இந்திய தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -5

இயற்கையாக நன்கு மிகப்பெரிய வளர்சியடைந்த தொழிலாளர் வர்க்கத்தை கொண்ட நாடாக இங்கிலாந்து விளங்கியது. தொழிற்சங்க வாதத்திற்கு முதலில் உயிர் கொடுத்த நாடு என்ற வகையில் சர்வதேச சகோதரத்துவம் சர்வதேச அமைப்பு போன்ற விசயங்களில் துவக்க கால பாட்டாளி வர்கத்தின் செயல்பாடுகளுக்கு களமாக இருந்தது.

முதலாளித்துவ அமைப்பு என்பதே சர்வதேச தன்மை கொண்டது அது போல தொழிலாளி வர்க்க இயக்கமும் அமைந்திருந்தது .சாசன இயக்கத்திலும் கூட சர்வதேச போக்குகள் காணப்பட்டன. பல்வேறு தன்மைகள் கொண்ட சர்வதேச இயக்கங்கள் பலவும் இங்கிலாந்திலிருந்து வெளிப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக எழுந்த புதிய பொருளாதார நெருக்கடியானது ப்ரெஞ்சு மற்றும் ஜெர்மானிய தொழிலாளர்களை மீண்டும் தட்டியெழுப்பியது .முன்பிருந்ததைவிட வலிமையான ஒரு இயக்கத்திற்கு அது வழிவகுத்தது. ஊதிய வெட்டுக்கு எதிராக பிரான்ஸில் தொடர்ச்சியான வேலை நிறுத்தங்கள் வெடித்து,பிரான்ஸ் தொழிலாளர்களிடையேயும் சர்வதேச போக்குகள் வெளிப்பட்டன. உண்மையில் 1789 ஆம் ஆண்டில் நடந்த பிரெஞ்சு புரட்சியின் நீட்சியாக தொடர்ந்து.

சர்வதேச உழைக்கும் மக்கள் கழகம்:

பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச குழுக்களின் பல்வேறு முயற்சிகளின் விளைவாக பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளி வர்க்கத்தின் பிரதிநிதிகளின் முதல் கூட்டம் 1864 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி லண்டனில் நடந்தது . இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளை தவிர அங்கு குடியேறி வசித்து வந்த பல்வேறு குழுக்கள் இதில் பிரதிநிதித்துவம் பெற்றன. இத்தாலியிருந்து கரிபால்டியின் உதவியாளர் ஒருவரும்,ஜெர்மனி சார்பில் கம்யூனிஸ்ட் தொழிலாளர் கல்விக் கழகத்தின் உறுப்பினர்களும் பங்கேற்றனர் . கார்ல் மார்க்சும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார் மத்திய கமிட்டியின் ஜெர்மன் உறுப்பினர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .அக்டோபர் மாதத் துவக்கத்தில் மத்திய கமிட்டி “சர்வதேச உழைக்கும் மக்கள் கழகம்” என்ற பெயரை ஏற்றுக்கொண்டதோடு அதன் நிர்வாகிகளையும் தேர்ந்தெடுத்தது.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முக்கியத்துவம்:

1848 ஆம் ஆண்டிலேயே வெளிவந்திருந்த “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையானது ஏற்கனவே மார்க்ஸின் அரசியல் மற்றும் சமூக சாரத்தை கொண்டதாக விளங்கியது . இது புதிய அமைப்பின் விதிமுறைகளை வரையறுப்பதிலும் ,அரசியல் திட்டத்தை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகித்தது.விதிமுறைகளுக்காக மார்க்ஸ் உருவாக்கியிருந்த நகலும் சர்வதேச அகிலத்தின் அறைகூவலும் ஒரு சில திருத்தங்களுடன் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன .இந்த அறைகூவலானது கம்யூனிஸ்ட் அறிக்கையின் வரலாற்று சிறப்புமிக்க கோஷமான ” உலகத் தொழிலாளர்களே! ஒன்று சேருங்கள் !” என்ற கோஷத்துடன்தான் முடிவடைந்தது.

இந்தக் கழகத்தின் அமைப்புச் சட்டத்தின் முன்னுரை ஐரோப்பிய தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணங்களில் ஒன்றாக உருப்பெற்றது எங்கு எதிரொலிக்கும் வகையில் அமைந்த அறிவிப்பானது :

உழைக்கு வர்க்கங்களின் விடுதலை என்பது உழைக்கு வர்க்கங்களாலேயேதான் அடையப்பட வேண்டும். உழைக்கு வர்க்கங்களின் விடுதலைகான போராட்டம் என்பதற்க்கு வர்க்கங்களுக்கான சலுகைகள் ஏகபோக உரிமைகளுக்கான போராட்டம் என்று பொருளல்ல மாறாக சம உரிமைக்கான , கடமைகளுக்கான அனைத்துவிதமான வர்க்க ஆட்சியையும் முற்றிலும் ஒழிப்பதற்கான போராட்டம் ஆகும்.

எனவே உழைக்கும் வர்க்கங்களின் பொருளாதார விடுதலை என்பது மகத்தான முடிவாகும்.ஒரு வழி என்ற வகையில் ஒவ்வொரு அரசியல் இயக்கமும் இதற்கு அடிபணிந்ததாகவே இருக்க வேண்டும்.

உழைப்பின் விடுதலை என்பது உள்ளளூர் அளவிலோ அல்லது ஒரு நாடு அளவிலோ ஆன பிரச்சினை இல்லை. நவீன சமூகம் இருந்து வருகிற அனைத்து நாடுகளையும் தழுவிய சமூகப் பிரச்சினையே ஆகும்.

வருங்காலம் அனைத்திலும் உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் வர்க்கங்களின் நடிவடிக்கைக்கான தோல்வியுறாத ஒரு வழிகாட்டியே இது என வரலாற்றில் பதியப்பட வேண்டும்.

நவீன தொழிலாளி வர்க்க இயக்கமானது முழுமையான வடிவத்தைப் பெற்றுள்ளது என்பதோடு , பல்வேறு விதமான முரண்பாடுகளின் மூலம் , எண்ணற்ற குழுக்களாக அமைவதன் மூலமும் மீண்டும் வேறு குழுக்களாக அமைவதன் மூலமும் முன்னேறி வந்துள்ளது. அது இப்போது உலகத்தையே கலகலக்கச் செய்துள்ளது. அது “இந்திய வர்க்க இயக்கத்தின் தோற்றம்” என்ற இந்த உலகளாவிய அம்சத்தின் பிரிக்க முடியாததொரு அங்கமே ஆகும்.

இதுவரை சர்வதேச பின்னனிகளை பார்த்தோம் அடுத்த பகுதியிலிருந்து “இந்திய தொழிலாளி வர்க்கத்தின் ” பகுதிகள் துவங்கும்

– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *