பிறந்தநாள் பரிசு

சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் தொழிலாளர்களின் போராட்டம் முன்பை விட அதிகமாக வகையில் நடத்து கொண்டிருக்கிறது…தகவல் தொழில்நுட்பம் சாமான்ய மனிதர்களை நெருங்காத காலம் அது.

                அது ஒரு அரசு பெண்கள் பள்ளி,வகுப்புகள் முடிவடைந்து விட்டதால் மகிழ்ச்சியில் ஓடிக்கொண்டிருந்தாள் மகாலெட்சுமி,பள்ளி அருகில் இரண்டு தெருக்கள் அப்பால் தான் அவளின் வீடு.

ஓடிய வேகத்தில் வீட்டிற்குள் நுழைந்ததும்,மூச்சு வாங்கி கொண்டே அவளின் அம்மாவிடம்,
‘ அம்மா அப்பா இன்னும் வரவில்லையா அம்மா என்று கேட்டாள்.
மீனாட்சி அவள் தலையை தடவிகொடுத்துகொண்டே ‘ கை கால் கழுவிட்டுட்டு வா ‘ காபி குடிக்கலாம் என்றாள்,
‘ஏன் அம்மா அப்பா இன்னும் வரல,என்றாள் ,
அப்பா இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார்,நீ கெளம்பி ரெடியா இரு என்று சொல்லிகொண்டே காபியை ஆற்றிக்கொண்டிருந்தாள்.
சந்தோசத்தில் தான்
சுமந்து கொண்டு வந்த பையை கிழே போட்டு விட்டு குளிக்க போனாள்,
‘நாளைக்கு அவளுக்கு பத்தாவது பிறந்தாள், அதுவும். ஞாயிற்றுக்கிழமையில் என்பது அவளுக்கு கூடுதல் மகிழ்ச்சி ‘.
குளித்து முடித்த காபி குடித்துவிட்டு வழக்கம் போல் வீட்டு பாடம் எழுத ஆரம்பித்துவிட்டாள்.
எழுதி முடித்த பின்பு வாசல் அருகே ஓடிச் சென்று தன் அப்பா வருகிறாரா என்று பார்க்க ஓடினாள் .அப்பா இன்னும் வரவில்லை, ‘நேரம் ஆச்சு இன்னும் ஏன் வரவில்லை என்று அம்மாவிடம் கேட்டாள் மகா,
அப்பாவுக்கு ஏதோ அவசர வேலை இருக்கலாம் ,கண்டிப்பாக வருவார் என்றாள் மீனாட்சி ,
‘ ரொம்ப நாளா பச்சை கலர் கவுன் வாங்க வேண்டும் என்பது மகா வின் ஆசை, இந்த முறையாவது கிடைக்குமா என்ற ஏக்கம் அவளுக்கு இருந்தது.
நேரம் ஆகியும் செந்தில் வராத காரணம் என்ன வென்று மீனாட்சி தெரிய தொடங்கியது.
‘கடந்த ஒரு சில மாதங்களாக செந்தில் வேலை செய்யும் இடத்தில் தொழிலாளர்களுக்கு நிறைய சிக்கல் இருந்தது கொண்டு வந்தது.’மீனாட்சி நினைத்து சரியாக தான் இருந்தது.மனதுக்குள் நினைத்துக்கொண்டே இரவு உணவுக்கான வேலைக்கு தயரானாள்…
இரவு உணவு முடிந்ததும் மகா அம்மாவிடம் இவ்ளோ நேரம் ஆகியும் அப்பா வராததால் உணவு கூட சரியாக சாப்பிடாமல் படுக்க சென்றுவிட்டாள்.எப்போதும் அப்பாவின் அருகில் படுத்துக்கொண்டு அப்பா சொல்லும் கதையை கேட்டுக்கொண்டே தூங்குவது அவளின் வழக்கம்.இன்று அப்பாவும் இல்லை ,கதையும் இல்லை.படுத்துக்கொண்டே யோசித்தவள் அப்படியே தூங்கி போனாள்.
இருள் விலகி விடியற் பொழுது ஆரம்பித்து.
