சென்னை மறைமலை நகரில் இயங்கி வரும் ஃபோர்டு கார் தொழிற்சாலை தனது உற்பத்தி நிறுத்தி ஆலையை மூடப்போவதாக கடந்த ஓராண்டுக்கு முன்னதாக அறிவித்தது 2638 நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நிர்வாகத்தின் அறிவிப்பை எதிர்த்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்
LTUC தொழிற்சங்கம், உழைப்போர் உரிமை இயக்கம், ஹூண்டாய் ,ரொனால்ட் நிசான் , தூய்மை பணியாளர்கள் , கோஆஃப்ட்க்ஸ் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் NIFCO,நம்மவர் தொழிற்சங்க பேரவை ,Kanchi kamakoti child Hospital Employees Union போன்ற பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
ஒரு தொழிற்சாலையில் 100 தொழிலாளர்கள் இருந்தால் ஆலையை கதவடைப்பு செய்ய விரும்பும் நிர்வாகம் 90 நாட்களுக்கு முன்னதாக அரசாங்கத்திடம் முறையாக விண்ணப்பித்து. (தொழில் தகராறு சட்டம் 1947 பிரிவு 25(O) ) படி அந்த தகவலை தொழிலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் ஆனால் மிகபெரிய தொழிலாளர் எண்ணிக்கையை கொண்ட ஒரு நிறுவனத்தில் எந்தவிதமான சட்ட பூர்வமான நடவடிக்கையும் இல்லை .முழுக்க முழுக்க சட்டவிரோதமாக ஒரு செட்டில்மண்ட் தொகையை அறிவித்து அதை தொழிலாளர்களை ஏற்க்க செய்யும் போக்கு அரசாங்கத்தின் துணையுடன் நடந்து கொண்டிருக்கிறது.
தொழில்துறையில் முன்னோடி மாநிலம் என மார்தட்டி கொள்ளும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து இது போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் சட்டவிரோத ஆலைமூடலை தடுத்து நிறுத்துவதில்லை. பன்னாட்டு மூலதனங்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க்கும் மத்திய மாநில அரசுகள் தொழிலாளர்களின் மீது நடத்தப்படும் உழைப்பு சுரண்டல் குறித்து எந்த அக்கறையும் கொள்வதில்லை மாறாக போராடும் தொழிலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது
தொழிலாளர்துறை முழுக்க முழுக்க கார்ப்பரேட் பன்னாட்டு நிறுனங்களின் அடிவருடிகளாக சிறப்பாக செயல்படுகிறார்கள் ஒரு தொழிற்சாலை தொடங்கும் போது 10ஆண்டுகள் (அ) 15 ஆண்டுகள் என நிலம் தொடங்கி நீர் , மின்சாரம் வரி என அணைத்து சலுகைகளையும் மக்கள் வரிப்பணத்தில் அரசால் வழங்கப்படுகிறது ஒட்டுமொத்தமாக பயன்படுத்தி விட்டு தொழிலாளர்களின் உழைப்பையும் ஒட்ட சுரண்டிவிட்டு செல்லும் நிறுவனங்களை தடுக்க வக்கில்லாத தொழிலாளர்துறை நிர்வாகம் கொடுக்கும் பணத்தை வாங்கிகொள்ளுமாறு தொழிலாளர்களிடம் பேரம் பேசுகிறது .இதுவரை ஃபோர்டு நிறுவனம் முறைப்படி ஆலை மூடலுக்கு விண்ணப்பிக்கவில்லை ஒவ்வொரு தொழிலாளர்களின் வீட்டிற்க்கும் மிரட்டல் கடிதங்கள் அனுப்பபட்டுள்ளது நிர்வாகம் தரும் தொகையை வாங்கிகொள்ள சம்மதிக்காவிட்டால் இந்த குறிப்பிட்ட தொகையும் கிடைக்காது என குறிப்பிட்டுள்ளது இதுபோன்ற தொழிலாளர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தவும் போராட்டங்களை முடக்கவும் நிர்வாகம் எடுக்கும் செயல்களுக்கு அரசு துணை நிற்கிறது.
ஃபோர்டு நிறுவனம் போல் அரசின் முறையான எந்தவித அனுமதியும் இல்லாமல் நிரந்தர தொழிலாளர்களை நீக்கவும் தொழிற்சாலையை மூடவும் முடியும் என மற்ற நிறுவனங்களுக்கு வழிக்காட்டிவருகிறது .ஆகையால் தொழிலாளர்கள் இதுபோன்ற அரசு கார்ப்பரேட்டின் செயல்களை முறியடிக்க வர்க்க ரீதியில் அணிதிரள வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.
ஃபோர்டு தொழிலாளர்களின் போராட்டத்திற்க்கு வலுசேர்ப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *