உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்- ஜான் ரீடு

நவம்பர் 7
மானுட வரலாற்றில் மகத்தான நாள். மாபெரும் சோவியத் புரட்சி வெற்றியடைந்தது. பாட்டாளிகளின் கையில் ஆட்சியதிகாரம் வந்தது. முதலாளித்துவ பிற்போக்காளன் கெரன்ஸ்கியை செம்படை வீழ்த்தியது.

உலகப் பந்தில் உழைப்பவர் வாழ்க்கையில் வெளிச்சக் கீற்று நுழைந்தது. மார்க்சிய தத்துவத்தை உருவாக்கிய மாமேதைகள் கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கெல்சுக்கு பெருமை சேர்த்தார்கள் ரஷ்யப் பாட்டாளிகள்.

தோழர் லெனின் மார்க்சியம் வெறும் வறட்டுச் சூத்திரம் அல்ல. நடைமுறைக்கு வழிகாட்டி என நிரூபித்தார்.

ரஷ்ய மண்ணில் நடந்த ஆயுதப் புரட்சியை கண் முன் காட்டுகிறது ‘உலகை குலுக்கிய பத்து நாட்கள்’ என்ற புத்தகம். இந்த புத்தகத்தை எழுதியவர் ஜான்ரீடு என்கிற அமெரிக்கப் பத்திரிகையாளர்.

நவம்பர் புரட்சி ரஷ்யாவில் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் நேரடி சாட்சியாக அதைக் கண்டுணர்ந்த இவர் தனது கள அனுபவத்தை அருமையாகப் பகிர்ந்துள்ளார். இந்த நேரத்தில் தோழர்கள் அவசியம் வாசிக்க வேண்டியப் புத்தகம் இது.
இரா.பாரதிநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *