
ஆவடி வீராபுரம் அருகில் அமைந்துள்ள செலிபிரிட்டி ஃபேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நான்காவது நாளாக தொடர்கிறது..
10 ஆம் தேதி DCLல் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சில உடன்பாடுகள் ஏற்ப்பட்டதால் அன்று இரவு போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டு இந்த மாதம் 30ஆம் தேதி வரை பணி செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டது.
11ஆம் தேதி வேலைக்கு வந்த தொழிலாளர்களிடம் நிர்வாகம் நாளை முதல் போக்குவரத்து நிறுத்தப்படுவதாகவும் யாரும் பணிக்கு பணிக்கு வர தேவையில்லை இந்த மாதம் ஊதியம் மட்டும் தருவதாகவும் தெரிவித்துள்ளது . நாளை 13 ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்த DCL ல் ஒப்புக்கொண்ட பிறகு நிர்வாகம் கோரிக்கைகளில் பின் வாங்கியதால் தொழிலாளர்கள் மீண்டும் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்கிறார்கள் நாளை பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்
நிர்வாகாத்தால் கட்டாயப்படுத்தி வேலையை ராஜினாமா செய்ய வைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இதுவரை PF பணிப்பலன்கள் வழங்கப்படவில்லை. நேற்றைய போராட்டத்தில் அந்த தொழிலாளர்கள் ஆலை முன்பு கூடியதால் நிர்வாகம் அவர்களுக்கான PF தொகை 16ஆம் தேதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது .
ஆலையின் வாயில் கதவு மூடப்பட்டுள்ளது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் சந்தித்து உணவு பொருட்கள் வழங்கி வருகிறார்கள். அருகில் உள்ள தொழிலாளர் தோழமை அமைப்புக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.