படுக்கை விட்டு எழுந்தாள் மகாலெட்சுமி ,அவள் படுத்த இடத்தில் அருகில் ஒர் ஆச்சர்யம் அவள் ஆசைப்பட்ட டிரஸ் அவளது அருகில் இருந்தது .அதை பார்த்த மகிழ்ச்சியில் அதை எடுத்துக்கொண்டு அப்பாவை வந்துவிட்டார் என அப்பாவை தேட ஆரம்பித்துவிட்டாள்.வீடு முழுவதும் தேடியும் அப்பா வீட்டில் இல்லை.’அம்மாவிடம் அருகில் நின்று அப்பா எங்கம்மா என்றாள் .
அப்பா இன்னும் வரவில்லை என்றாள் மீனாட்சி .
‘அப்போ டிரஸ் மட்டும் எப்படி வந்துச்சு என்றாள் மகா ,
ரவி மாமா கொண்டு வந்து கொடுத்துவிட்டு போனார் என்றாள் அம்மா,
ரவி மாமா அப்பாவுடன் வேலை செய்யும் தொழிலாளி.
‘ரவி மாமா கிட்ட கேட்க வேண்டியது தானா என்றாள் மகா அதங்கத்துடன்.
அம்மா அவள் தலையை தடவி கொடுத்துக்கொண்டே போன வாரம் அப்பா உணக்கு ஒரு கதை சொல்லி கொடுத்தார் ஞாபகம் இருக்கா என்றாள் அம்மா ‘
‘அப்பா பத்தி கேட்ட நீ என்ன கதை பத்தி கேட்கிற என்றாள் மகா கோபமாக ‘
‘என் செல்லக்குட்டி தான சொல்லு டா தங்கம் என்றாள் கொஞ்சினாள் மீனாட்சி ‘
‘அது பாவம் அம்மா அந்த கம்பெனியில வேலை செய்யுற ஒரு மாமா வோட கதை ‘ என்றாள் மகா’
‘சரி அதுல கடைசியில என்ன ஆச்சு என்றாள் அம்மா ‘
‘அதுவா அவங்க எல்லாம் வேலை செய்யுற இடத்துல ஒன்னா இருந்து கேள்வி கேட்டாங்க,உடனே வேலையை விட்டு தூக்கிட்டாங்க,எல்லாம்
ஒன்னா வேலை வேனும் கம்பெனி வெளியில உட்காந்தாங்க ‘என்றாள் மகா .
‘என் செல்லகுட்டி கரெக்டா சொன்ன,அப்பா கம்பெனியிலும்
அதே கதை தான் என்றாள் ,தலையை தடவிக்கொண்டே ‘
‘மகா அமைதியானாள் ஒரு நிமிடம் ,புது டிரஸை கையில் வைத்தப்படியே நின்று கொண்டிருந்தாள் மகா ,
‘சரி மகா எல்லாம் கொஞ்ச நாள்ல சரியாகும் ,நீ போய் பல்விளக்கி குளிச்சுட்டு வா என்றாள் ,
‘புது டிரஸ் போட்டுட்டு கோவிலுக்கு போகனும் என்றாள் அம்மா,
‘கொஞ்ச நேரம் அமைதிக்கு பின் சரி என்று தலையை ஆட்டுவிட்டு சென்றாள் மகா’.
புது டிரஸை போட்டுட்டு மகாவும்,மீனாட்சியும் வீட்டை விட்டு நடந்து கொண்டிருந்தனர்.
அது தெருமுனை வலதுபக்கம்
போனாள்கோவில் ,இடது பக்கம் போனாள்
அப்பா இருக்கும் இடம் வரும், தெருமுனையை வந்ததும் நின்ற மகா ‘அம்மா நம்ம கோவிலுக்கு போக வேண்டாம்,அப்பா இருக்கும் இடத்திற்கு போக வேண்டும் என்றாள்,மகா.
மறுப்பு ஏதும் அம்மா சொல்லவில்லை ,ஏன் என்றால் அப்பா சொன்ன கதையில் எப்படி இறுதியாக முடித்தாரோ,அதே உண்மையில் மகாலெட்சுமி செய்ய தொடங்கினாள்.
“இருவரும் இடப்பக்கம் திரும்பி ஆலையை நோக்கி நடக்க தொடங்கினார்கள் ,.”
– விஜிகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *