. தொழிலாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்பு எதிராகவும் மக்கள் விரோத பல்வேறு சட்டங்களுக்கு எதிராகவும் இன்று நாடு முழுவதும் நடைபெற்ற வேலைநிறுத்த போராட்ட கோரிக்கைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக ஒருமைப்பாடு மன்றம் ஒருங்கிணைத்த நிகழ்வில் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டை , ஒரக்கடம் சிப்காட் தொழிலாளர்கள் பிப்ரவரி 12 மாலை இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்து கடிதம் வழங்கினார்.


அதன் தொடர்ச்சியாக தொழிலாளர் தோழர்களின் கண்டன கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஹுண்டாய், ரெனால்ட் நிசான், விப்ரோ, ராயல் என்ஃபீல்டு,சான்மினா, பின் ஸ்டார், சிம்சன்,மதர்தன் ஸ்விங் ஸ்டெட்டர் போன்ற பல்வேறு தொழிற்சாலை தோழர்கள் கலந்து கொண்டனர் தொழிற்சங்க நிர்வாகிகள் முன்னனி தொழிலாளர்கள் தங்களது கண்டனத்தை எதிர்ப்பை பதிவு செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட சிப்காட் பகுதிகளில் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் தொடர் வேலைத்திட்டங்களை வலியுறுத்தி தோழர்களின் உரை இருந்தது. எதிர்காலம் தொழிலாளர் வர்க்கத்திற்கு கடும் சாவல் நிறைந்ததாக இருக்கும் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்
-Ramprabhu N
#workerssolidarityforum #AllIndiaStrike #workingclass #orumaipadumandram #Irrungattukottai #Sriperumbudur #Sipcot
