ஒரகடம் யூனிபிரஷ் நிறுவனமே தொழில் அமைதியை சீர்குலைக்காதே ?அனைவருக்கும் வேலை கேட்டு ஒரகடத்தில் தொழிலாளர்கள் செப் 28ல் மனித சங்கிலி:

ஒரகடம்பகுதியில் யூனி பிரஸ் என்கிற ஜப்பானிய நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது

137 நிரந்தர தொழிலாளர் பணிபுரியும் இந்த ஆலை நிசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு காரின் முக்கிய பாகங்களை தயாரிக்க நிறுவனம் ஆகும்

பத்தாண்டுகளுக்கு முன்பு சங்கம் துவக்கியவர்களை முழுமையாக அடக்கி ஒடுக்கி அனைவரையும் வெளியேற்றியது இந்த நிறுவனம்

60க்கும் மேற்பட்டோர் அக்காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள்

கடந்த ஜனவரி மாதம் இந்த ஆலையில் சிஐடியூ தொழிற்சங்கம் துவக்கப்பட்டது 127 தொழிலாளர்கள் சங்கத்தில் இணைந்தார்கள்

தொழிற்சங்க அங்கீகாரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் தொழிற்சங்கத்தை ஏற்பதற்கும் நிர்வாகம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து வந்தன

தொழிலாளர்கள் உருவாக்கிய சிஐடியூ தொழிற்சங்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பகிரங்கமாக அறிவித்த இந்த நிர்வாகம் கடந்த ஏழு மாத காலமாக பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலம் கடத்தியும் தொழிற்சங்கத்தை ஏற்க முடியாது என்கிற நிபந்தனைகளை விதித்து செயல்பட்டு வந்தன

தொழிலாளர் துறை முன்னாள் சிஐடியூ உடண் பேசுகிறோம் என்று சொல்லிவிட்டு அடுத்த மறுநாளே

ஆலைக்கு உள்ளே அனைத்து தொழிலாளர்களையும் அழைத்து தொழிற்சாலைக்கு சம்பந்தம் இல்லாத சில சட்ட வல்லுனர்களை வரவைத்து

தொழிற்சங்கத்துக்கு எதிராகவும் தொழிற்சங்க கூட்டு பேர உரிமைக்கு எதிராகவும் வகுப்பு எடுக்கபட்டன சிஐடியூ போன்ற தொழிற்சங்கத்தை பற்றி தவறான முறையில் ஆலைக்குள்ளேயே பிரச்சாரம் செய்தார்கள்

தொழிற்சங்கத்தை கைவிடுவதாக இருந்தால் கூடுதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் தொழிற்சங்கம் தான் என்றால் அத்தகைய ஊதிய உயர் வழங்க முடியாது என்றும் தந்திர நடவடிக்கைகளில் நிர்வாகம் ஈடுபட்டது

இந்த பின்னணியில் சிஐடி யூ கொடியும் பெயர்பலகையும் ஆலைக்கு வெளியே தொழிலாளர்கள் உருவாக்கினார்கள் சங்கத்தை கலைக்கும் நோக்கத்துடன் கடந்த ஏழு மாத காலமாக செயல்பட்ட நிர்வாகத்திற்கு செங்கொடியும் சிஐடியூ பெயர் பலகையும் கண்ணை உறுத்தியது

சிப்காட் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து தொடர்ந்து கொடிக்கம்பத்தையும் பெயர் பலவையும் அகற்றுமாறு நிர்ப்பந்தம் செய்தது இந்த நிர்வாகம்

இவர்களின் நிர்பந்தத்தை தாங்க முடியாத சிப்காட் நிர்வாகம் 23 8 2023 அன்று புளூட்டசர் வைத்து கொடிக்கம்பத்தையும் பெயர் பலகையையும் இடித்து தள்ளினார்கள்

காஞ்சி மாவட்டத்தில் இதுவரையிலும் இல்லாத ஒரு கொடூர அடக்குமுறையாகும் இந்தசெயல்

ஒரு அந்நிய நிறுவனம் இந்திய நாட்டின் தொழிற்சங்கத்தையும் தொழிலாளர்களின் உரிமைகளையும் ஏற்க மறுப்பதுடன் அவர்களின் அதிகாரப்பூர்வமான கொடியையும் பெயர் பலகையும் வன்முறை மூலமாக வெளியேற்றியதை சகித்துக் கொள்ள முடியாமல் அடுத்த நாள் தொழிலாளர்கள் திரளாக திரண்டு அதே இடத்தில் சிஐடியூ கொடியை உயர்த்தினார்கள்

கொடியேற்ற நிகழ்ச்சி ஆராவரத்துடன் நடைபெற்றதால் அதை ஒரு கலவரமாகவும் அவர்களுக்கு எதிராக பெரும் வன்முறையை ஏவியதாக சித்தரிக்கப்பட்டு காவல்துறையில் தொழிற்சங்க தலைவர்கள் மீதும் தொழிலாளர் மீதும் பொய் புகார் அளிக்கப்பட்டு கடந்த 33 நாட்களாக தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து வேலை வழங்க மறுத்து வருகிறது இந்த நிர்வாகம்

மேலும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கும் நிபந்தனை விதித்துடன் தொழிலாளர்களையும் தொழிற்சங்கத்தையும் மன்னிப்பு கடிதம் வழங்கினால் மட்டுமே வேலை வழங்கப்படும் என்றும் டிஸ்மிஸ் செய்வோம் என்று பகிரங்க மிரட்டலை தொழிலாளர் நலத்துறைநலத்துறை அதிகாரிகள் முன்னாலேயே நிர்வாகம் தெரிவித்தது

எந்த அந்நிய நிறுவனமும் இவ்வளவு பகிரங்கமாக தொழிற்சங்க இயக்கத்துக்கு எதிராக சவால் விட்டதில்லை

வேலைக்கு வர தொழிலாளர்கள் தயாராக இருக்கிறார்கள் என்றும் வேலை மறுக்கப்பட்ட காலத்திற்கு நோ ஒர்க் நோபே என்கிற ஒப்புதலு டன் எந்த பழிவாங்கலும் இருக்காது என்று நிர்வாகம் உறுதி அளிக்கும் பட்சத்தில் நாங்கள் உடனடியாக வேலைக்கு வர தயார் என்று தொழிற்சங்கம் அறிவித்தது

ஆனால் நிர்வாகம் பேச்சுவார்த்தையே இனி நடத்த மாட்டோம் என்று வெளியேறி விட்டது

எந்த ஒரு பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு என்பதனை வரலாறு முழுவதும் நாம் சந்தித்துக் கொண்டிருக்கிற மகத்தான அனுபவம்

ஆனால்
இந்த நிறுவனம் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத காசுக்கு தொழில் செய்யும் சில சட்ட வல்லுநர்களின் பேச்சைக் கேட்டு தவறான முறையில் அவர்கள் தங்கள் நிலைபாட்டை எடுத்து இருக்கிறார்கள்

தற்போதைய தொழில் அமைதியின்மைக்கும் நிர்வாகத்தின் தொழிற்சங்க விரோத அணுகுமுறையை காரணமாகும்

கொடியேற்ற நிகழ்வுக்கு பிறகு கடந்த 30 நாட்களாக எந்த போராட்டத்திலும் யூனிட் பிரஸ் இந்தியா தொழிலாளர் சங்கம் சிஐடியயூ ஈடுபடவில்லை

வேலை கேட்டு அமைதியான முறையில் அமர்ந்திருக்கும் பின்னணியில்

நிர்வாகம் பயிற்சியற்ற தொழிலாளிகளையும் ஒப்பந்த தொழிலாளிகளையும் நிர்வாக ஊழியர்களையும் வைத்து சட்டவிரோத நேரடி உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது

இந்த சட்ட விரோத உற்பத்தியால் சமீபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு ஒப்பந்த தொழிலாளியின் கால்விரல்கள் துண்டிக்கப்பட்டு பெரும் விபத்து ஏற்பட்டது

இதன் மீது தொழிற்சாலை அதிகாரியிடம் புகார் தெரிவித்த பின்னணியில் அங்கு செய்யப்பட்ட ஆய்வில் சட்ட விரோத உற்பத்தி உள்பட தொழிற்சாலை சட்டவிரோத பல நடவடிக்கைகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு தவறான செயற்பாட்டுக்காக இந்த நிர்வாகம் விசாரணையை எதிர்கொண்டிருக்கின்றன

சிஐடியூ வின் உறுதிமிக்க நடவடிக்கைகளை எதிர் கொள்ள முடியாமல் நிர்வாகம் தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம் என்றும் அவர்கள் போடுகிற கட்டளைக்கு அடி பணிந்தால் மட்டுமே தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை என்றும் ஒரு அராஜக நடவடிக்கை நோக்கி நிர்வாகம் சென்று கொண்டிருக்கின்றன

இதை எதிர்த்து அனைவருக்கும் வேலை வழங்க

சட்ட விரோத உற்பத்தியில் ஈடுபடாதே தொழில் அமைதியை பாதுகாத்திடு என்கிற முழக்கங்களுடன்

ஒரகடத்தில் RNS bark சிப்காட் அருகாமையில் மனித சங்கிலி போராட்டம் செப்டம்பர் 28ஆம் தேதி மாலை 4 மணி அளவில் நடைபெறும்

அந்நிய யூனி பிரஸ் நிறுவனத்தின் தொழிற்சங்க அடக்குமுறைக்கு எதிராக நடைபெறும் இந்த பெரும் போராட்டத்தில் அனைத்து தொழிற்சாலை தொழிலாளர்களும் பங்கேற்குமாறு சிஐடியூ மாவட்ட குழு அன்போடு கேட்டுக்கொள்கிறது

யூனி பிரஸ் போராட்டத்தின் வெற்றி அனைத்து ஆலை தொழிலாளர்களின் தொழிற்சங்க பாதுகாப்புக்கான வெற்றியாக அமைந்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்

இ முத்துக்குமார்
சி ஐ டி யு காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் #CITU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *