
கீழத்தஞ்சை விவசாயிகள் எழுச்சியின் முன்னோடி புரட்சியாளர் பிசீனிவாசராவை நினைவு கூர்வோம் !
நிலப்பிரபுக்கள், கோவில்கள் , மடங்கள் ஆகியவற்றின் சர்வ ஆதிக்கம், சவுக்கடி & சாணிப்பால் அடக்குமுறை கீழ் வாழ்ந்த பண்ணையடிமைகள், உழைப்புக்கு ஏற்ற நியாயமான பங்கும், உரிமைகளும் இல்லாத குத்தகை விவசாயிகள் …எனத் தஞ்சை மண்ணில் நிலப்பிரபுத்துவம் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில், ஒடுக்கப்பட்ட விவசாய சமூகத்தின் விடுதலைக்காக பணியாற்றிய உன்னதமான கம்யூனிஸ்ட்களில் சிவப்பு நட்சத்திரமாக திகழ்கிறார், BSR என அழைக்கப்பட்ட தோழர். பி.சீனிவாசராவ். 1961 செப்டம்பர் 30 அதிகாலை சுமார் 5 மணியளவில், தஞ்சாவூரில் தோழர்கள் உடன் இருக்க,…