாம்‌ நண்பர்கள் , தொழிலாளர்‌
கோரிக்கைகளை நிறைவேற்றினால்‌, : சந்தையில்‌ போட்டி போட
முடியாது, சங்கமாக்கப்படாத தொழிலாளர்கள்‌ உள்ள நிறுவனங்களுடன்‌
போட்டி போட முடியாது என்று கதறிப்‌ பார்க்கின்றன.

இந்த ஆண்டில்‌ இது வரை அய்க்கிய அமெரிக்க தொழிலாளர்கள்‌
வேலை நிறுத்தங்களால்‌ 70 லட்சம்‌ வேலை நாட்கள்‌ இழப்பு
ஏற்பட்டுள்ளது என்றும்‌ கடந்த இருபது ஆண்டுகளில்‌ இதுவே மிகவும்‌
கூடுதல்‌ என்றும்‌ தொழிலாளர்‌ துறை சொல்கிறது. செப்டம்பரில்‌
நடக்கும்‌ கார்‌ உற்பத்தி நிறுவனத்‌ தொழிலாளர்‌ வேலை நிறுத்தத்தால்‌
ஏற்பட்டுள்ள வேலை நாட்கள்‌ இழப்பு இதில்‌ சேர்க்கப்படவில்லை);. கார்‌
உற்பத்தி நிறுவனத்‌ தொழிலாளர்‌ வேலை நிறுத்தத்துக்கு முன்‌ 2023
ஜுலையில்‌ ஹாலிவுட்‌ நடிகர்கள்‌ நடத்திய வேலை நிறுத்தத்தில்‌ ஊதிய
உயர்வு உள்ளிட்ட அவர்களது கோரிக்கைகள்‌ நிறைவேற்றப்பட்டன.
நடிகர்கள்‌ நடித்த படங்கள்‌, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‌ மறுஒளிபரப்பு
செய்யப்படும்போது அவர்களுக்கும்‌ ஒரு தொகை தரப்பட வேண்டும்‌
என்றும்‌ அவர்கள்‌ கோரி அந்த கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.ஹாலிவுட் எழுத்தாளர்கள் மே மாதம் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டமும் வெற்றிகரமாக நிறைவுற்றது. அவர்களுக்கு முன்பு இந்த ஆண்டின் துவக்கத்திலேயே விமான ஊழியர்கள், விருந்தோம்பல் துறை ஊழியர்கள், மருத்துவ துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் என அய்க்கிய அமெரிக்காவில் வேலை நிறுத்தம் அலை வீசியது. இந்த வேலை நிறுத்தங்கள் அனைத்துமே தொழிலாளர்களுக்கு சாதகமான விளைவுகள் தந்தன. இப்போது கார்‌ உற்பத்தித்‌ தொழிலாளர்‌ வேலை நிறுத்தப்‌
போராட்டத்திலும்‌ பேச்சுவார்த்தைகளில்‌ முன்னேற்றம்‌ காணப்படுவதாக
சங்கம்‌ சொல்லியிருக்கிறது. கண்ணெதிரே தெரியும்‌ செல்வ
ஏற்றத்தாழ்வுகளை ஒரு அளவுக்கு மேல்‌ தொழிலாளர்கள்‌ பொறுத்துக்‌
கொள்ள தயாராக இல்லை.

முதலாளித்துவத்துக்கு தாங்கும்‌ திறன்‌ இருக்கலாம்‌. ஆனால்‌,
கூலியுழைப்புக்கும்‌ மூலதனத்துக்கும்‌ இடையிலான முரண்பாட்டை
முதலாளித்துவத்தால்‌ தவிர்த்துவிட முடியாது.

பின்செய்தி: வோல்வோவின்‌ மேக்‌ ட்ரக்‌ நிறுவனத்தின்‌ 4000
தொழிலாளர்கள்‌ யுனைட்டட்‌ ஆட்டோ ஒர்க்கர்ஸ்‌ தலைமையில்‌
வேலை நிறுத்தம்‌ அறிவித்திருந்த பின்னணியில்‌ அக்டோபர்‌ 1 அன்று
புதிய ஒப்பந்தம்‌ போடப்பட்டுள்ளது. மேக்‌ ட்ரக்‌ நிறுவனத்‌
தொழிலாளர்களுடன்‌ போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம்‌ யுனைட்டட்‌
ஆட்டோ ஒர்க்கர்ஸ்‌ பரிசீலனைக்குப்‌ பிறகு முழுமையாக
ஏற்றுக்கொள்ளப்படும்‌.

தமிழ்நாட்டு ஆட்சியாளர்‌ கவனத்துக்கு:

தமிழ்நாட்டிலும்‌ ஒரு
டெட்ராய்ட்‌ உள்ளது. உள்ளே கனன்று கொண்டுதான்‌ இருக்கிறது.
எப்போது வேண்டுமானாலும்‌ அது வெடிக்கக்‌ கூடும்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *