வெண்மணி தீயினும் கொடியவர் தீயிலிட்டாரே!……(தோழர் தியாகு )..

அந்தக்‌ கொடுமை நிகழ்ந்து அரை நூற்றாண்டு ஆயிற்று. 1968 திசம்பர்‌ 25 கிறிஸ்துமஸ்‌ நாளில்‌ கீழ வெண்மணியில்‌ பட்டியலின மக்கள்‌.வாழும்‌ சேரியின்‌ கடைக்கோடியிலிருந்த இராமையாலின்‌ குடிசையில்‌ 44 உயிர்கள்‌ உயிரோடு எரிந்து – உண்மையில்‌ எரிக்கப்பட்டு — சாம்பலாயின. அது விபத்தன்று, படுகொலை! இவ்வளவு கொடிய தண்டனை பெறுவதற்கு அவர்கள்‌ செய்த குற்றம்‌? ஒரு குற்றமில்லை, பல குற்றங்கள்‌! நால்வர்ணத்துக்கு அப்பால்‌ பஞ்சமர்களாக, பட்டியலின மக்களாக பிறந்தது. குற்றம்‌! அடங்கி ஒடுங்கி அடிமைவேலை செய்து கொண்டிருந்தவர்கள்‌ விழிப்புற்று…

Read More

வேளச்சேரி ராட்சத பள்ளத்தில் மேலும் ஒரு தொழிலாளரின் சடலம் 4 நாட்களுக்குப் பின் மீட்பு:

சென்னை: சென்னை வேளச்சேரியில் கட்டுமான நிறுவனம் தோண்டிய ராட்சத பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த மற்றுமொரு தொழிலாளர் ஜெயசீலனின் சடலம் இன்று (வெள்ளி) மதியம் 2 மணியளவில் மீட்கப்பட்டது. சடலத்தை பெட்டியில் வைத்து பேரிடர் மீட்புக் குழுவினர் வெளியே கொண்டுவந்தனர். சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இன்று அதிகாலையில் நரேஷ் என்ற இளைஞரின் உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மீட்புக் குழுவில் ஈடுபட்ட நபர் ஒருவர் அளித்த பேட்டியில், ”பள்ளத்தில் மீட்புப் பணிகளுக்காக நாங்கள் வந்தபோது எங்களிடம்…

Read More

தனியார் வசம் மின்சாரம் தவிர்க்கப்பட வேண்டிய நடவடிக்கை:

பெ.சண்முகம்(தலைவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்)- தொடர்புக்கு: pstribal@gmail.com 2022 ஆகஸ்ட் 8ஆம் தேதி, மின்சாரச்சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக, உடனடியாக நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு இம்மசோதா அனுப்பப்பட்டுவிட்டது. ஆனால், அடுத்தடுத்து நடக்க உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில், ஏதேனும் ஒன்றில் இம்மசோதா சட்டமாக்கப்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை. சரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்ப்பதுஏன்? இந்தச் சட்டத்திருத்தத்தால் நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படுமா? கால் பதிக்கும் தனியார் நிறுவனங்கள்: மின்சார உற்பத்தியில்…

Read More

வேலையின்மைப் பிரச்சினை: வென்றெடுக்கும் வழிகள்:

மனித உரிமைகளில் முதன்மையானது உயிர் வாழும் உரிமை. உயிருடன் இருப்பது என்றில்லாமல், தன்மானத் துடன் உயிர் வாழ வேண்டும் என்பதுதான் இதன் பொருள். தன்மானத்துடன் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான இரண்டு அம்சங்கள் சுதந்திரமும் வாழ்வதற்கான ஆதார வளங்களும். ஆதார வளங்களான நிலங்கள் பெரும் பணக்கார விவசாயிகள், தொழிற்சாலை முதலாளிகள், அரசு ஆகியோரின் வசம் உள்ளன. உற்பத்திச் சாதனங்கள் உழைப்பவர்களின் கையில் இல்லை. இந்த நிலையில், உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடைப்பதில்லை. மனிதர்கள் வாழ வேண்டும் என்றால் உணவு, உடை,…

Read More