
ஓர் அறிமுகம்:
இந்தியாவில் ஆட்டோ,ஆட்டோ உதிரிபாக தொழிற்சாலைகள் அரியானா, உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் தான் குவிந்துள்ளன.இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், தமிழ்நாடு ஆட்டோ உதிரிபாக தொழிலின் பங்கு 2.3% என இருக்கிறது.தலைநகர் மண்டலத்தில்
வர்த்தக வாகனங்கள் 33% பயணிகள் வாகனம் 21%, உதிரி பாகங்கள் 35% தயாராகின்றன. தமிழ்நாடு அரசு இங்கு, ஒரு நிமிடத்தில் 3 கார்கள், 11/2 நிமிடத்தில் ஒரு வர்த்தக வாகனம் தயாராவதாகச் சொல்கிறது.பெரும் வருவாய் ஈட்டும் இந்த ஆட்டோ உதிரிபாக தொழிலில், 2 லட்சம் பேர் வரை அனைத்து தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
பொது பயன்பாட்டு சேவை அரசாணைகள்:
50 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிற தொழிலில், 2014-ல் 2019-ல், தான் பொது பயன்பாட்டு சேவை அறிப்பாணைகள் வந்தன. ஹூண்டாய் நிறுவனம் 2007 – 2008 காலகட்டத்தில், தமிழ்நாடு அரசுடன் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், இந்த தொழிலை பொது பயன்பாட்டு சேவையாக அறிவிப்பதாக, ஒரு ஷரத்து போடப்பட்டது.
2014-ல் 2019-ல் ஆட்டோ உதிரிபாக உற்பத்தியாளர் சங்க தலைவர், உதிரிபாக தொழிலை பொது பயன்பாட்டு சேவையாக அறிவிக்குமாறு. தமிழ்நாடு அரசுக்கு கடிதங்கள் எழுதினார். அவர்கள் கேட்டார்கள். இவர்கள் செய்தார்கள்.
பொது பயன்பாட்டு சேவை அறிவிப்பால்
முதலீட்டாளர்களுக்கு ஆதாயம்!
தொழில் தகராறுகள் சட்டத்தின் 22, 24, 25 பிரிவுகள், பொது பயன்பாட்டு சேவை தொழிலில், சட்டப்பூர்வமாக வேலை நிறுத்தம் செய்வதைக் கடினமாக்கி உள்ளன. வேலை நிறுத்தபங்கேற்பும்ஆதரவும் குற்றங்களாகவும்,தண்டனைக்குரியஒழுங்கு நடவடிக்கைக்குரிய ஒழுங்கீனமாகவும்மாற்றப்பட்டுள்ளன.
2014/2019 அரசாணைகள் :
ஆட்டோமொபைல் உதிரிபாக நிறுவன சங்க தலைவர் கேட்டுக் கொண்டதால், உதிரிபாக தொழில் பொது பயன்பாட்டு சேவை எனஅறிவிக்கப்பட்டது.வாடிக்கையாளர் சேவை. போட்டியிடும் திறன். வேலை வாய்ப்பு. தடையில்லா உற்பத்தி போன்றவையே காரணங்களாக இருந்தன.
03.12.2014 தேதிய அரசாணை 331-க்கு எதிராக கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமை சங்கம் WP.No:9479/2015 என்ற வழக்கையும், ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு WP.No:974/2015 என்ற வழக்கையும், தாக்கல் செய்தன. வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டாலும், சங்கங்கள் கோரிய இடைக்கால தடை தரப்படவில்லை.அடுத்து 14.06.2019 அன்று அரசாணை 180 மூலம் மீண்டும் தானுந்து உதிரிபாக தொழில் பொது பயன்பாட்டு சேவையாக அறிவிக்கப்பட்டது.அரசாணைகளின் ஆயுட்காலம் 6 மாதங்களே என்ற நிலையில், 6 மாதங்கள் மட்டுமே நீடிக்க வாய்ப்பு இருந்தநிலையில்,அரசாணை2014 நீடிக்கப்பட்டதாகவோ, 2019 வரை புதியஅரசாணை போடப்பட்டதாகவோ தெரியவில்லை
2019 அரசாணைக்கு எதிராக கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் சங்கம் WP:No:21983/2019 வழக்கு தொடர்ந்த போது, சென்னை உயர்நீதிமன்ற மாட்சிமை மிகுந்த நீதிபதி திரு வி.பார்த்திபன் தானுந்து உதிரிபாக தொழிலை பொது பயன்பாட்டு சேவையாக அறிவித்த அரசாணைக்கு. 01.08.2019 அன்று இடைக்கால தடை வழங்கினார்
இறுதி விசாரணை:
வழக்குகள் 2024-ல் மாட்சிமை மிகுந்த நீதிபதி டாக்டர் நாகார்ஜூன் முன் விசாரணைக்கு வந்தன. வாதாடி முடித்தோம். கெடுவாய்ப்பாக, தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு அந்த நீதிபதி ஓய்வு பெற்றுவிட்டார்.
2019 அரசாணையை பொறுத்தவரையில் நாம் வாங்கிய இடைக்கால தடை தொடர்ந்தது. வழக்கு 2025-மார்ச் மாதம் மாட்சிமை மிகுந்த நீதிபதி திரு எம்.தண்டபாணி அவர்கள் முன்பு விசாரணைக்கு வந்தது. கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமை சங்கத்துக்காக(KMPTOS)
ஆஜரான வழக்கறிஞர்கள் பாரதி மற்றும் சுரேஷிற்காக எஸ்.குமாரசாமி வாதாடினார். ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்புக்காக வழக்கறிஞர் சுடலைக்கண்ணுக்காக மூத்த வழக்கறிஞர் வி.பிரகாஷ் வாதாடினார். KMPTOS சங்கம் 13.03.2025 அன்று, எழுத்துமூல வாதுரைகளும் தாக்கல் செய்தது.
வாதங்கள்:
சட்டப்பிரிவு 2(n)(i)(i)(ii)(iv)(v) ஆகியவை குறிப்பான ரயில்வே, துறைமுகம், தொழில் நிறுவன அத்தியாவசிய பாதுகாப்பு பணிகள், மின்சார குடிநீர் வழங்கல், தூய்மை பணி போன்றவற்றை, பொது பயன்பாட்டு சேவை என அறிவிக்கின்றன. பிரிவு 2(n)(vi) பொது நலன் பொது அவசரம் கருதி, உரிய அரசு. ஒரு தொழிலை பொது பயன்பாட்டு சேவையாக அறிவிக்கலாம் என்கிறது.
2014-க்குப் பிறகு 2019-ல் தான் மீண்டும் அரசாணை வந்ததும், 2019 தடையை அகற்ற அரசு எந்த முயற்சியும் எடுக்காததும் கூட, பொது பயன்பாட்டு சேவை அரசாணை வழங்க அவசரமில்லை எனக் காட்டுகின்றன. 15.09.1938-ல் டாக்டர் அம்பேத்கர் பம்பாய் சட்டமன்றத்தில், அத்தியாவசிய மக்கள் சேவைகள் அல்லாத தொழில்களைப் பொது பயன்பாட்டு சேவை என அறிவித்து, தொழிலாளர் போராட்டங்களை சட்ட விரோதமாக்கி. தொழிலாளர்களை அடிமைப்படுத்த வேண்டாம் என்று பேசிய உரை, நீதிமன்றத்தின் பரிசீலனைக்காகத் தரப்பட்டது.
வேலை நிறுத்தங்கள் கதவடைப்புகள் தொடர முடியாமல் நடவடிக்கை எடுக்க, தரப்பினருக்கு நிபந்தனைகள் விதிக்க.தொடர்புடைய தொழில் தகராறுகளை நீதிமன்ற விசாரணைக்கு அனுப்ப, அரசுக்கு தொழில் தகராறுகள் சட்டம் 1947-ன் 10(1) 10(3) 10B பிரிவுகளில் அதிகாரம் இருப்பதால், தானுந்து உதிரிபாக தொழில்களில் எழும் பிரச்சனைகளை சமாளிக்க. மேற்படி பிரிவுகளே போதுமானவையாகும். ஆகவே பிரிவு 2(n)(vi) பிரிவு-40 ன் கீழ் பொது பயன்பாட்டு சேவை அறிவிப்பாணை தேவையில்லை.
பொது பயன்பாட்டு சேவையாக, தானுந்து உதிரிபாக தொழிலை அறிவிக்க எந்த பொது அவசரமும், பொது நலனும் இல்லை சட்டவிரோதமானவை,அறிப்பாணைகள்
அநியாயமானவையாகும்.
தீர்ப்பு:
13.03.2025 அன்று வழக்கை விசாரித்த நீதிபதி, 26.03.2025 அன்றே தீர்ப்பு வழங்கிவிட்டார். நீதிபதி எம்.தண்டபாணி அவர்களின் 54 பக்கங்கள் 72 பத்திகள் கொண்ட தீர்ப்பு. விரிவாக சட்டத்தையும் சட்டக்கோட்பாடுகளையும் அலசி ஆராய்ந்த, அதே நேரம் எழுந்த கேள்விகளுக்கு துல்லியமாக நேரடியான பளிச்செனப் புலப்படும் பதில்கள் கொண்டதாக அமைந்தது.
அரசாணைகள் தொ.த.சட்டம் 1947-ன் 2(n)(vi) மற்றும் பிரிவு 40-ன் பொருளுக்கும், உணர்வுக்கும் புறம்பானது.
அவசரம்/பொது நலன் என்ற தேவையை ஒட்டி மட்டுமே, பொது பயன்பாட்டு சேவை அறிவிப்பு வெளியிட முடியும். நிர்வாகங்கள்/ சங்கங்கள்/ தொழிலாளர்கள் நலன்களைக் காட்டிலும், பொது நலனும், பொது அவசரமும் மட்டுமே முக்கியமானதாகும்.தானுந்துகளை/உதிரிபாகங்களை சமூகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டுமே பயன்படுத்துகின்றன. அவை ஒட்டுமொத்த சமூகத்தின் பயன்பாட்டிற்கு உரியவை அல்ல. 2014-2019 அரசாணைகளின் கால இடைவெளியும், அவசரத் தன்மை ஏதுமில்லை எனக் காட்ட உதவும்.தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் அரசாணைகள், வேலை அளிப்பவர்களைத் திருப்திப்படுத்த மட்டுமே
போடப்பட்டுள்ளன.அரசாணைகள் போட, பொது அவசரம் பொது நலன் கோருவதாக, அரசு கருதிட வேண்டும். அரசு அவ்வாறு தன் கருத்தளவில் திருப்தி கொள்ள வேண்டும். வழக்கு தொடர்பான அனைத்து விசயங்களையும் பரிசீலித்த போது, அரசு தன் அறிவிப்பு வெளியிட, எந்த பொது அவசரமும் பொது நலனும் இருந்ததாகக் கருத, எந்த ஆதாரமும் இருந்ததாகத் தெரியவில்லை.
நீதிமன்றம், ஹூண்டாய் நிறுவனத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் பொது பயன்பாட்டு சேவை என அறிவிப்பு வெளியிட அரசு முன்னமே ஒப்புக் கொண்டதையும், தானுந்து உதிரிபாக உற்பத்தியாளர் சங்க தலைவர் எழுதி கடிதத்தையும், கணக்கில் கொண்டது.வேலை அளிப்பவர்களுக்கும், வேலை செய்பவர்களுக்கும் இடையில் நிலவுகிற எழலாம் என அரசு கருதுகிற, தொழில் தகராறுகளை அரசு நீதிமன்ற விசாரணைக்கு அனுப்ப 10(1) பிரிவு இடம் தருகிறது. அதன்கூடவே 10(3) பிரிவுப்படி வேலைநிறுத்தம் கதவடைப்பு தொடர்வதைத் தடைசெய்ய முடியும் 10B பிரிவு படி இரு தரப்பினருக்கும் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என நிபந்தனை விதிக்க முடியும். அப்படி இருக்கும் போது, பெரிய வெடிப்புக்கள் எவையும் எழாத போது, மொத்த தொழிலையும், பொது பயன்பாட்டு சேவை என அறிவித்தது தவறாகும். மேற்படி அரசாணைகள், அப்பட்டமான விதத்தில் ஆதாரமற்றவை, மனம்போன போக்கிலானவை, காரணமற்றவையாகும்.
மூலதன விசுவாச, தொழிலாளர் விரோத அரசாணைகள் வீழ்ந்ததை, தொழிலாளர் சட்டப் போராட்டம் வென்றதை எல்லோரும் கொண்டாடுவோம்.
-ஒருமைப்பாடுமன்றம் கம்யூனிஸ்ட் கட்சி