கம்யூனிசம் தோற்றுவிட்டதா?

ஆசிரியர் : தோழர். இரா .பாரதிநாதன்

சோவியத் யூனியன் விழ்ச்சிக்கு பிறகு முதலாளித்துவாதிகளால் பரப்பபட்டுவரும் விசம பிரச்சாரம் கம்யூனிசம் தோற்றுவிட்டது என்பதாகும் .ஏன் இந்த வாதங்கள் தற்போதைய காலக்கட்டம் வரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது .அதற்கான காரணங்கள் அதன் பின்னனி அரசியல் நோக்கம் என்ன ? கம்யூனிசம் ஏன் தோற்காது அதன் அடிப்படை கோட்பாடான மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானமாக உள்ளதற்கான காரணங்களை பகுப்பாய்வு செய்கிறது இந்த நூல்.கம்யூனிசத்தின் ஆணிவேரான மார்க்சியம் இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களுடன் எப்படி பொருத்தி பார்ப்பது என்ற இயங்கியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தை நமக்கு மார்க்சிய ஆசான்கள் நமக்கு வழங்கி உள்ளனர் அதை எளிமையாக புதிதாக படிப்பவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் முதல் அத்தியாயம் உள்ளது .

இரண்டாவது அத்தியாயம் மார்க்சியத்தில் போதாமை உள்ளதாக கூறப்படும் வாதங்களுக்கு பதில் கூறுகிறது. மார்க்சியம் என்பது தத்துவம் ,அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கியது.அடிப்படையில் மார்க்சியம் முரணற்ற இயங்கியல் பொருள்முதல்வாதத்தை கொண்டுள்ளதால் சமூகத்தில் எந்த ஒரு பிரச்சனையையும் அதன் வழி நாம் ஆய்வு செய்ய முடியும் என்கிறது. உலகமயமாக்கலுக்கு பிறகு இந்தியாவில் முதலாளித்துவ உற்பத்தி முறை வளர்சியடைந்து இதனால் மேல்கட்டுமான சாதிய அமைப்பு முறை சற்று கலங்கம் அடைந்திருப்பதை பெண் கல்வி ,வேலைவாய்புகளில் முன்னேற்றம் போன்ற காரணங்களை வைத்து விளக்கியது சிறப்பாக இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் நடைமுறை சிக்கல்களில் ஏற்பட்ட தோல்வி அமைப்பு சிதைவுறதலை வைத்து மார்க்சியத்தில் போதாமை உள்ளாதாக கூறும் வாதத்தை காரணங்களுடன் விளக்குகிறது.மார்க்சியத்தை குழப்பம் செயல்கள் மார்க்சியம் உருவான காலம் முதலே நடந்து வருகிறது தற்போதைய காலகட்டத்தில் எந்த மாதிரியான வகைகளில் இது செயல்படுகிறது என்பதை மூன்றாவது அத்தியாயம் விளக்குகிறது பின்நவீனத்தும் ,அடையாள அரசியல் , கட்டுடைத்தையல் என பல வகைகளில் முதலாளித்துவாதிகளால் செயல்படுத்தப்படுகிறது.

பண்பாட்டின் சீரழிவு என்ற நான்காவது அத்தியாயம் கலை இலக்கிய துறைகளில் பின்நவீனத்துவவாதிகளின் செயல்பாடுகளை விளக்குகிறது.
தனிச்சொத்துடமை ஒழியும் போதுதான் பெண்விடுதலை சாத்தியம் என மார்க்சியம் நமக்கு விளக்கிறது ஆனால் சாருநிவேதா வகை பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் போதை கட்டற்ற பாலியல் சுதந்திரம் போன்றவற்றை பெண் சுதந்திரம் கலச்சாரம் என்று தங்கள் எழுத்துகளில் போதிப்பதை கடுமையாக சாடுகிறது இந்த நூல்.மொழியில் மாயாவாதம் ஐந்தாவது அத்தியாயம் வார்தைகளை திரித்து கூறி மடைமாற்றவது மார்க்சிய எழுத்தாளர்கள் என்ற போர்வையில் தத்துவத்தை சிதைப்பவர்களையும் அறிவுஜீவிகள் பேர் வழியில் மக்களுக்கு பயனில்லாத மக்களுக்கு புரியாத வகையில் எழுதி மக்களுக்கு தங்களின் எழுத்து புரியவில்லை என்றால் மக்களுக்கு அறிவில்லை என பிதற்றுபவர்களை குறித்து விளக்கிறது.

கம்யூனிசம் ஏன் தோற்காது ? ஆறாவது அத்தியாயம் சோவியத் யூனியன் விழ்ந்து 70ஆண்டுகள் கடந்த பின்பும் கூட முதலாளித்துவத்தால் கம்யூனிச தத்துவத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் தொடர்கிறது என்றால் சேவியத் யூனியனில் சோசலிச சமூகம் எவ்வளவு மேம்பட்டதாக இருந்திருக்கும் முதலாளித்து நெருகடிகளால் உலகில் சோசலிச சமூக அமைப்புகள் வந்தே தீரும் என்ற நிதர்சனங்களை இப்பகுதி விளக்கிறது .கடைசி அத்தியாயம் கம்யூனிச சமூகம் குறித்து ஒரு சோசலிச சமூக அமைப்பு முறையில் இருந்து கம்யூனி சமூக அமைப்புக்கு இடைவிடாத போராட்டங்கள் பற்றியும் வர்க்கங்கள் தோன்றாத புராதான பொதுவுடைமை சமூக அமைப்பிலிருந்து வர்க்கங்கள் ஒழிந்த கம்யூனிச சமூக அமைப்பு எப்படி இருக்கும் என்பது பற்றியும் விளக்கிறது . உலகில் எந்தவொரு தத்துவமும் மானுட சமூக வளர்ச்சி கட்டங்களை விஞ்ஞான ரீதியாக நிறுவியது கிடையாது மார்க்சியத்தை தவிர எனவ இதுபோன்ற நூல்ககளை படிப்பதன் மூலமாக கம்யூனிச தத்துவம் பற்றி எளிமையாக கற்க முடியும் இதுபோன்ற படைப்புகள் நிறைய வர வேண்டும்
தோழர் பாரதிநாதன் அவர்களுக்கு வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *