அய்க்கூ கவிதைகள் மகரந்ததுகள்கள் ..(வானவன்)

★ எவ்வளவு ஓடியும்
மூச்சிறைக்கவில்லை
கடிகாரமுள்.

★பிடித்த வேலை
தொடரவில்லை
விருப்ப ஓய்வு.

★ பேருந்தில் எப்போதும்
இவருக்கு இடமுண்டு
ஓட்டுனர்.

★அனைவரும் அழுதோம்
அப்பா சிரித்தார்
போதையில்.

★ ஏ.சி. காரில்
இறங்கினார் நடிகர்
ஏழையாய் நடிக்க.

★ இனி குடிப்பதில்லை
ஒவ்வொரு முறை
குடித்த பின்னும்.

★ பொறுத்தது போதும்
கொடியோரை அழிப்பாய்
அறுவா கையில் உள்ள அய்யனாரே

★ கிடைத்தது சுதந்திரம்
சுகமாய் வாழ்கிறார்கள்
அரசியல்வாதிககள்.

★ வியர்வை சிந்தினான்
உயர்ந்தது
பணக்காரன் மாளிகை.

★ இருவருக்கும்
திருமணம்
இடங்கள் வேறு.

★ வலியும் வேதனையும்
பறிமுதல் செய்யும்
குழந்தை.

★ உலகமயம்,தாராளமயம்
உழைப்பவன்
வாயில் மண்.

★ பிடித்தபாடல்
காதில் விழ மறுத்தது
குடிகார கணவன்.

★ தினமும் ஒருகாரில்
அழுக்கு சட்டையோடு
மெக்கானிக்.

★ வேலை கிடைத்தது
சந்தோஷத்தில் கத்தினேன்
அனைவரும் விழித்தனர்.

.

 - வானவன் ( சென்னை சிம்சன் தொழிலாளர், இயற்கை ஆர்வலர் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *