கடந்த 2025 நவம்பர் 21 தேதி மோடி அரசு அமல்படுத்தியுள்ள நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை அமல்படுத்தியுள்ளது . கொரோனா காலக்கட்டத்தில் எந்தவித விவாதங்களும் இல்லாமல் இந்த தொழிலாளர் சட்டத்தொகுப்பு வரைவுகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன அதன் தொடர்ச்சியாக இப்போது சட்டமாக அமல்படுத்தட்டுள்ளது. ஒவ்வொரு மாநில அரசும் இதற்கான விதிகளை வகுத்தது செயல்படுத்த வேண்டும்.தமிழ்நாடு அரசு 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8மணி நேரம் வேலை நேரத்தை 12மணி நேரமாக மாற்றும் சட்டத்தை கொண்டு வந்தது கடுமையான எதிர்பின் காரணமாக பின்வாங்கியது. ஏற்கனவே முதலாளியிகளின் செல்ல பிள்ளையாக தான் அரசு செயல்படுகிறது ஒரு தொழிற்சங்க அமைப்பது எத்தகைய கடுமையான போராட்டம் என்பது அணைவரும் அறிந்ததே புதிய தொழிலாளர் சட்டத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்னவென்பதை பார்க்க வேண்டும்.
இந்நிலையில் புதிய தொழிலாளர் சட்டங்கள் தொடர்பாக நிறைய புத்தகங்கள் வந்துள்ளது அதில் இதுவும் குறிப்பிடத்தக்க புத்தகமாக உள்ளது . ஐரோப்பாவில் 18 நூற்றாண்டின் இறுதியிலும் 19 நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஏற்பட்ட தொழிற்புரட்சி அதை தொடர்ந்து இந்தியாவிலும் பல்வேறு சுரங்கங்கள்,
பஞ்சாலைகள்,இரயில்வே , துறைமுகங்கள் என பல்வேறு துறைகளிலும் தொழிலாளர் போராட்டங்கள் தொழிற்சங்க உரிமைகளை நிலைநாட்டும் உரிமைகளுக்காக பல்வேறு தொழிலாளர்களின் உயிர் தியாகங்கள் என பல வரலாற்று சம்பவங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. வரலாற்று சம்பவங்களை தெரிந்து கொள்வதான் மூலமாக கடந்த கால தொழிலாளர் வர்க்கத்தின் செயல்பாடுகளையும் நிகழ்கால தொழிலாளர் வர்க்கத்தின் பலவீனங்களையும் நாம் விவாதிக்க முடியும்.
பிரிட்டிஷ் இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டம் காரணமாக கொண்டுவரப்பட்ட பல்வேறு சட்டங்களை செயல்படுத்தவும் நீண்ட நெடிய போராட்டங்களை நடத்தியுள்ளனர் .1942 நவம்பர் 27 ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற 7ஆவது தொழிலாளர் மாநாட்டில் 14 மணி நேர வேலை என்பது 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது .1943 இல் முதலாளிகள் தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்கு பிறகு தொழிலாளர் நலன்கள் அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படை உரிமை பகுதியில் இல்லாமல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பகுதியில்தான் இணைக்கப்பட்டன.பிரிவு 39,41,42,43,43ஏ ஆகியவை தொழிலாளர்களுக்கு அரசு செய்யவேண்டிய கடமையை வலியுறுத்துகின்றன. சுதந்திர இந்தியாவின் முதல் அகில இந்திய வேலைநிறுத்தம் 1982 ஜனவரி 19 இல் நடந்துள்ளது நாடுமுழுவதும் நடடத்த போராட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியாயினர்.தமிழ்நாட்டில்நாகை மாவட்ட திருமெய்ஞானம் கிராமத்தில் இரண்டு விவசாயிகள் மன்னார்குடியில் என்று ஒரு விவசாயி என மூன்று போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியினர்.இப்படி பல்வேறு தொழிலாளர்களின் தியாகத்தால் நாம் அனுபவித்து வரும் குறைந்தபட்ச சட்ட பாதுகாப்பு சட்டங்களை அனுபவித்து வந்தோம்.
புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பு என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெரும் முதலாளிகளுக்கும் சாதகமான அம்சங்களை இந்த சட்டத் தொகுப்பு கொண்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 144ஆவது தீர்மானங்களை ஏற்றுக்கொண்டுள்ள இந்தியா தொழிலாளர் முத்தரப்பு (அரசு , தொழிலாளர் பிரதிநிதிகள், முதலாளிகள்)மாநாடுககளை முறையாக நடத்தவில்லை கடந்த 2015 ஒரு மாநாடு மட்டுமே நடந்துள்ளது அதன்பிறகு எதுவும் நடக்கவில்லை மோடி அரசு பதவியேற்ற 2014 முதல் தற்போது வரை ஒருமுறைதான் நடந்துள்ளது.ஆனால் புதிய தொழிலாளர் சட்டத்தை மிகப்பெரிய சாதனையாக மோடி அரசு பிரச்சாரம் செய்துவருகிறது கொரோனா காலத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்த நேரத்தில் எந்தவித விவாதங்களும் இல்லாமல் வெறும் 40 நொடிகளில் சட்டவரை அமலாக்கப் பட்டுள்ளது.
*ஊதிய சட்டங்கள் தொகுப்பு -2019
*தொழிற்சார் உறவுகள் சட்டங்கள் தொகுப்பு -2020
*சமூக பாதுகாப்பு சட்டங்கள் தொகுப்பு -2020
தொழில்சார் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிச்சூழல் நிபந்தனைகள் சட்ட தொகுப்பு – 2020
ஊதிய தொகுப்பு சட்டத்தில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் எந்தவொரு காரணிகளும் இணைக்கப்படவில்லை ஒரு குடும்பத்திற்கு தேவையான ஊட்டச்சத்து உணவு, உடைகள் எரிபொருள் மின்சாரம்,கல்வி, சுகாதாரம், கேளிக்கைகள் போன்ற காரணிகளுக்கு பதிலாக தொழிலாளர்களின் திறன் மற்றும் பணி நிலைமைகள் என்ற இரண்டு அளவீடுகளை மட்டும் வைத்து ஊதியம் நிர்ணயம் செய்யலாம் என்கிறது புதிய சட்டம்.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அவர்களுடைய ஒப்பந்தரார் ஊதிய வழங்கவில்லையொன்றால் முதன்மை வேலையளிப்பவர் பெறுப்பேற்க வேண்டும் ஆனால் புதிய சட்டத்தில் முதன்மை வேலையளிப்பவரான நிர்வாகத்தை இந்த நெருப்பிலிருந்து நீக்குகிறது புதிய சட்டம்.
பி.எஃப் (PF) மீதான தாக்குதல் தொழிலாளர் மற்றும் நிர்வாகம் செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதி (EPF) பங்களிப்பு விகிதம் 12%-லிருந்து 10%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ‘ஊதியம்’ என்பதன் வரையறை மாற்றப்பட்டுள்ளதால், பி.எஃப் கணக்கிடப்படும் அடிப்படைத் தொகையே குறையும். இதனால் ஓய்வுக்காலத்தில் தொழிலாளிக்குக் கிடைக்க வேண்டிய பெரும் தொகை முதலாளிகளின் லாபத்திற்காகப் பறிக்கப்படுகிறது.
புதிய தொழிற்சார் உறவுகள் சட்டங்கள் 12மணி நேர வேலை நேரத்தை அனுமதிக்கிறது
புதிய தொழிற்சார் உறவுகள் சட்டம் பிரிவு 62 முன்பு பொதுப்பயன்பாட்டு சேவைகள் அல்லாத பிற நிறுவன தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய முன்அனுமதி தேவையில்லாமல் இருந்தது இது தற்போது அனைத்து நிறுவனங்களும் பொருந்தும்படி உள்ளது. முன் அறிவிப்பு நோட்டீஸ் 15 நாட்களில் விருந்து 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரிவு 6 தொழிற்சங்க பதிவுகளை கடினமான மாற்றியுள்ளது தொழிலாளர்களின் கூட்டு பேர உரிமையை தடுக்கிறது.பிரிவு 23 தொழிற்சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளில் பல கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது.
ஒரு ஆலையில் 100 தொழிலாளர்கள் இருந்தால் பணிநீக்கம், பணி விலக்கம், கதவடைப்பு அல்லது ஆலையை மூட வேண்டுமென்றால் அரசின் முன் அனுமதி பெற வேண்டும் புதிய சட்டத்தில் இந்த எண்ணிக்கையை 300ஆக உயர்த்தியுள்ளது இதனால் 90 சதவீதம் தொழிலாளர்கள் எந்தவித சட்ட பாதுகாப்பு இல்லாத நிலைக்கு உள்ளாகப்படுகிறார்கள்.
தொழிற்சாலை ஆய்வாளர் என்ற பதவி நீக்கப்பட்டு (factory inspector) ஒருங்கிணைப்பாளர் (facilitator) முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
தொழிலாளர் நீதிமன்றங்கள் களைக்கபடுகிறது அதற்கு பதிலாக ஒருங்கிணைந்த தொழிற் தீர்ப்பாயங்கள் கொண்டு வரப்படுகின்றன ஏற்கனவே குவிந்து கிடக்கும் வழக்குகளின் நிலை கேள்விகுறியாக உள்ளது
1981 இல் இயற்றப்பட்ட தமிழ்நாடு வேலை நிரந்தர சட்டம் ஒரு தொழிலாளர் ஒரு ஆண்டில் 480 நாட்கள் பணி புரிந்தால் அவர் நிரந்தர தொழிலாளராக மாற சட்டம் உள்ளது.இதன் மூலம் பல தீர்ப்புகள் பெறப்பட்டுள்ளது.
புதிய தொழிலாளர் சட்டத்தின் சட்டப்படியான ஒப்பந்த , பயிற்சி தொழிலாளர் முறை நிரந்தர வேலைவாய்ப்பு இனி எங்கும் இல்லை என்ற நிலையை காட்டுகிறது
புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை இன்னும் விரிவாக தொழிலாளர் வர்க்கம் தெரிந்துகொள்ள இது போன்ற புத்தகங்கள் பயன்படும்.
கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு கட்டற்ற சுதந்திரம் வழங்கும் புதிய தொழிலாளர் சட்டம் நூறாண்டு காலம் போராடி பெற்ற உரிமைகளை பின்னோக்கி இழுக்கும் இதுபோன்ற சட்டங்களை முறியடிக்க வேண்டிய கடமை தொழிலாளர் வர்க்கத்திற்கு உள்ளது.
வெளியீடு:பாரதி புத்தகாலயம்
-Ramprabhu N
