இந்திய தொழிலாளி வர்க்கம் வளர்ந்து வந்த வராலாறு:1

இந்திய தொழிற்சங்க செயல்பாட்டில் தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டமானது எப்படி வளர்ந்துவந்தது என்பதை தொழிலாளர்கள் அறிந்துகொள்வது இக்காலக்கட்த்தில் அவசியமான ஒன்றாகும்.இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் வரலாறு ஒரு சர்வதேச பின்னணிகொண்ட வரலாறாகும்.இதை புரிந்துகொண்டால் மட்டுமே தொழிலாளர் வர்க்கம் தற்போது எவ்வாறு உள்ளது எதன் அடிப்படையில் நாம் பயணிக்க வேண்டும் என்பது புரியும்.

சர்வதேசப்பின்னனணிகள்:

நவீன தொழிலாளி வர்க்கம் என்பது தொழிற்புரட்சியின் விளைவே ஆகும்.இங்கிலாந்தை மையமாக கொண்டே தொழிற்புரட்சியானது ஐரோப்பா கண்டம் முழுவதும் வேகமாக பரவ தொடங்கியது.எனவே இந்தியா அதன் சொந்த மண்ணில் ஒரு தொழிற்சங்கப் புரட்சியை காண்பதற்க்கு பதிலாக பெரு வளர்ச்சிப் பெற்ற இங்கிலாந்தின் காலனி நாடக இருந்தது.இங்குள்ள அதன் சொந்த பாரம்பரிய பொருளாதரத்தை சீர்குலைத்து இங்கிலாந்து போன்ற நாடுகள் தொழிற்புரட்சியில் முன்னேரின.எனவே இந்தியாவின் தொழிற்புரட்சி மிகவும் பின்தங்கியே வளர்ந்தது.அதனூடக தொழிற்சங்க வளர்ச்சியும் பின்தங்கிய வளர்ந்து வந்தது.இந்திய தொழிலாளி வர்க்கத்தைப் பற்றி ஆராய வேண்டும் என்றால் ஐரோப்பாவில் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தோற்றத்தைப் பற்றியும் அதன் வளர்ச்சிப்போக்குகள்,தத்துவார்த்த உருவாக்கம்ஆகியவை பற்றி நாம் ஒரளவு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது

அடிப்படை வர்க்கங்கள்:

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் உருவான தொழிற்புரட்சியானது கைவினை மற்றும் உற்பத்தியில் இருந்த உடல் உழைப்பிலிருந்து பெரு அளவிலான இயந்திரங்களை பயன்பாட்டிற்க்கு கொண்டு வந்த காலக்கட்டம்.தொழிற்சாலைகளையும் உற்பத்திக் கருவிகளையும் சொந்தமாக கொண்டு தொழிலாளர்களை சுரண்டி வந்த முதலாளி வர்க்கம் .உற்பத்திக் கருவிகளை தனக்கு சொந்தமாக கொண்டிராத தொழிலாளி வர்க்கம் என அடிப்படை வர்க்கங்களாகும்.

ஐரோப்பாவின் தொழிற்புரட்சி:

ஐரோப்பா கண்டத்தில் இங்கிலாந்து இந்த தொழிற்புரட்சியை முதன் முதலாக கண்டது.இதற்க்கு அடிப்படையில் இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவதாக இங்கிலாந்தின் முதாலாளித்து வர்க்கம் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக தனது முதல் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இந்தியா போன்ற காலனி நாடுகளில் பிரிட்டிஷ் காலனியவாதிகள் சுரண்டிய சொத்துக்கள் இங்கிலாந்தில் முதலாளித்துவ தொழில் முறையை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தது.

1757 ஆம் ஆண்டு நடைபெற்ற ப்ளாஸி யுத்தத்திற்கு பிறகு இந்தியாவின் எண்ணற்ற செல்வங்கள் இங்கிலாந்தில் குவிய தொடங்கின. இங்கிலாந்தில் இயந்திரங்களை புகுத்திய காலகட்டம் என்பது 1765 ஆம் ஆண்டு ஹார்க்ரீவ்ஸ் நெசவு இயந்திரம் கண்டுபிடித்ததிலிருந்து ஜேம்வாட்ன் நீராவி எஞ்சின் என நீண்டது இதன் காரணமாக ஒரு பக்கம் தொழிற்புரட்சியும் அதனூடக முதலாளித்து வர்க்கம் தொழிலாளி வர்க்கம் என வேகமாக வளர்ந்து வந்தது.

மனிதனின் மீதான இயந்திரத்தின் வெற்றி:

இயந்திரங்களை துவக்க நிலையாக கொண்டு வளர்ந்து வந்த தொழிற்புரட்சியானது மனித குறைபாடுகளுக்கு அப்பால் இயந்திர ரீதியான ஒழுங்மைப்பானது மனித உடற்கூற்றையும் தாண்டி செல்லதாக அமைந்தது.இது உற்பத்தி செயல்பாடுகள் அனைத்தையும் மாற்றி அமைத்தது .இதன் விளைவாக முதலாளித்துத்தின் கூடவே பிறந்த மனித தன்மையற்ற வாழ்கை முறையை தொழிலாளர்கள் வாழ்ந்தனர்.புதிய உற்பத்தி முறையில் பெரும்பாலான வேலைகளை செய்வதற்கென உடல் வலிமையோ அல்லது நடைமுறை திறனையே பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியப் இல்லாமல்போய் பெண்கள் குழந்தைத் தொழிலாளர்கள் என பெரும் எண்ணிக்கையில் அதிகரிக்க செய்தது.இது சாதாரண மக்களின் உடல் மற்றும் மன அழுத்தத்தை பதிப்பதாக அமைந்தது.அதிக பட்ச்ச லாபத்திற்காக முதலாளிகளின் தீராத பேராசை மறு பெயராக மனிதனின் மீதான இயந்திரத்தின் வெற்றியாக அமைந்தது இது வேலை நேரத்தை அதிகரிக்கவும் குறைவான கூலிக்கும் வலி வகுத்தது.தொழிற்சங்க வாதம் என்பது தொழிற்புரட்சியின் படைப்புகளில் ஒன்றாக இருந்த போதிலும் 1752ஆம் ஆண்டில்தான் இங்கிலாந்தில் தொழிற்ச்சங்கங்கள் தோன்றின.

இயந்திரங்கிளின் மீதான கோபங்கள்:

முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையேயான சச்சரவு என்பது மூலதனம் தோன்றிய காலத்தில் இருந்து தொடர்ந்து வருகிறது என்பதை சமூக வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகிறது.உற்பத்தி காலங்கள் முழுவதுமே இந்த முரண்பாடுகள் தொடர்ந்து வந்தன.எனவே எந்த ஒரு சச்சரவின் போது தொழிலாளர்களின் முதல் இலக்கு இயந்திரங்களை அடித்து நொறுக்குவதாக இருந்தது.1630 ஆம் ஆண்டு லண்டன் நகருக்கு அருகே ஒரு காற்றால் இயங்கும் மர அறுக்கும் இயத்திரம் மக்களால் அடித்து நொறுக்கப்பட்டது.1758 ஆம் ஆண்டு நீர் சக்தி மூலம் இயங்கு கம்பளி அறுக்கும் இயந்திரம் நிறுப்பட்டது.இதனால் வேலையிழந்த மக்களால் அது பொசுக்கப்பட்டது .19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வந்தது.எனினும் இவை ஆங்காங்கே தனிப்பட்ட முறையில் நடந்தது இது பயங்கரவாத செயல்பாடுகளின் அறிகுறியாக பார்கப்பட்டது.இத்தகையை செயல்களை செய்பவர்கள் லுத்தியாவதிகள் என அழைக்கப்பட்டனர்.இந்த இயக்கத்தினர் மட்டுமே இத்தகைய செயல்களை செய்தனர் .1815ஆம் ஆண்டு வரை இவர்கள் செயல்பட்டனர்.இதற்க்கு தூக்குதண்டனைகள் கூட நிறைவேற்றபட்டன.காலப்போக்கில் தொழிலாளர்களின் துவக்க கால வேகத்திற்க்கு பதிலாக உணர்வுபூர்வமான நடத்தை உருவானது. மார்க்ஸின் வார்த்தைகளில் கூறுவதானால்””இயந்திரத்திற்க்கும் அதனை பயன்படுத்தும் மூலதனத்திற்க்கும் இடையேயுள்ள வேறுபாட்டை உழைப்பவர்கள் புரிந்து கொள்வதற்க்கும்,அவர்கள் தங்களது தாக்குதல்களை உற்பத்தி கருவிகளுக்கு எதிரானதாக இல்லாமல் அவை பயன்படுத்தபடுகிற முறையை எதிர்தே நடத்துவதற்க்கும் மிகுந்த நேரமும் அனுபவமும் தேவைபட்டது.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *