இந்திய தொழிலாளர் வர்க்கம் வளர்ந்த வந்த வரலாறு பகுதி -2

தொழில்மயமாக்கலும் வர்க்கங்களின் வளர்ச்சியும்:

ஆங்கிலேய ஃப்ரெஞ்சு யுத்தங்கள் தொடர்ந்த ஆண்டுகளில் தொழிற்சங்க வாதமானது பல்வேறு இடையூறுகளை சந்திக வேண்டிய நிலை ஏற்பட்டது .கூட்டு பேரம் என்ற குறிக்கோளை முதலாளிகள் பெரும்பாலனோர் ஏற்க மறுத்ததன் விளைவாக வேலை நிறுத்த நடவடிக்கைகளின் போது அடிக்கடி கலவரங்களும் ஏற்பட்டன. அதேபோன்று வேலைநிறுத்தங்கள் தோல்வியுறவும் ,தொழிலாளர்கள் பழிவாங்கபடுவதும் அவர்களின் அமைப்புகள் தற்காலிகமாகப் பிளவுபடவும் இவை வழிவகுத்தன . தொழில்மயமாக்கலானது ஃப்ரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் வேகமாக வளர்ந்து வந்தது மேலெந்து வந்துகொண்டிருந்த முதலாளித்துவத்தின் பலம் அதிகரித்ததும்,எண்ணிக்கையில் அதிகரித்து வந்துகொண்டிருந்த தொழிற்சாலை தொழிலாளர்களின் முக்கிதும் மேலும் அதிகரித்து.கூடவே அதற்கான அரசியல் விளைவுகளும் ஏற்பட தொடங்கியது ஃப்ரான்ஸ் நாட்டில் பழமைவாதிகள் பெற்ற வெற்றியின் விளைவாக போராடுவதற்கான துனைப்படைகளாக தொழிலாளிகளோடு ஒரு கூட்டணியை உருவாக்கிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் வளர்ந்து வரும் முதலாளி வர்க்கத்துக்கு ஏற்பட்டது. இத்தகைய அரசியல் பின்னணியிலான நடவடிக்கையானது தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் உணர்வு வளர்ச்சியடைவதற்க்கு உதவி புரிந்தது.

ராபர்ட் ஓவனின் மாபொரும் தேசிய தொழிற்சங்க அமைப்பு:

1818 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் நாள் பீட்டர்லூவில் பெருந்திரளான ஆர்பாட்டத்தில் இங்கிலாந்து தொழிலாளி வர்க்கம் தனது முதன்முதலாக சமூக மற்றும் அரசியல் கோரிக்கைகளை எழுப்பியது முற்றிலும் அமைதியாக நடைபெற்ற இந்த ஆர்பாட்டமானது திட்டமிடப்பட்ட கலவரதால் படுகொலை மூலம் சீர்குலைக்கப்பட்டது . தொழிலாளி வர்க்கத்தின் சீர்திருத்த இயக்கத்தை எப்படியாவது நசுக்கி ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக இருந்தது இச்சம்பவம் இங்கிலாந்து தொழிலாளி வர்க்கம் போராட்டத்தில் ஒரு புதிய காலகட்டத்தை குறிப்பதாக அமைந்தது.
1830 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட உழைப்பாளர்களின் பாதுகாப்பிற்கான தேசிய கழகம் தொழிற்சங்கங்களை ஒன்றுபடுத்தவும் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கவும் அதன் மூலம் முதலாளிகளை வெற்றிகரமாக நேருக்கு நேர் சந்தித்து அவர்களிடம் சலுகைகளையும் பெற முயன்றது .அனைத்து வகையான பொருட்களையும் சேவைகளையும் உருவாக்குவதன் மூலம் முதலாளிகளையே இல்லாமல் போகும்படிச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு சங்கங்களை உருவாக்க ராபர்ட் ஓவன் திட்மிட்டார். இந்த நோக்கத்துடன் 1834 ஆம் ஆண்டு லண்டனில் தொழிற்சங்க பிரதிநிதிகளை கொண்ட சிறப்பு மாநாட்டில் அணி திரட்டப்பட்ட மாபெரும் தேசிய தொழிற்சங்கம் என்ற அமைப்பை அவர் நிறுவினார். இந்த தேசிய சங்கத்தில் பிரமிக்கத்தக்க வகையில் உறுப்பினர்கள் சேர்ந்தார்கள் இதுவரை மனிதநேயம் சீர்திருத்த இயக்கமாக இருந்து வந்த ஓவனது இயக்கம் தொழிலாளி வர்க்கத்தின் தத்துவார்த்த தூண்களில் ஒன்றாக உருப்பெற்றது.

தொழிற்சங்களின் கூட்டுறவு சிதைவுறதல்:

1832 ஆம் ஆண்டில் சீர்திருத்த சட்டம் என்ற வடிவதில் புதிய மேல்தட்டு வர்கங்களின் சமரசத்தின் விளைவாக தொழிலாளர்கள் தங்களது அரசியல் உரிமைகளை இழந்து நின்றனர் முதலாளித்துவ வர்க்கத்திற்க்கும் நிலம் படைத்த அரச வம்சத்தினர்க்கும் இடையேயான தேர்தல் சீர்திருத்தம் குறித்து நிலவிய முரண்பாடும் இந்த போராட்டத்தில் முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தை தனது கூட்டாளியாக பயன்படுத்தி கொண்டது இது கூட்டுறவு இயக்கத்தையும் தொழிற்சங்க இயக்கத்தையும் மேலும் முன்னுக்கு கொண்டு செல்ல வழிவகுத்தது .ஓவன் எப்போதுமே வர்க்கப் போராட்டம் என்ற வகையில் சிந்திகாது இருந்த போதிலும் கூட நடைமுறையில் அதிகரித்து வந்த தொழிற்சங்க நடவடிக்கையானது அரசானது தீர்மானகரமான முறையில் தாக்குதல் தொடுக்கவும் முதலாளிகள் தீவிரமான மாற்று நடவடிக்கைகளை எடுக்கவும் தூண்டியது .இது மாபெரும் தேசிய கழகம் சிதறிப்போவதிலும் ஓவனின் செல்வாக்கும் அவரது கூட்டுறவு தத்துவமும் மிக வேகமாக சரிவதிலும் சென்று முடிந்தது..

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *