தமிழ்நாட்டில் ஜனநாயக சக்திகளின் ஆதரவை கோரும் மணிப்பூர் மாணவர்கள்

மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக மேலாக நடைபெற்று வரும் இன கலவரங்கள் தற்போது வரை தொடர்ந்து வருகிறது வன்முறையில் இதுவரை 120 -வதுக்கும் மேலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் 60,000 மக்கள் மாநிலத்தை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர் . ஒன்றிய அரசின் மோசமான அரசியல் சூழ்ச்சியால் பொருபான்மை சமூகமான மெய்தி இன மக்ககளுகக்கு சிறுபான்மை இன மக்களான குக்கி இன மக்களுக்குமான இன மோதலாக ஆரம்பித்து இப்போது மத கலவரமாக உருவெடுத்துள்ளது . மணிப்பூரில் நடைபெறும் வன்முறைய தடுத்து நிறுத்தவும் அமைதியான சூழல் திரும்பவும் வன்முறையால் மாநிலத்தை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ள மக்களுக்கு நிவாரணங்கள் உடனடியாக கிடைக்க வலியுறுத்தியும் சென்னை வந்துள்ள மணிப்பூர் மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகளின் ஆதரவுகளை கோரியுள்ளன கடந்த ஒரு வாரமாக பல்வேறு தலைவர்களை சந்தித்துள்ளனர் அதன் ஒரு பகுதி நேற்று (18/07/2023) சென்னையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தி தங்களது மாநிலத்தின் நிலவரங்களை எடுத்துரைத்தனர் நேற்றைய சந்திப்பில் திராவிட விடுதலை கழக பொதுசெயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தோழர் சுப உதயகுமார் அவர்கள் முன்னாள் IAS சசிகாந்தன் செந்தில்(காங்கிரஸ்) அவர்கள் தமிழ்நாடு தேசிய கட்சி தோழர்கள் கலந்துகொண்டனர் மற்றும் பல்வேறு ஜனநாயக சக்திகள் கலந்துகொண்டனர். மணிப்பூர் மாணவர்களின் இந்த முயற்சிக்கு துணைநிற்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *