இந்திய தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -4

சாசனவாதிகளின் போராட்டங்கள் தோல்வியை சந்திதாலும் அதன் வெகுஜன கோரிக்கைகள் உலக தொழிலாளர்கள் மத்தியில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது. சாசனவாதிகளின் இலக்காக விளங்கிவந்த பத்து மணி நேரம் வேலை என்பது 1847ஆம் ஆண்டு ஒரு சட்டத்தின் மூலம் நிறைவேறியது. இது பெண்களுக்கும் குழந்தை தொழிலாளர்களுக்கும் சில இடங்களில் ஆண்களுக்கும் இது அமல்படுத்தபட்டது.

சாசன இயக்கம் பற்றி மார்க்ஸ் மற்றும் லெனின்:

இது குறித்து மார்க்ஸ் “” சாதாரண வேலைநாள் உருவானது என்பது முதலாளித்துவ வர்க்கத்திற்க்கும் தொழிலாளர் வர்க்கத்திற்க்கும் இடையே கிட்டத்தட்ட பிரிந்து போன நீடித்த நடந்த உள்நாட்டுபோர் ஒன்றின் விளைவே ஆகும்.ஆங்கிலேய தொழிலாளர்கள் ஆங்கிலேயர்களுக்கு மட்டுமின்றி பொதுவான நவீன தொழிலாளி வர்க்கத்திற்காகவும் போராடுபவர்களாக இருந்தனர். அவர்களது தத்துவஞானிகள்தான் மூலதனம் என்ற கொள்கையின் மீது சுருக்குக் கயிற்றை வீசியவர்களாகவும் இருந்தனர்.

சாசன இயக்கம் குறித்து லெனின் ” முதல் முறையாக விரிவான தன்மை கொண்ட உண்மையிலேயே வெகுஜன தன்மை கொண்ட ,அரசியல் ரீதியாக மிகத் தெளிவான பாட்டாளி வர்க்கத் தன்மை கொண்ட புரட்சிகரமானதொரு இயக்கத்தை இங்கிலாந்து உலகத்திற்க்கு வழங்கியது.

பல்வேறு சமூக கருத்தோட்டங்கள்:

சாசன வாதிகளை தொடர்ந்து முதலாளித்துவ வர்க்கதிலிருந்தும் நடுத்தர வர்க்கதிலிருந்தும் பல்வேறு கற்பன வாதிகள் உருவாகினர் கூடவே பல்வேறு சமூக போக்குகள் வளர்ச்சி பெற்றதையும் வரலாறு கண்டது.முற்றுமுழுதான தொழிற்சங்க வாதம், பிளாங்கிய வாதம் ,பூரூதோனிய வாதம் ,பகுனியவாதம் போன்றைவை அடங்கும். இவை அனைத்தும் தொழிலாளி வர்க்கத்தின் மாபெரும் சாதனையான புரட்சிகர தத்துவத்தை உள்ளடக்கிய மார்க்சிய சோஷலிசம் உருப்பெரும் வரையில் நிலவி வந்த கருத்தோட்ங்களாகும்.

தொழிற்சங்க சட்டமும் வாக்குரிமையும்:

சட்டமன்றம் நீதிமன்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய ஆளும் வர்க்கங்களுக்கும் தொழிலாளி வர்க்கத்திற்க்கும் இடையே நடைபெற்று வந்த தொடர்சியான போராட்டத்தின் பின்னணியில் 19 ஆம் நூற்றாண்டுகளில் தொழிற்சங்களின் நடைமுறை வளர்ச்சி அமைந்திருந்தது. இந்த காலங்களில் தொழிலானது தொழிற்சாலை என்ற அமைப்புகுள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த நிலையில் தொழிற்சங்கள் முதலாளிகளுடன் கூட்டு பேரம் செய்வதற்கான வழிகள் உருவாகின. இங்கிலாந்தில் 1864 மற்றும் 1867 ஆம் ஆண்டுகளில் மக்கள் பிரதிநிதிவ சட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு முதல் முறையாக வாக்குரிமை பெற்றனர்.1868 ஆம் ஆண்டில் ஆங்கிலேய தொழிலாளி வர்க்கத்தின் மத்திய அமைப்பாக தொழிற்சங்க காங்கிரஸ் உருவாக்கப்பட்டது .1867 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் குறித்த அரசு கமிஷன் அறிக்கையை தொடர்ந்து1871 ஆம் ஆண்டில் தொழிற்சங்க சட்டம் நிறைவேற்றப்பட்டது. குற்றமாக கருதப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை நிலைமாறி முன்னேற்றம் அடைந்தது .இந்த அரசியல் பின்னணியில் தொழிலாளர்களை பிரநிதித்துவ படுத்தும் வகையில் இரண்டு வேட்பாளர்கள் நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக அனுப்பி வைக்கப்பட்டனர்.பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு தொழிற்சங்கங்களுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் மற்றும் முதலாளிகளுடன் கூட்டு பேரம் செய்யும் உரிமையும் கிடைத்தது.

பிரபுத்துவதிற்கும் முதலாளித்துவதிற்கும் இடையேயான போராட்டம்:

1848 ஆம் ஆண்டில் ஐரோப்பா கண்டத்தில் எழுந்த புரட்சிகள் தோற்கடிக்கப்பட்டதானது கிட்டத்தட்ட முதலாளித்து வர்க்கத்தை அரசியல் அதிகாரத்தில் பங்கு கேட்பதிலிருந்து ஒதுக்கி வைத்தது.பிரான்ஸ் நாடானது ராணுவம் ,அதிகார வர்க்கம் மற்றும் மூன்றாம் நெப்போலியன் செல்வாக்கிற்கு உட்பட்ட காவல்துறை ஆகியவற்றால் ஆளப்பட்டு வந்தது.ஜெர்மன் கூட்டாச்சியை சேர்ந்த மாநிலங்கள் ஒவ்வொன்றும் பல்வேறு இளவரசர்கள் , நிலப்பிரபுத்துவ அரச குடும்பத்தினர் அதிகார வர்க்கம் ஆகியவற்றின் கீழ் ஆளப்பட்டு வந்தனர். புரட்சிக்கு பின் அதன் தலைவர்கள் கொல்லப்பட்டனர் அல்லது நாடுகடத்தப்பட்டனர்.ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த தொழிலாளர் வர்க்கமானது சுயேச்சையான எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க தகுதியற்றதாக இருந்தது.

1860ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் மட்டும்தான் அமைப்பு ரீதியான தொடர்ச்சி முறையை பாதுகாத்து கொள்ள தொழிற்சங்கங்களால் முடிந்தது இவை வேகத்தையும் வலிமையையும் பெற துவங்கின.

– தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *