சென்னை இருங்காட்டுக்கோட்டை ஹூண்டாய் தொழிற்சாலையில் 08.09.2023 அன்று பணியிடத்தில் மாரடைப்பால் உயிரிழந்த தொழிலாளர் திரு. பூபதி அவர்களின் குடும்பத்திற்கு வேலை வழங்க கோரி, CITU தலைமையிலான HMIEU சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது.
அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்களுக்கு, இரண்டரை ஆண்டுகள் கழித்து, 78 பேருக்கு எதிராக “ஏன் தண்டனை வழங்கக்கூடாது” எனக் குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. அதில், 10 தொழிலாளர்களை ஏன் பணிநீக்கம் செய்யக்கூடாது என்பதற்கான காரணத்தை நிர்வாகம் விளக்கம் கேட்டுள்ளது.
குறிப்பிட்ட 48 மணி நேரத்திற்குள் பதில் அளிக்காததை முன்னிட்டு, Hyundai Motor India நிர்வாகம் 10 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து, மேலும் 68 தொழிலாளர்களை ஒரு மாதத்திற்கு இடைநீக்கம் செய்துள்ளது.
நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கையை கண்டித்து, இன்று United Union of Hyundai Employees சார்பில் தொழிற்சாலையில் உணவு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
ஹூண்டாய் நிர்வாகத்தின் இத்தகைய தொழிலாளர் விரோத போக்கை ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. பணிநீக்கம் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக மீண்டும் பணி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.
இப்படிக்கு,
ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பு.
