நவம்பர் 7 ரஷ்ய புரட்சி தினம் நினைவு கூர்வோம்:

“புரட்சி” என்ற வார்த்தை நம் காதுகளில் விழுந்தவுடன் நம் எண்ணத்தில் உடனே தோன்றுபவர்கள்;

புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.
புரட்சித்தலைவி ஜெயலலிதா.
புரட்சிக்கலைஞர் விஜயகாந்த்.

திரைத்துறையிலிருந்து அதிகார அரசியலுக்கு வந்த இவர்களுக்கு புரட்சியின் பொருள் கூட புரியாது.

ஆனால்…..

புரட்சித்தலைவன் என்ற சொல் உலகில் ஒரே ஒருவரைத்தான் குறிக்கும்.

அவர்தான் மேதை லெனின்!

அந்த புரட்சி வென்ற நாள்தான் 1917 நவம்பர் 7 ஆம் நாள்.

இந்நாள் உலக கம்யூனிஸ்ட்களால் கொண்டாடப்படுகின்ற ஓர் ஒப்பற்ற நாள்.

புரட்சிக்கு முன்னால் ஜார்ஜ் மன்னன் ஆட்சியில் இருந்த ரஷ்யாவின் நிலை இப்போது இருக்கும் இந்தியா நிலையைவிட மிகக்கொடியது.

கல்லாமை,இல்லாமை,வாழ்வாதார பிரச்சனைகள்,மத ரீதியிலான சிக்கல்கள்,தேசிய இன சிக்கல்கள்,இப்படி எண்ணற்ற சிக்கல்களில் சிக்கித்தவித்துக்கொண்டிருந்தது ரஷிய நிலப்பரப்பு.

1917 நவம்பர் 7 அன்று …
அதிகாலை பெத்ரோகிராடு வீதியெங்கும் ஆயுதம் தாங்கிய தொழிலாளர்கள்(செம்படை) அணிதிரண்டனர்.

அரசு அலுவலகங்கள்,காவல் நிலையங்கள்,வானொலி நிலையங்கள் ஆகியவைகளை கைப்பற்றினர்.

ஜார் அரசின் தலைமையகமான கிரெம்ளின் மாளிகை வீழ்த்தினர்.

முதலாளிகள்,நிலபிரபுக்கள்,அதிகார வர்க்கத்தினர் அலறியடித்துக்கொண்டு ஊரை விட்டு ஓடினர்.

செம்படையை… போல்ஷ்விக் கட்சி வழிநடத்தியது….கட்சியை லெனின் தலைமையேற்றார்.

புரட்சி முடிந்ததும் லெனின் அரசு தலைவரானார்.

ரஷ்யாவின் அனைத்து நிலங்களும்,வளங்களும் தேசிய உடைமையாக்கப்பட்டன.
உணவு,வீட்டு வசதி,சுகாதாரம்,கல்வி,வேலைவாய்ப்பு, போன்றவைகள் உத்திரவாதம் செய்யப்பட்டது.

பெண்களுக்கு சம உரிமை நிலைநாட்டப்பட்டது.

தொழிலாளர் வேலை நேரம் 7 மணி நேரமாக்கப்பட்டது.
சுரங்கம் போன்ற கடின பணிகள்,எப்போதும் தயாராக இருக்க வேண்டிய மருத்துவ பணிகள் செய்வோருக்கு 6 மணி நேரமாக ஆக்கப்பட்டது.

உழைக்கும் பெண்களுக்கு நான்கு மாதம் மகப்பேறு விடுப்பும், முழு சம்பளமும் அளிக்கப்பட்டது.

ஆண்கள் 60 வயதிலும்,பெண்கள் 55 வயதிலும் ஓய்வு பெற்றனர்.
ஓய்வு பெற்றோருக்கும்,உழைக்க வாய்ப்பற்றோருக்கும் ஓய்வூதியமாக முழு சம்பளம் அளிக்கப்பட்டது.

புரட்சிக்கு முன்…. முதலாளிகளின் தேவைக்கு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன;
புரட்சிக்கு பின்…
மக்களின் தேவைக்கு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

ஒவ்வொருவருக்கும் திறமைக்கேற்ற வேலை,வேலைக்கேற்ற ஊதியம் வழங்கப்பட்டது.
தொழிற்சாலைகளின் நிர்வாகம் தொழிலாளர்களிடம் வழங்கப்பட்டது.

சோவியத்துக்கள் என்ற உழைக்கும் மக்கள் மன்றங்கள் அரசு நிர்வாகங்களை நடத்தின.
ஊர் மக்கள் கூடி சட்டங்கள்,திட்டங்கள் தீட்டினர்.

இவைகளுக்கு மேதை லெனின் வழி நடத்தினார்.

லெனினை மார்க்சியம் வழி நடத்தியது.

இப்படிப்பட்ட ஒரு நாட்டின் செயல்பாடுகளை நேரில் கண்டு வர பெரியார் தன் சொந்த செலவில் சோவியத் ரஷ்யா சென்று வந்தார்.

நவம்பர் 7 புரட்சி போல நடத்த இங்கே பெரும் தடையாக இருப்பது சாதி.

சாதி ஒழிப்பும்,வர்க்க ஒழிப்பும் சமகால திட்டங்களாக கொண்டால்தான் இங்கே லெனின் நடத்திய புரட்சியை நாம் முன்னெடுக்க முடியும் என்பதை மனதிற்கொள்ளுவோம்.

பார்ப்பனீயம் ஒழிக…!
பொதுவுடைமை வெல்க….!

இரா.திருநாவுக்கரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *