விகடன் குழுமம் மீண்டும் தன் கார்ப்பரேட் புத்தியை காட்டி இருக்கிறது.
கொரொணா காலத்தை காரணம் காட்டி 170 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஒரே நாளில் வெளியேற்றியது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் சட்டப்போராட்டம் ஒரு புறம் இன்றுவரை நடந்து கொண்டிருக்க நேற்று அதே போல் 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலையை விட்டு எக்காரணமும் சொல்லாமல் நீக்கி இருக்கிறது. இதில் விகடனுக்காக 10 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்தவர்களும் அடக்கம்.
இந்த முடிவை கடந்த மாதமே எடுத்திருந்த விகடன் நிறுவனம் “விகடனும் கலைஞரும்” என்ற புத்தகத்தை கடந்த 20 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அவர்களால் வெளியிட முடிவு செய்திருந்ததால் அதற்காக காத்திருந்து வேலை நீக்கத்தை நேற்று நடத்தி இருக்கிறது. அரசு இந்த எதேச்சேதிகார போக்கை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்று தான் கலைஞரின் புத்தக வெளியீடு நிகழ்ந்ததோ எனும் சந்தேகமும் எழுகிறது.
எந்த காரணமும் சொல்லாமல் தொழிலாளிகளின் வயிற்றில் அடித்திருக்கும் விகடனின் இச்செயல் கண்டனத்திற்குரியது. சுதந்திர ஊடகங்களும் பிற ஜனநாயக சக்திகளும் இந்த எதேச்சதிகார போக்கிற்கு எதிராக நிற்க வேண்டும். விகடனின் இரட்டை முகமூடியை மக்கள் முன் கொண்டு சென்று அம்பலப்படுத்த வேண்டும்.
-அருண் கோமதி(முகநூல் பதிவு)