
இந்தியத் தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -9
நிலப்பிரபுத்துவத்தின் அழிவின் மீது முதலாளித்துவத்தின் வளர்ச்சி என்ற செயல்முறை ஐரோப்பாவில் நடைபெற்றதைப் போல இந்தியாவில் காண முடியாது. ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் இந்தியாவின் புராதனப் பொருளாதாரத்தை உடைத்து நொறுக்கிய போதிலும், நவீன முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கான சக்திகளைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் அதனிடத்தில் அதனை அமர்த்துவதற்கு அவர்கள் முயற்சிக்கவில்லை. எனவே இந்தியாவில் முதலாளித்துவ பொருளாதாரத்தின் வளர்ச்சி என்பது வேறுபட்டதொரு பாதையைப் பின்பற்றியது. அந்தப் பாதையானது வித்தியாசமான முரண்பாடுகள், தடைகள் மற்றும் இந்திய மக்களுக்கு சொல்லவொண்ணாத துயரங்கள் நிறைந்ததாகவே இருந்தது. இவ்வாறு…