மேதினத்தின் வரலாற்று பின்னணி: தோழர் சிலம்பரசன் சே

மே தினம், உழைப்பாளர் தினம் என்று அடையாளப்படுத்தப்படும் இந்த நாள் தோன்றியதன் வரலாற்று பின்னணி என்பது மிக முக்கியமானது. விவசாய உற்பத்தியில் இருந்து முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு சமூகம் மாறியவுடன் மிக வேகமாக சமூக மாற்றம் நடைபெற்றது. விவசாய உற்பத்தியில் நிலங்களோடு பிணைக்கப்பட்டு நிலப்பிரபு கட்டுப்பாட்டில் வாழ்ந்த நிலைமை மாறி ஆலை முதலாளிகளின் கட்டு பாட்டில் வாழும் நிலைக்கு பெரும்பான்மை மக்கள் தள்ளப்பட்டார்கள் இதனால் விவசாய உற்பத்தி முறையில் பிரிந்து வாழ்ந்து வந்த மக்கள் ஆலையில் வேலை…

Read More

லெனின் தொழிலாளி வர்க்கத்தின் ஆசிரியராகவும் நண்பராகவும் இருந்தார்:

நினைவுகூருதல் மற்றும் உத்வேகம் பெறுதல்… உழைக்கும் வர்க்கத்தின் மீதான கொடூரமான தாக்குதல்களின் இக்காலத்தில், தொழிலாளர் வர்க்கத்தின் மாபெரும் தலைவரும், ஆசிரியரும், நண்பரும், உலகின் முதல் வெற்றிகரமான தொழிலாளர் புரட்சியின் தலைவருமான லெனினை நினைவு கூர்வது இன்று மிகவும் பொருத்தமானது. சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையின் தளைகளிலிருந்து விடுபட்டு உழைக்கும் மக்கள் எவ்வளவு அற்புதங்களைச் செய்ய முடியும் என்பதை உலகுக்குக் காட்டிய சோவியத் யூனியனில் முதல் சோசலிச அரசு லெனின் தலைமையில் நிறுவப்பட்டது. விளாடிமிர் இலிச் லெனின் 1870 ஆம்…

Read More

ஜனவரி 21 தோழர் லெனின் நினைவு நாள்:

ஜார் மன்னனும் நிலபிரபுத்துவமும் ரஷ்ய மக்களை சுரண்டிக்கொண்டிருந்த வேளையில், அதை வீழ்த்த போராடிய புரட்சிகர குழுவின் போராளியான தனது அண்ணன் அலெக்சாண்டர் கொலையுண்ட பின், அவர் வழியில் புறப்பட்டு, மக்கள் புரட்சி மூலம் ஜார் கொடுங்கோல் ஆட்சிக்கு 1917 ல் முடிவுரை எழுதிய புரட்சித் தலைவன்தான்….. 1870 ஏப்ரல் 22.ல் பிறந்த, சட்டம் பயின்ற மார்க்ஸ்- எங்கல்ஸ் மாணவன் தோழர் லெனின். உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு ஒன்று அமைக்கப்பட்டது. ரஷ்யா சோசலிச நாடு என…

Read More

பற்றி எரிந்த வர்க்கப் போராட்டம் !***கீழ்வெண்மணி போராட்ட வரலாறு:

உழைப்புக்கு ஏற்ற கூலி வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலாக விவசாயத் தொழிலாளிகள் 1967-இல் முன்வைத்தனர். அதாவது இதுவரையில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாள் கூலியாகிய 1படி நெல்லுடன் மேலும் ஒருபடி நெல் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையே அவை. ஆனால் பல மிராசுதாரர்கள் விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தனர். நமக்கு கீழே கைகட்டி வாய் பொத்தி வேலை செய்தவர்கள் இன்று நிமிர்ந்து கேள்வி கேட்க ஆரம்பித்தது ஆதிக்க வர்க்கத்தால் ஜீரணிக்க முடியவில்லை. விவசாய தொழிலாளர் சங்கம்…

Read More

வெண்மணி தீயினும் கொடியவர் தீயிலிட்டாரே!……(தோழர் தியாகு )..

அந்தக்‌ கொடுமை நிகழ்ந்து அரை நூற்றாண்டு ஆயிற்று. 1968 திசம்பர்‌ 25 கிறிஸ்துமஸ்‌ நாளில்‌ கீழ வெண்மணியில்‌ பட்டியலின மக்கள்‌.வாழும்‌ சேரியின்‌ கடைக்கோடியிலிருந்த இராமையாலின்‌ குடிசையில்‌ 44 உயிர்கள்‌ உயிரோடு எரிந்து – உண்மையில்‌ எரிக்கப்பட்டு — சாம்பலாயின. அது விபத்தன்று, படுகொலை! இவ்வளவு கொடிய தண்டனை பெறுவதற்கு அவர்கள்‌ செய்த குற்றம்‌? ஒரு குற்றமில்லை, பல குற்றங்கள்‌! நால்வர்ணத்துக்கு அப்பால்‌ பஞ்சமர்களாக, பட்டியலின மக்களாக பிறந்தது. குற்றம்‌! அடங்கி ஒடுங்கி அடிமைவேலை செய்து கொண்டிருந்தவர்கள்‌ விழிப்புற்று…

Read More

நவம்பர் 7 ரஷ்ய புரட்சி தினம் நினைவு கூர்வோம்:

“புரட்சி” என்ற வார்த்தை நம் காதுகளில் விழுந்தவுடன் நம் எண்ணத்தில் உடனே தோன்றுபவர்கள்; புரட்சித்தலைவர் எம்ஜிஆர். புரட்சித்தலைவி ஜெயலலிதா. புரட்சிக்கலைஞர் விஜயகாந்த். திரைத்துறையிலிருந்து அதிகார அரசியலுக்கு வந்த இவர்களுக்கு புரட்சியின் பொருள் கூட புரியாது. ஆனால்….. புரட்சித்தலைவன் என்ற சொல் உலகில் ஒரே ஒருவரைத்தான் குறிக்கும். அவர்தான் மேதை லெனின்! அந்த புரட்சி வென்ற நாள்தான் 1917 நவம்பர் 7 ஆம் நாள். இந்நாள் உலக கம்யூனிஸ்ட்களால் கொண்டாடப்படுகின்ற ஓர் ஒப்பற்ற நாள். புரட்சிக்கு முன்னால் ஜார்ஜ்…

Read More

இந்தியத் தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -9

நிலப்பிரபுத்துவத்தின்‌ அழிவின்‌ மீது முதலாளித்துவத்தின்‌ வளர்ச்சி என்ற செயல்முறை ஐரோப்பாவில்‌ நடைபெற்றதைப்‌ போல இந்தியாவில்‌ காண முடியாது. ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள்‌ இந்தியாவின்‌ புராதனப்‌ பொருளாதாரத்தை உடைத்து நொறுக்கிய போதிலும்‌, நவீன முதலாளித்துவப்‌ பொருளாதாரத்திற்கான சக்திகளைக்‌ கட்டவிழ்த்து விடுவதன்‌ மூலம்‌ அதனிடத்தில்‌ அதனை அமர்த்துவதற்கு அவர்கள்‌ முயற்சிக்கவில்லை. எனவே இந்தியாவில்‌ முதலாளித்துவ பொருளாதாரத்தின்‌ வளர்ச்சி என்பது வேறுபட்டதொரு பாதையைப்‌ பின்பற்றியது. அந்தப்‌ பாதையானது வித்தியாசமான முரண்பாடுகள்‌, தடைகள்‌ மற்றும்‌ இந்திய மக்களுக்கு சொல்லவொண்ணாத துயரங்கள்‌ நிறைந்ததாகவே இருந்தது. இவ்வாறு…

Read More

இந்தியத் தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -8

இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை இங்கிலாந்திற்கு அதன் தொழிற்புரட்சியை மேம்படுத்துவதற்காக ஏற்றுமதி செய்ததோடு மட்டுமின்றி ,இங்கிலாந்தில் தொழில் உற்பத்தி பொருட்களை இந்தியாவில் விற்பதற்கான அவசியத்தை இங்கிலாந்து முதலாளிகள் உணரத் தலைப்பட்டனர். வேறு வார்தைகளில் கூறுவதானால் வரியேதுமற்ற சுதந்திரமான வர்த்தகம் என கூறலாம். 1757ஆம் ஆண்டின் பிளாஸி யுத்தத்திலிருந்து இந்தியாவுடனான வர்த்தகத்தில் கிழக்கிந்திய கம்பெனி கொண்டிருந்த ஏகபோக உரிமை என்பது ஒட்டுமொத்த பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கத்தின் சுதந்திர வர்க்க நலனை பாதுகாப்பதாக அமையவில்லை .புதிய சந்தைகளை தேட வேண்டிய கட்டாயத்தில்…

Read More

கீழத்தஞ்சை விவசாயிகள் எழுச்சியின் முன்னோடி புரட்சியாளர் பிசீனிவாசராவை நினைவு கூர்வோம் !

நிலப்பிரபுக்கள், கோவில்கள் , மடங்கள் ஆகியவற்றின் சர்வ ஆதிக்கம், சவுக்கடி & சாணிப்பால் அடக்குமுறை கீழ் வாழ்ந்த பண்ணையடிமைகள், உழைப்புக்கு ஏற்ற நியாயமான பங்கும், உரிமைகளும் இல்லாத குத்தகை விவசாயிகள் …எனத் தஞ்சை மண்ணில் நிலப்பிரபுத்துவம் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில், ஒடுக்கப்பட்ட விவசாய சமூகத்தின் விடுதலைக்காக பணியாற்றிய உன்னதமான கம்யூனிஸ்ட்களில் சிவப்பு நட்சத்திரமாக திகழ்கிறார், BSR என அழைக்கப்பட்ட தோழர். பி.சீனிவாசராவ். 1961 செப்டம்பர் 30 அதிகாலை சுமார் 5 மணியளவில், தஞ்சாவூரில் தோழர்கள் உடன் இருக்க,…

Read More

இந்தியத் தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -7

ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் புதிய நிலப்பிரபுத்துவ அமைப்பு: காலனியாட்சியும்,பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் சுரண்டலும் இந்தப் பாரம்பரியமான மற்றும் சுயதேவையை பூர்த்தி செய்து கொள்ளும் சமூகங்களின் உற்பத்தி முறையினை முற்றிலுமாக நிர்மூலம் செய்தன. “18ஆம் நூற்றாண்டு முழுவதிலும் இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட செல்வங்கள் அனைத்துமே பெருமளவிற்கு அந்த நாட்டை நேரடியாகச் சுரண்டுவதால் பெற்றதே தவிர ,வணிகத்தினால் பெற்ற செல்வம் என்பது ஒப்பளவில் மிகக் குறைவானதே ஆகும். அங்கு கிடைத்த மாபெரும் செல்வங்கள் அனைத்தும் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்தியாவின்…

Read More