காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டம் தொழிற்சாலைகளின் குவி மையமாக இருக்கும் நிலையில் தொழிலாளர்கள் சங்கமாக திரள்வதை விரும்பாத கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்து சட்டவிரோத வழிமுறைகளையும் பயன்படுத்தி தொழிலாளர்களை சஸ்பென்ஷன் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் .
தொழிலாளர்கள் தங்கள் வேலை மற்றும் தொழிலாளர் உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள ஒரு பக்கம் போராட்டங்கள் என்றாலும் இன்னொரு பக்கம் தொழிலாளர் சட்டங்களின் மூலமாக தொழிலாளர் துறை பயன்படுத்தி தற்காப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்
தொழிலாளர்களின் வழக்குகளை குறித்த காலத்தில் தீவிரமாக நடத்த வேண்டிய தொழிலாளர் துறை மிகுந்த கால தாமதத்துடன் வழக்குகளை நடத்தி வருவது என்பது வாடிக்கையாகி விட்டது .
குறிப்பாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட நிலையில் இரண்டு மாவட்டங்களுக்கும் தற்போது தொழிலார்துறை தனித்தனி அலுவலகங்கள் உருவாக்கப்பட்டிருக்கும் பின்னணியில்
தொழிலாளர்துறைக்கான அதிகாரிகள் மட்டும் இரண்டுக்கும் ஒருவரே என்ற நடைமுறை பின்பற்றுகிறது
வேலைநாள் முழுவதும் வழக்குகள் நடத்த வேண்டிய தொழிலாளர் துறை பெரும்பாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் ஆணையர் அலுவலகத்திற்கும் அவசர அழைப்பின் பேரில் செல்வதும் வழக்குகள் தள்ளிப் போவதும் தொடர்கதையாக நீடிக்கின்றன
மேலும் பொருத்தமான அதிகாரிகளை தனித்தனி அலுவலகத்திற்கு நியமிக்காமல் ஒருவர் மீதே வேலை பலுவை சுமத்துவதும் தொழிற் தகராறுகள் குறித்து அக்கறையற்ற செயல்பாட்டில் வெளிப்படாகவே பார்க்க முடிகிறது
கிட்டத்தட்ட தொழிலாளர் துறையின் வேலை நாள் என்பது வாரத்தில் இரண்டு நாட்களாக சுருக்கப்பட்டு விட்டன
புதிய சட்ட தொகுப்புகள் அமலாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள தமிழக தொழிலாளர் துறை
அந்த பணிகளிலும் தொழிலாளர் அதிகாரிகளை ஈடுபடுத்துகிற போது மேலும் தொழிலாளர் துறையே இக்காலத்தில் செயல்படாத நிலையை நோக்கி சென்றுள்ளன
மேற்கண்ட இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவது தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவே இருக்கிறது.
எஸ் எச் எலக்ட்ரானிக்ஸ் தொழிலாளர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணி நீக்கம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர்
சாம்சங் வழக்குகளும் இதேபோல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இது போன்ற ஏராளமான வழக்குகள் தமிழகத்தில் அதிக அளவில் தொழில் தகராறுகள் தேங்கி இருக்கும் பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் இருக்கின்றன இது குறித்தெல்லாம் கவலைப்பட வேண்டிய தொழிலாளர் துறை அமைச்சர்
ஏது செய்வதென்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய உத்தரவுக்கு
தொழிலாளர் துறை கட்டுப்படுவதாக தெரியவில்லை
தொழிலாளர்களுடைய பிரச்சனைகளின் தீவிரத் தன்மை கருதி தமிழக தொழிலாளர் துறை காலதாமதம் இல்லாமல் தொடர்ந்து வழக்குகள் நடத்தவும் அதிகாரபூர்வ விடுமுறை நாட்களைத் தவிர அனைத்து நாட்களும் தொழிலாளர் அலுவலகம் செயல்படும் அலுவலகமாக உறுதி செய்திட தமிழக அரசும் தொழிலாளர் துறையும்
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தொழிற்சங்க இயக்கங்களும் தொழிலாளர்களும் எதிர்பார்க்கிறார் கள்
தொழிலாளர்களின் விருப்பங்களை அரசு கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்
-முத்துகுமார் தலைவர் சிஐடியு
