மத்திய தொழிற்சங்கங்களும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியும் இணைந்து அக்டோபர் 14ல் நடத்திய கூட்டத்தில் 2024 நவம்பர் 26ஆம் தேதி மாவட்டத் தலைமையகம் மற்றும் மாநிலத் தலைநகரங்களில் மாபெரும் பேரணியாக வரும் மாதத்தில் நாடு முழுவதும் விரிவான பிரச்சாரம் செய்ய முடிவு செய்தன.
ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான மக்கள் விரோத கொள்கைகளை ஒன்றிய அரசு கடைபிடித்து வருகிறது. அவை தேசிய செல்வத்தை அபரிமிதமாக கொள்ளையடித்து வருகின்றன.
ஆர்எஸ்எஸ் பாஜக அரசின் இந்தக் கொள்கைகளால், நாட்டின் செல்வங்கள் அனைத்தையும் தங்கள் தமது
உழைப்பின் மூலம் உருவாக்கி தரும் தொழிலாளர்களும் விவசாயிகளும் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். தொழிலாளர்களும், விவசாயிகளும் கோரிக்கைகளுக்கு தனித்தனியாக போராடுவது மட்டுமின்றி, அந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரி விப்பதோடு இணைந்தும் போராடி வருகின்றனர்.
கோவிட்19 தொற்றுநோய் மற்றும் அனைத்து வகையான அரசு அடக்குமுறைகளையும் எதிர்த்து 13 மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தின் போது இந்த ஒற்றுமை வலுப்பெற்றது. சர்ச்சைக்குரிய அந்த மூன்று விவசாயச் சட்டங்களை பிரதமர் திரும்பப் பெற வேண்டியிருந்தது. ஆனால் விவசா யிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும்போது, இந்திய அரசு நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்ட ஏழு கோரிக்கைகளை இன்னும் நிறைவேற்றவில்லை.
44 தொழிலாளர் சட்டங்களை சுருக்கி நான்கு சட்ட தொகுப்புகளாக ஒன்றிய அரசு சுருக்கி அதன் மூலம், தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்த உரிமைகள் யாவும் இந்தியா அடிமைப்பட்டிருந்த காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்தும், விடுதலை அடைந்த பின்னும். 150 ஆண்டுகள் தொடர்ந்து போராடி பெற்ற உரிமைகளாகும். கார்ப்பரேட்டுகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே. தொழிலாளர் உரிமைகளை ஒன்றிய அரசு பறிக்கிறது. இந்தியா ஒப்புக் கொண்டுள்ள, பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) இணக்க விதிகளை ஒன்றிய அரசு மீறுகிறது. உயர்மட்ட முத்தரப்பு அமைப்பான ஐஎல்சியைக் கூட்ட மறுக்கிறது. தனது 4 புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளை, வலுக்கட்டாயமாக அமலாக்க ஒன்றிய அரசு துடிக்கிறது. இவை செயல்படுத்தப்பட்டால், தொழிற்சங்கங்களைப் பதிவு செய்வதே கடினமாகிவிடும். தொழிற்சங்கத் தலைவர்களுக்கு எளிதில்
சிறைத்தண்டனை விதிக்கலாம். மாறாக
விதிகளை மீறும் முதலாளிகளுக்குத்
தற்போதுள்ள சிறை தண்டனைகள்
அனைத்தும் ரத்து செய்யப்படுவதோடு, அபராதத்தொகைகளும் மிகக் கணிசமாகக் குறைக்கப்படுகின்றன.
100 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் ஆலைகளை மூடுவது, லேஆப் விடுவது, ஆட்குறைப்பு செய்வதெனில் அரசிடம் அனுமதி பெற்றாக வேண்டும் என்ற தொழில் தகராறு சட்ட விதிகள் உள்ளன. இனி 300 தொழிலாளர்கள் வரை பணிபுரியும் நிறுவனங்கள், தமது விருப்பம் போல மூடிக் கொள்ளலாம், தொழிலாளர்களை வெளியேற்றலாம் என மாற்றியுள்ளார்கள். இதனால் தற்போதுள்ள தொழிலகங்களில், 70 சதவீத நிறுவனங்களுக்கு இனிமேல் இந்த சட்டங்கள் பொருந்தாது. இதனால் தொழிலாளர்களை விரும்பினால் வேலைக்கு எடுத்து, வேண்டாம் என்றால் அந்த நிமிடமே வெளியேற்றும் அதிகாரம் முதலாளிகளுக்கு வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, தற்போது 20 தொழிலாளர்களை வைத்திருக்கும் ஒப்பந்ததாரர், சட்டப்படி பதிவு செய்து கொள்ள வேண்டும். இனிமேல் 50 பேருக்கு மேல் இருந்தால் மட்டும் பதிவு செய்தால் போதும் என வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ‘தொழிற்சாலை ‘இது ஒப்பந்தத் தொழிலாளர்களின் சுரண்டலை மேலும் அதிகரிக்கும்.
இதைப் போலவே, மின்சாரத்தை பயன்படுத்தி இயங்கும் தொழில்களில், 10 பேருக்கு மேல் வேலை பார்த்தால், தொழிற்சாலை என்று இப்போது 2 சட்டம் சொல்கிறது. இனி இருபது பேர் இருந்தால் தான் ‘தொழிற்சாலை’ என வரையறை மாற்றப்படுகிறது. இதை வகை 5 பேர் கொண்ட மின்சாரத்தை பயன்படுத்தாத கைத்தறி போன்ற தொழில்களில், இப்போது 20 பேர் பணிபுரிந்தால் தொழிற்சாலை என்று இருப்பது இனிமேல் 40 பேர் பணி புரிந்தால் தான் தொழிற்சாலை ஆகும் என்று மாற்றப்படுகிறது. எனவே தற்போது தொழிற்சாலை என்ற வரையறைக்குள் வரும் பல நிறுவனங்கள் இனிமேல் தொழிற்சாலை இல்லை என்றாகிவிடும் அவற்றுக்கு தொழிலாளர் சட்டங்கள் பொருந்தாது.
தொழிலாளர் நீதிமன்றங்கள் முடக்கப்படுகின்றன. சட்டப்படி தொழிலாளர் துறை முன்பு சமரசப் பேச்சுவார்த்தைகள், இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்துவது நடைமுறைச் சாத்தியமில்லாததாக கடின நடைமுறைகளாக வருகின்றன. தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் 4 பற்றிய (OSH) சட்டத் தொகுப்பு, பெரும்பகுதி தொழிலாளர்களை சமூகப் பாதுகாப்புத் திட்டங்களிலிருந்து வெளியே தள்ளப்படுகிறார்கள். குறிப்பாக ஏழை, அமைப்பு சாராத தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப் படுவார்கள். அனைத்துத் தொழிலாளர்களையும் உள்ளடக்குவதாக . அரசு வாயளவில் கூறினாலும், சட்ட 5 விதிகள் அதற்கு நேர்மாறாக உள்ளன. தற்போதுள்ள சமூக பாதுகாப்பு அமைப்புகளை பலவீனப்படுத்தி, செயலிழக்க வைக்கப்படுகின்றன. வருங்கால வைப்பு நிதி (EPFO), மற்றும் மருத்துவ சிகிச்சை, காப்பீடு (ESI) திட்டங்கள் இரகசியமான முறையில் தனியார்மயமாக்கலை நோக்கித் தள்ளப்படுகின்றன.
அமைப்பு சாராத தொழிலாளர்களைப்
பாதுகாக்க நலத்திட்டங்களைப் பேசினாலும், அதற்கென பட்ஜெட்டுகளில் நிதி ஒதுக்கீடு எதுவும் இல்லை.குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் பட்டியலில் இருந்து பல்வேறு சிறிய தொழில்கள் நீக்கப்படுகின்றன. ‘ஊதியம்` என்பதன் வரையறையுமே மாற்றப்படுகிறது. தொழிலாளர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் ஊதியத் தொகை குறைக்கப்படுகிறது.
நாட்டின் சுயச்சார்பு மற்றும் இறையாண்மைக்கு ஆபத்தைவிளைவிக்கும் வகையில், பொதுத்துறை நிறுவனங்களை பங்கு விலக்கம் என்ற பெயரில் தனியாருக்கு தந்து கொண்டிருக்கிறார்கள். நிரந்தர தொழிலாளர்களை அகற்றி, அவுட்சோர்சிங், காண்ட்ராக்ட் முறைகளை அரசே அமுலாக்குகிறது. சர்வதேச நிதி மூலதனத்துக்கு, இந்திய பொருளாதாரம் இரையாக்கப்படுகிறது.
ஐம்பதாண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டது. அரசுக் கொள்கைகளே இதற்கான அடிப்படைக் காரணமாகும். நம் நாட்டின் இளைஞர்களுக்கு
வாழ்க்கை நிச்சயமற்ற விதிக்கப்பட்டுள்ளது.
கல்வியும், மருத்துவமும் பெருமளவுக்கு தனியாரிடம் கைமாற்றப்பட்டு விட்டன. கல்வி,
மருத்துவத்தில் அரசு நிதி ஒதுக்கீடுதொடர்ந்து குறைக்கப்படுகிறது.பணமில்லை எனில் கல்வியும்,மருத்துவமும் சிகிச்சையும் ஏழை
எளியவர்களுக்குக் கிட்டாது!
சமூக நலத் திட்டங்களின் மீதான
வெட்டுக்களும், அத்தியாவசியப்
பொருட்களின் விலைகள் தொடர்ந்து
உயர்வதும், சாமானியர்கள் மீதான மறைமுக வரிகள் அதிகரிப்பதும், ஏழை உழைக்கும் மக்களின் வாழ்க்கையைப் பரிதாபமாக்கி வருகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு “தொழில் நடத்துவதை எளிதாக்குதல்” என்ற பெயரில் ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. சமூகத்தில் அதீத ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகின்றன. மக்கள் தொகையில் உயர்மட்டத்தில் உள்ள 1% பேரின் கையில், நாட்டின் சொத்துகளில் 40.5% உள்ளது. அதே சமயம் அடிமட்டத்தில் உள்ள 50% மக்களிடம் (70 கோடிப் பேர்) செல்வத்தில் மூன்று சதவீத பங்கு மட்டுமே உள்ளது.
வேலையின்மையால் விரக்தியடைந்த இளைஞர்களின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன; குற்றப் பணியகம் வெளியிட்ட கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, தற்கொலை செய்து கொள்பவர்களில் 25 சதத்தினர், தினக்கூலித் தொழிலாளராவர். 2024 ஆம் ஆண்டின் உலகளாவிய பட்டினிக் குறியீட்டு அறிக்கையின்படி, 127 நாடுகளில் நமது நாடு 105 வது இடத்தில் வீழ்ந்துள்ளது. நமது பக்கத்து நாடுகளை விட நாம் பின்தங்கி இருக்கிறோம். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புகளில் 65 சதம் பேர் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் இறக்கின்றனர் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் ஒன்றிய அரசே ஒப்புக் கொண்டுள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, எதிர்க்குரல் எழுப்புபவர்களை, வெகுஜன இயக்கங்களைத் தாக்குகிறது. எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒடுக்குவதற்கு, அரசாங்க இயந்திரத்தைப் பயன்படுத்தி, அமலாக்கத்துறை, மத்தியப் புலனாய்வுத்துறை,சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்பு தேசியப் புலனாய்வு முகமை, தேசத்துரோகச் சட்டம் போன்றவற்றை அப்பட்டமாகப் பயன்படுத்துவதே இந்த அரசாங்கத்தின் முதன்மை,அடையாளமாகிவிட்டது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்தால், குற்றவாளிகளைப் பாதுகாக்கக் ஆர்எஸ்எஸ் பிஜேபி உடந்தையாக இருக்கின்றன. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை இழைத்துச் சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது, சிறையிலிருந்து வெளிவரும் குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்து கொண்டாடுவது இவர்களின் வழக்கமாக இருக்கிறது. கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் பெண்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் பெண்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது, பணி யிடங்களில் பாதுகாப்பற்ற சூழல் மேலும் மேலும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. சமூகத்தை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்தும் முயற்சிகள் தொடர்கின்றன. நாடாளுமன்ற மக்களவை சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரத்தில் உள்ள நபர்கள், மத வெறியைத் தூண்டும் வகையில் சர்வ சாதாரணமாகப் பேசுகிறார்கள். பொது மக்களின் அமைதியான மற்றும் இணக்கமான வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்கிறார்கள். இந்தியத் தொழிலாளர்களும், விவசா யிகளும் மற்ற சமூக நலம் வீரத்தோடு எதிர்த்துப் போராடி, பல தியாகங்களை செய்து பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து விடுதலையை வென்றெடுத்தார்கள். விடுதலை அடைந்த இந்தியாவின் ஆட்சி நிர்வாகத்துக்கான விதிமுறைகளை வரையறுத்து அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது. அந்த அரசியல் சாசனத்திற்கு எதிராக, இன்றைய ஒன்றிய அரசு நடக்கிறது.
விடுதலைப் போராட்டத்தோடு சேர்ந்து பிறந்த ஏஐடியுசி, இந்திய தொழிற்சங்கங்களின் முன்னோடி மையமாகும். இந்திய விடுதலையையும், தேசிய இறையாண்மையையும் காப்பாற்றவும், மதச்சார்பற்ற ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் மற்றும் கருத்து வேறுபடும் உரிமை ஆகியவற்றை அடிப்படை விழுமியங்களாகக் கொண்ட அரசியலமைப்பைக் காப்பாற்றவும் ஏஐடியுசி உறுதி பூண்டுள்ளது. வாழ்வாதார ஊதியம், காண்ட்ராக்ட் மற்றும் அவுட்சோர்ஸ் முறைகளை உறுதியாக எதிர்த்தல், பணியிடப் பாதுகாப்பு, அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு, அனைவருக்கும் ஓய்வூதியம் ஆகியவற்றிற்காக ஏஐடியுசி தொடர்ந்து போராடுகிறது.
ஏனைய தொழிற்சங்கங்கள், விவசா யிகள் மற்றும் சமூகத்தின் பிறபிரிவினருடன் சேர்ந்தும், அவற்றின் ஒற்றுமையை முன்னிலைப்படுத்தியும், போராட்டத்தைத் தொடருவோம். அனைவருக்கும் சமத்துவம், அனைவருக்கும் நீதி, சுரண்டலற்ற சமுதாயம் ஆகியவற்றை நோக்கிப் போராடி முன்னேறுவோம்.
– அமர்ஜித் கவுர் பொதுசெயலாளர்
(ஏஐடியுசி)
தமிழில்: டி.எம்.மூர்த்தி
நவம்பர் 17ல் ஜனசக்தியில் வெளியான கட்டுரை.
Leave a Reply