வாச்சாத்தி அரச பயங்கரவாத வன்கொடுமை வழக்கின் இறுதி தீர்ப்பு…

இன்று 1992 ஆண்டு தர்மபுரி மாவட்டம் வாசத்தில் கிராமத்தில் சந்தன கடத்தல் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் வனத்துறை, வருவாய் மற்றும் காவல்துறையினர் நடத்திய பாலியல் அத்துமீறல், தாக்குதல் மற்றும் பொய் வழக்கு என நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் சி.பி.எம் மலைவாழ் மக்கள் சங்கம் மூலம் தொடர் இயக்கமானது. உச்சநீதிமன்றம் வரை வழக்கு கொண்டு செல்லப்பட்டு மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு பின் தண்டனை வழங்கியது மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சிறப்பு நீதிமன்றம். அதன் மேல் முறையீடு வழக்கு இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பாதிப்புக்கு தொடர்ந்து போராடுவதே சனநாயக சமூகத்தில் மிக முக்கியமான நம்பிக்கை தரும் நிகழ்வு. நீதியை பெற நெடிய பயணங்கள் எளிய மக்கள் தொடரவேண்டும்.ஆனால் அதுவே இந்த அமைப்பை உயிர்ப்போடு வைத்துள்ளது. பல சமயங்களில் களப்பணியில் இடம் மக்களே ஆர்வலர்களை உறுதி படுத்தி அடுத்த கூட்டங்களுக்கு பயணிக்க உறுதி தருபவர்கள். இந்த அமைப்பின் மீது எளிய மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை பலமானது.

1992 ஆண்டு வீரப்பன் தேடுதல் வேட்டையில் தமிழகம் மற்றும் கர்நாடகா பகுதிகளில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச வன்முறைக்கு வாசத்தில் கிராமம் சிறிய உதாரணம். இதே காலகட்டத்தில் கோயமுத்தூர் அருகேயுள்ள சின்னாம்பதி பழங்குடி கிராமத்தில் பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடந்தது. சேலம், ஈரோடு மலையோர கிராமங்களில் பெரும் அத்துமீறல் நடந்தது.

இவ் வழக்கு சிறிய நீதியை நோக்கி முன்னேறி உள்ளது. தவறு செய்தவர்கள் தண்டிக்க பட்டனர். ஆனால் நீதி கிடைக்காது பெரும் எண்ணிக்கையில் பழங்குடி மற்றும் கிராம மக்கள் வெளியே நிற்கின்றனர்.
நீதி வழங்கப்படாமல் அமைதி இல்லை.
கடந்த காலங்களில் நடந்த அத்துமீறல் நீதிக்கான போராட்டத்தில் இருந்து காவல்துறையினர் எந்த பாடமும் கற்கவில்லை. அவர்கள் சட்டத்தையும், நீதியையும் வளைப்பது எங்கனம் என்பதில் தொடர் ஆய்வில் உள்ளார்கள்.

இந்த சமூகத்தில் நீதிக்கான தொடர் போராட்டம் மற்றும் அவர்களுக்கு ஆதரவான குரல்களுக்கு தோழமையை பகிர்தல் சரியாக இருக்கும்.

– முகநூல் பதிவு
(பால முருகன் “சோளகர் தொட்டி” நாவலின் ஆசிரியர் வழக்கறிஞர்)

தருமபுரி வாச்சாத்தியில் 1992 நடந்த வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு 2011 ஆம் ஆண்டு செப்29 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.தண்டனை பெற்றவர்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு மீது இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது அதில் தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிசெய்தது.தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

1.குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் ,உயிருடன் இல்லாத 54பேரை தவிர்த்து 215 குற்றவாளிகள் என்ற தருமபுரி நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்கிறது.

2.பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18பேருக்கு உடனடியாக 10லட்சம் வழங்க வேண்டும்

3.அப்போதைய எஸ்பி,மாவட்ட ஆட்சியர்,வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

4.குற்றவாளிகளிடம் 5 லட்சம் வசூலித்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க வேண்டும்.

5. பாதிக்கப்பட்ட அல்லது அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *