ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிலை மற்றும் அவர்களின் உரிமைகள்:

ஒப்பந்த தொழிலாளர் முறை என்பது எல்லா தொழிற்சாலைகளிலும் அது தனியார் துறையாக இருந்தாலும் சரி மாநில ,ஒன்றிய அரசுகளின் துறையாக இருந்தாலும் சரி தொடர்ச்சியான பணிகள் அனைத்திலும் பரவி இருகிறது.இந்த முறை 1860 ஆம் ஆண்டு தொடங்கினாலும் 1990 ல் இந்தியாவில் உலகமயம் தாராளமய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்ட பிறகே வலுபெற தொடங்கியது.

சோவியத் யூனியன் வளர்ச்சிக்கு பிறகு உலகம் முழுவதும் மக்கள் நல திட்டங்களை அறிவிக்க வேண்டிய கட்டாயம் முதலாளித்துவ நாடுகளுக்கு நிர்பந்தம் ஏற்பட்டது இப்பின்னணியில் தொழிற்புரட்சி ஏற்பட்ட பின்னால் தொழிலாளர்களை சுரண்டும் கோர வடிவங்களுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றன எட்டுமணிநேர வேலை ,சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் உட்பட பல உரிமைகள் தொழிலாளர் வர்க்கத்துக்கு கிடைத்தது. சுரண்டல் கொள்கைகளுக்கு மாற்றான மக்கள் நலக் கொள்கையை கொண்டுவருவதற்கு தொழிலாளர் வர்க்கம் முயன்று கொண்டிருந்த பின்னணியில் சோவியத்துக்கு பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் முதலாளித்துவம் தனது லாபத்தை அதிகரித்துக்கொள்ள கொண்டு வந்தே ஒப்பந்த தொழிலாளர் முறையாகும்.எந்த நேரம் வேண்டுமானாலும் வேலையை பறித்து வீட்டுக்கு அனுப்பலாம் என்ற நிலை.

ஒப்பந்த தொழிலாளி முறையை ஒழுங்குபடுத்திட இயற்றப்பட்டதுதான் ஒப்பந்த தொழிலாளர் ஒழிப்பு மற்றும் ஒழுங்காற்று சட்டம்1970. இந்தியாவில் தங்குதடையற்ற மூலதனங்களை குவிப்பதற்கு தொழிலாளர் சட்டங்களில் நெகிழ்வாக இருக்க வேண்டும் என ஆளும்வர்க்கம் நிபந்தனை விதிக்கின்றன அதற்கு ஏற்றார் போல அரசுகள் செயல்படுகின்றன.
ஒரு பணியில் ஒப்பந்த தொழிலாளர்முறை என்பது தொடர்ச்சியாக இருக்குமானால் அதை உறுதி செய்ய ஒப்பந்த தொழிலாளர் ஆலோசனைக்குழு அரசினால் அமைக்கப்பட வேண்டும் என சட்டத்தில் உள்ளது.

அக்குழுவில் முதலாளி தரப்பிலும் தொழிற்சங்க தரப்பிலும் ,அரசு தரப்பிலும் பிரதிநிதிகள் இருப்பார்கள். இக்குழு ஆய்வு செய்து தொடர்ச்சியான பணிதான் என்பதை உறுதி செய்த பின்னர் அரசுக்கு ஆணையாக வெளியிட வேண்டுமென்று அனுப்புவார்கள் அந்த பரிந்துரையை ஏற்று அரசு ஒப்பந்த தொழிலாளர் முறை மூலம் தொழிலாளர்களை வைத்து வேலைசெய்வதை தடைசெய்து உத்தரவிடும் இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. இதில் தொழிற்சங்கங்கள் பல வருடங்களாக திருத்தங்கள் கோரி வருகிறது அது ஒப்பந்த தொழிலாளர் சட்டம் பிரிவு 10(1) தொடர்ச்சியான பணிகளில் ஒப்பந்த முறை ரத்து செய்த பின்னர் அதுவரையில் பணிசெய்த தொழிலாளர் நிலைபற்றி எதுவும் கூறப்படவில்லை பிரிவு10(1)உட்பிரிவை மாற்றி அமைத்து ஒப்பந்த தொழிலாளியை நிரந்தர தொழிலாளியாக மாற்றுவதற்கு வழி வகை செய்ய கோரிவருகின்றன.அரசு தான் தொடர்சியான பணிகளில் ஒப்பந்த முறையை தடை செய்கிறது ஆனால் அதே அரசுதான் ஒப்பந்த முறை மூலமாக தடைசெய்யப்பட்ட பகுதிகளில் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குகின்றது.

பொதுத்துறை நிறுனங்கள் இரயில்வே ,சுரங்கம் அஞ்சல் துறை , அச்சகம் ,கப்பல் விமான போக்குவரத்து மாநில அரசை எடுத்து கொண்டால் மின்சாரவாரியம் , செவிலியர்கள் , போக்குவரத்து ,கல்வி என பல துறைகளில் ஒப்பந்த தொழிலாளியாக தங்களது வாழ்க்கை கழித்த தொழிலாளர்கள் உள்ளனர். அரசு சார்ந்த துறைகளில் பெருமளவில் சங்கங்கள் அமைத்து குறைந்த பட்சம் போராட்டங்களாவது அரசு எதிராக நடைபெறுகிது .ஆனால் தனியார் துறைகளில் நிலை அவ்வாறு இல்லை இங்கு நிரந்தர தொழிலாளர்களுக்கான சங்கம் மட்டும் பெருமளவில் செயல்படுகிறது அவர்களுக்கான கோரிக்கைகள் மட்டுமே வெளியே தெரிகிறது .ஒப்பந்த தொழிலாளர்களின் நிலை வெளியே தெரிவதில்லை குறிப்பாக ஆட்டோமொபைல் துறைகளை எடுத்து கொண்டால் ஒப்பந்த முறையை நவீன கொத்தடிமை முறைக்கு சட்டம் வடிவம் கொடுத்து அதை முறைபடுத்தி வருகிறது
ஒப்பந்தம்-தற்காலிக-தொழிற்பயிற்சி-பழகுநர்-நீம்பயிற்சி-தொழில்நுட்பம்-எப்டிஇ என தொழிலாளர்களை பிரித்து பெயரளவிலான ஊதியத்தில் நிரந்தர பணி செய்ய வைக்கப்படுகிறது. தேவையில்லை எனில் எப்போது வேண்டுமானலும் நீக்கி விடலாம்.
அரசு மற்றும் தொழிலாளர் துறையின் முழு ஆதரவுடன் முதலாளிகள் இந்த சட்ட விரோத ஒப்பந்த முறையை நடத்தி தொழிலாளர்களிடம் அதிகபட்ச லாபம் ஈட்டுகின்றனர். இதுமட்டுமின்றி, ஒப்பந்த முறையை மோசமான வடிவில் அமல்படுத்தி, குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவான ஊதியம் வழங்கப்பட்டு, கொத்தடிமைகளாக வேலை செய்ய வைக்கப்படுகிறது.
மாருதி சுசுகி, ஹோண்டா, ஹீண்டாய் ,டாடா ஹீரோ, டொயோட்டா ரெனால்ட் நிசான் யாமகா, ராயல் என்ஃபீல்ட் போன்ற இன்னும் பல இருசக்கர ,நான்கு சக்கர வாகன உற்பத்தி மையத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டால் நாட்டின் 70% ஆட்டோமொபைல் தயாரிப்புகள் இந்த தொழில்துறை இருந்து வெளிவருகின்றன
இங்கு ஏறக்குறைய அனைத்து ஆலைகளிலும் நிரந்தர உற்பத்திப் பணிகளில் ஈடுபடும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 70 முதல் 90% வரை உள்ளது.ஒப்பந்தத் தொழிலாளர்களை விட நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. சில நிறுவனங்களில் ஆலையின் முழு உற்பத்தியும் ஒப்பந்தத் தொழிலாளர்களால் செய்யப்படுகிறது. ஆனால் நிரந்தர மற்றும் ஒப்பந்த-தற்காலிக-தொழிலாளி-பழகுநர்-நீம்பயிற்சி-FTE தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் பிற சமூக வசதிகளுக்கு இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. இந்த வேறுபாடுகளை களைய இவர்களிடையே தொழிற்சங்கங்கள் இல்லாததே முக்கிய காரணமாக உள்ளது நிரந்தர தொழிலாளர்களுக்கான சங்கங்களும் இவர்களை உள்ளடங்கிய போராட்டங்களை நடத்துவது குறைவுதான் நிரந்தர -ஒப்பந்த தொழிலாளர்களுக்கான வேறுபாடுகளை தொழிலாளர்கள் மத்தியில் கூர்மைபடுத்தி நிர்வாகங்கள் காட்டிகொண்ட வரும் ஊதிய வேறுபாடுகள் மட்டுமல்லாது தனித்தனி பேருந்துகள்,உணவுகூடங்களில் வேறுபாடுகள் ஒப்பந்தம் தொழிலாளர்களை அதிகாரிகள் அனுகும் முறை குறைந்த பட்ச மருத்துவ விபத்து காப்பீடு கூட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இல்லை இது போன்ற பல காரணிகள் உள்ளன. இந்த வேறுபாட்டுகான முரண்பாடுகள் களையப்பட வேண்டும் இந்த முரண்களே நிரந்தர தொழிலாளர்களுக்கான போராட்டங்களுக்கு தடையாகவும் , போராட்டங்கள் தோல்வி அடைவதற்கும் காரணமாக அமைகிறது இந்த முரண்களை களைவது தொழிலாளர்கள் கையில் தான் உள்ளது.

ஒரு முதலாளித்துவ சமூகத்தில் அரசியலமைப்பு, ஜனநாயகம், தனிமனிதனின் கண்ணியம், மனிதநேயம் போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் இல்லை. மோடி அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத தொழிலாளர் சீர்திருத்தங்கள், இந்த நாட்டின் அமைப்பு முதலாளிகளால் இயக்கப்படுகிறது என்ற உண்மையை மேலும் வலுப்படுத்துகிறது மற்றும் அரசாங்கம் அவர்களின் நலன்களுக்காக அரசியலமைப்பை மீண்டும் மீண்டும் மாற்றி அமைக்கும் இதற்கு முன்பும் பல நீதிமன்றங்களில் சமவேலை, சம ஊதியம் என்று பல தீர்ப்புகள் வந்தாலும், இதுவரை எந்த முடிவும் சம வேலைக்கு, சம ஊதியத்தை அமல்படுத்த முடியவில்லை. 2014ல் ஆட்சிக்கு வந்தவுடன், 44 தொழிலாளர் சட்டங்களை 4 தொழிலாளர் குறியீடுகளாக ஒருங்கிணைத்து மோடி அரசு அறிவித்தது. வேலைவாய்ப்பின் தன்மையை முற்றிலுமாக மாற்றி, ஒப்பந்த முறைக்கு சட்ட வடிவம் கொடுத்ததன் மூலம், நிரந்தர வேலையும் பாதுகாப்பானது அல்ல, நிரந்தர வேலையும் கிடைக்காது என்பது தெளிவாக்கப்பட்டது. குறைந்தபட்ச ஊதியமும் வழங்கப்பட மாட்டாது. நீங்கள் நிரந்தர தொழிலாளியாக நிறுவனத்தில் பணிபுரிகிறீர்களா அல்லது ஒப்பந்த, அமைப்புசாரா துறையில் வேலை செய்கிறீர்களா என்பது முக்கியமல்ல. இந்த அரசாங்கம் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு சட்ட வடிவம் கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *