நிலப்பிரபுத்துவத்தின் அழிவின் மீது முதலாளித்துவத்தின் வளர்ச்சி
என்ற செயல்முறை ஐரோப்பாவில் நடைபெற்றதைப் போல
இந்தியாவில் காண முடியாது. ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள்
இந்தியாவின் புராதனப் பொருளாதாரத்தை உடைத்து நொறுக்கிய
போதிலும், நவீன முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கான சக்திகளைக்
கட்டவிழ்த்து விடுவதன் மூலம் அதனிடத்தில் அதனை அமர்த்துவதற்கு
அவர்கள் முயற்சிக்கவில்லை. எனவே இந்தியாவில் முதலாளித்துவ
பொருளாதாரத்தின் வளர்ச்சி என்பது வேறுபட்டதொரு பாதையைப்
பின்பற்றியது.
அந்தப் பாதையானது வித்தியாசமான முரண்பாடுகள்,
தடைகள் மற்றும் இந்திய மக்களுக்கு சொல்லவொண்ணாத துயரங்கள்
நிறைந்ததாகவே இருந்தது. இவ்வாறு இருந்தபோதிலும்கூட,
இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் ஆட்சியானது இருவிதமான முடிவு
களைத்தந்தது. ஒன்று அழிக்கும் தன்மை கொண்டதாகவும், மற்றொன்று
புத்துயிர் ஊட்டுவதாகவும் அமைந்திருந்தது.
காலனியாதிக்கம்
சுரண்டலை நிலைநிறுத்துவதற்காக, ஒரு புறத்தில் அது பழைய ஆசிய
வகைப்பட்ட சமூகத்தினை உருத்தெரியாமல் அழித்தது. மற்றொரு
புறத்தில் வேறு சில நடவடிக்கைகளை அது மேற்கொள்ள வேண்டி
இருந்தது. அதன் வெளிப்படையான விளைவுகள் முதலாளித்துவ
பொருளாதாரத்தின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது என்ற நிலையில்
இருந்தது. எனினும் தட்டுத்தடுமாறி, வலிகள் நிறைந்த பாதையின்
மூலம்தான் இந்த வளர்ச்சி ஏற்பட்டது.
இந்த செயல்முறையில் இந்தியாவில் ரயில்வேயை அறிமுகப் படுத்தியதென்பது மிகுந்த முக்கித்துவமிக்கதொரு சம்பவமாக விளங்குகிறது. இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை இந்தியாவின் பல்வேறு துறைமுகங்களிலிருந்து நாட்டின் உட்பகுதிகளுக்கு எடுத்து செல்வதற்கும், நாட்டின் கிராமப் பகுதிகளிலிருந்து மூலப்பொருட்களை துறைமுகங்களுக்கு எடுத்துச் செல்லவும், ரானுவ பலத்தின் மூலமாக இந்திய மக்களின் எழுச்சியை அடக்க ரனுவத்தை உடனடியாக நகரச் செய்யவும் உதவியாக அது அமைந்தது. தங்களது காலனியாதிக்க ஆட்சியையும் ,சுரண்டலையும் நிலைநிறுத்துவதற்கு இந்தியாவில் ரயில்வேயை அறிமுகப்படுத்துவதென்பது தவிர்க்க முடியாத கடமையாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு அமைந்தது.
1853 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்த வைஸ்ராய் டல்ஹௌஸி பிரபு அவரது “புகழ்பெற்ற குறிப்பில்”இந்த மூன்று பெருமாநிலப் பகுதிகளையும் அவற்றோடு வடமேற்கு எல்லைப் பகுதியையும் ரயில் மூலம் இணைப்பதன் மூலம் கிடைக்க கூடிய மாபெரும் ,சமூக அரசியல் மற்றும் வணிக ரீதியான பயன்களை சுட்டிக்காட்டினார்.
இந்தப் புதிய அம்சத்தை அவர் கூர்ந்து கவனித்த நிலையில்
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள் குறித்து
மார்க்ஸ் குறிப்பிட்ட புகழ்பெற்ற வரிகளை இங்கே குறிப்பிடுவது
பொருத்தமாக இருக்கும். எதிர்காலத்தைக் கணிக்கின்ற வியக்கத்தக்க
திறமையுடன் அவர் எழுதினார்
“ஆங்கிலேய நெசவாலை முதலாளிகள் தங்களது உற்பத்திக்காக மிகக்குறைந்த செலவில் பருத்தி மற்றும் இதர மூலப் பொருட்களைக் கவர்ந்து வரவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே இந்தியாவிற்ககு இரயில்வே சேவயை வழங்கியுள்ளார்கள் என்பதை நான் நன்கு அறிவேன் எனினும் ஒரு நாட்டின் செயல்பாட்டில் இரும்பு மற்றும் நிலக்கரி போன்ற கனிமங்களை ஏராளமாக கொண்டுள்ள ஒரு நாட்டில் நீங்கள் ஒருமுறை இயந்திரத்தை அறிமுகப்படுத்திய பிறகு ,இயந்திரங்களை உற்பத்தி செய்வதிலிருந்து அந்த நாட்டை உங்களால் தடுக்க இயலாது .
ரயில்வேயின் உடனடியான மற்றும் தற்போதைய தேவைகளை சமாளிப்பதற்கு அவசியமான தொழில் செயல்முறைகள் அனைத்தையும் அறிமுகப்படுத்தாமல் பரந்ததொரு நாட்டில் ரயில்வே சேவையை உங்களால் நிலைநிறுத்த முடியாது .இந்த செயல்பாட்டிலிருந்து ரயில்வேயுடன் உடனடியாக தொடர்பில்லாத தொழில் பிரிவுகளுக்குத் தேவையான இயந்திரங்களைப் பயன்படுத்துவது வளர துவங்கும் .எனவே இந்தியாவில் துவங்கியுள்ள ரயில்வே முறையானது நவீன தொழில் துறையின் உண்மையான முன்னோடியாக மாறியுள்ளது”.- ( கார்ல் மார்க்ஸ் கிழக்கிந்திய கம்பெனி அதன் வரலாறும் விளைவுகளும் கார்ல் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் எழுதிய காலனியாதிக்கம் பற்றி என்ற நூலில் அடங்கியது )
-தொடரும்..