
Gig தொழிலாளர்களுக்கு ‘இனையத் தொழிலாளர் கூடம்’ அமைத்திருப்பதை முன்மாதிரி செயல்பாடாக பெருமைப்பட்டு கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
Swiggy, Zomato, OLA, Uber போன்ற கிக் பொருளாதார நிறுவனங்கள் யாவும் அதில் அதில் பணியாற்றுவோரை தொழிலாளர்களாக அல்லாமல் பங்குதாரராக (Partners), சுயாதீன ஒப்பந்ததாரர்களாக (Independent Contractors) வரையறுத்து தொழிலாளர் உரிமைச் சட்டம்படி வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச ஆதார/ நிர்ணயிக்கப்பட்ட ஊதியம், ஊதியத்துடன் கூடிய விடுப்பு, மருத்துவ/ விபத்து காப்பீடு போன்ற எத்தகைய உரிமைகளையும் வழங்குவதில்லை.
அமைப்புசாரா தொழிலாளர் வகைமைக்குள் பணியமர்த்துவோர், பணியாளர் இடையேயான கடப்பாடுகளும் இந்நிறுவனங்களுக்கு இல்லை. அந்நிறுவனங்களை பொறுத்தவரை இனையத்தில் உணவை, பயனத்தை பதிவு செய்யும் பயனாளர்களையும், உணவை கொண்டு சேர்க்கும், பயனத்தை சாத்தியப்படுத்தி கொடுக்கும் கிக் தொழிலாளர்களையும் ‘சேவையைப் பெறுவோர்’ என்பதாக ஒரே வகைமைக்குள் வரையறுக்கிறது.
உடலுழைப்பும், உணவு/ பயனத்தை கொண்டு சேர்ப்பதற்குரிய எரிபொருள், வாகனம் உள்ளிட்ட உடைமையும் கிக் தொழிலாளர்களுடையது. ஆனால் நவீன தகவல் தொழில்நுட்ப வசதியொன்றை கட்டுப்படுத்திக் கொண்டு இந்த கிக் பொருளாதார நிறுவங்கள், கிக் தொழிலாளர்களை சுரண்டி கொழுக்கின்றன

.
தொழிலாளர்களது உரிமைகளை பெற்று கொடுக்க இத்தகைய கிக் பொருளாதார சேவை நிறுவனங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே அரசு தலையீட வேண்டும் என்கிற கோரிக்கை கிக் தொழிலாளர்களால் பல்வேறு தருனங்களில், பல்வேறு வழிகளிலும் தொடர்ந்து எழுப்பப்பட்டு கொண்டிருக்கிறது.
குறிப்பாக ஆட்டோ ஒட்டுநர்கள் சங்கம் OLA, Uber போன்று அரசே ஒரு செயலியை உருவாக்கி, தகவல் கட்டுப்பாட்டு மையத்தை நடத்த வேண்டுமென்றும் அதற்குரிய செலவினங்களிலும் பங்களிக்கிறோமென்றும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் அரசு அக்கோரிக்கையின் மீது பாராமுகத்துடன் இருந்து வருகிறது. இதற்கிடையில் கேரளா அரசு அத்தகையதொரு செயலியை (சவாரி செயலி) ஏற்படுத்தி கொடுத்திருப்பது இங்கே குறிப்பிடதக்கது.
மேற்கண்ட தொழிலாளரது கோரிக்கைகளுக்கு செவிமடுக்காத அரசு, சம்பந்தப்பட்ட கிக் பொருளாதார நிறுவனங்கள் அதில் பணியாற்றுகின்ற தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டிய ஒய்விட கட்டமைப்பை தானே உருவாக்கி கொடுத்து, அந்நிறுவனங்களின் செலவினத்தை மிச்சப்படுத்தி கொடுக்கிறது.
கிக் தொழிலாளர்களுடைய கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுத்துவிட்டு, இதையும் அரசு செய்திருந்தால் அதனை தொழிலாளர் நலனுக்கானது என்பதாக பார்க்கலாம்.
மாறாக சம்பந்தப்பட்ட நிறுவனம் தமது தொழிலாளர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய அடிப்படை வசதியை மட்டும் செய்து கொடுப்பதை முதலாளிகளின் நலனுக்கானதாகவே பார்க்கப்பட வேண்டும்.
அரசின் ‘இனையத் தொழிலாளர் கூடம்’ என்கிற அபத்தத்தை கார்பரேட் மாடல் அரசின் அடையாளமாக தான் பார்க்க முடியுமேயொழிய, திராவிட மாடல் அரசின் அடையாளமாக பார்க்கப்பட முடியாது.
– Balaji Thiyagarajan அவர்களின் முகநூல் பதிவு
https://www.facebook.com/share/p/16cGwvrcdg
#gigworkers