
கொரோனா :
என் கண்ணுக்குத் தெரியாதவன்,
என் இருதயம் நிறுத்துகிறான்!
என் அறிவுக்குள் அடங்காதவன்
இவ்வுலகை அடக்குகிறான்
சீன தேசம் உன் தாய் வீடு
சின்னா பின்னம் எங்கள் நாடு !
விழிக்கு தெரியாத படையோடு
கொன்று குவித்தாய் அடியோடு!
இறந்தோர் கணக்கை எண்ணிக் கொண்டு
வீட்டிலே கிடந்தோம் ஊரடங்கு
முகத்தில் கவசம் அணிந்து கொண்டு
சக மனிதரைக் கண்டோம் பயம் கொண்டு
எப்படி வந்தாய் எப்படி போனாய்
எவருக்கும் தெரியாது
காலமும் பல நாள் கடந்து போயினும்
மறந்திட முடியாது
மனிதன் மீது தொடுக்கப்பட்ட
உயிர் போர் இதுதானா
நாளை மூன்றாம் உலகப்போரின்
கருவியும் இது தானா!
உந்தன் உண்மை பெயர் தான் என்ன
அழிவுகள் தானா
நாங்கள் உனக்கே !
வைத்த பெயர் தான் கொரோனா!
கிரெடிட் கார்ட் :
கடனாளி ஆனேன் கடன் அட்டையால
வட்டி மேல வட்டி எந்தன் தலை மேல
பார்க்கும் பொருளை எல்லாம்
வாங்க சொல்ல நினைக்கும்!
மாசா மாசம் தவணை
என் கழுத்தை நெறிக்கும்
ஆபத்துக்கு உதவும்
என்று எண்ணி இருந்தேன்!
ஆபத்தாய் மாறும் !
என்று எண்ண மறந்தேன்!
வாங்கிய கடனை அடைப்போம்!
இந்த கடன் அட்டையை உடைப்போம்!
நம்மைப் பிடித்த ஏழரை சனி!
விட்டு தொலைந்ததென்று சிரிப்போம்!
லீப் ஆண்டு :
காதலர் மகிழும் மாதத்தில்
காலத்தில் சிதறிய சில்லரைகள்
ஒன்றிணைந்து ஓர் நாளாகியது
நான்காண்ட்டுக்கு ஒருமுறை
அந்நாள் நம்மோடு சேர
சிறப்பு கூடும் லீப் ஆண்டாகியது
பண்டிகை நாளில்லை என்றாலும்
தனித்தே அதற்கொரு சிறப்புடையது
அப்படி என்ன தான் நாள் அது
ஆம்! அதுதான் பிப்ரவரி 29
இவ்வொரு நாளை பெற்றெடுக்க
நான்காண்டு கரு சுமந்த பூமி தாய்
அவளின் பொறுமையை உணர்த்துகிறாள்!
இந்நாளில் பிறந்தோர்
பிறந்தநாள் காண்பதரிது
இருந்தாலும் பரவாயில்லை
கேக் வெட்டும் செலவோ அதனால் குறைவு
உன்னை அச்சிட்ட தேதி கிழிக்க
மீண்டும் நான்காண்டு காத்திருப்போம்…
. – பேச்சி ராஜா