ராயல் என்பீல்ட் தொழிற்சாலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சங்கம் அமைக்க தொழிலாளர்கள் போராடி வருகின்றனர் 2018 ஆம் ஆண்டு பெருபான்மையான தொழிலாளர்கள் wpc ( குசேலர்) தலைமையிலான சங்கத்தில் சேர்ந்து முறையான பதிவுசெய்து நடத்திவருகின்றனர் நிர்வாகம் பெருபான்மையான தொழிலாளர்கள் உள்ள சங்கத்துடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாமல் புறக்கணித்து தொழிலாளர்களை பழிவாங்கும் செயல்களை தொடர்ந்து செய்து வருகிறது .இந்நிலையில் நிர்வாகமே ஒரு போலியான சங்கத்தை தொடங்கி அதில் தொழிலாளர்களை மிரட்டி சேர்த்து வருகிறது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முன்னணி தொழிலாளர்களை வெளி மாநிலங்களுக்கு மாற்றம் செய்வது பணிநீக்கம் செய்வது என தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது.சங்கத்திற்கு துரோகிகளாக மாறிய சில தொழிற்சங்க நிர்வாகிகள் மூலமாக பெருபான்மையான தொழிலாளர்கள் உள்ள ஒரு சங்கத்தை அழிக்கும் பணிகளை செய்து வருகிறது தொழிலாளர்கள் விரும்பும் சங்கத்தை ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் நடத்தவும் நிர்வாகம் முட்டுககட்டையாக உள்ளது தற்போது போலியான ஆவணங்கள் மூலமாக சங்கத்தை கலைக்க அரசுக்கு தொழிலாளர்களே கொடுத்த கடிதமாக போலியான ஆவணங்கள் சென்று உள்ளது அதன் மீது தொழிலாளர் துறை துரிதமாக சங்கத்தை கலைக்க நடவடிக்கை எடுக்க ஆயுத்தமாகி வருகிறது எந்த சூழ்நிலையிலும் தனது கார்ப்பரேட் நலன்சார்ந்த விசுவாசத்தை விட்டுகொடுக்க அரசு தயாராக இல்லை.ஃபோர்டு ஆலையில் தொழிலாளர்கள் போராடும் போது எந்த தலையிடும் செய்யாத அரசு . தொழிற்சங்கத்தை கலைக்க தனது வேகத்தை காட்டி வருகிறது . எப்போதும் அரசு என்பது மக்கள் நலன் சார்ந்து இருக்காது என்பதற்கு இது போன்ற பல நிகழ்வுகள் நடந்துள்ளது. அரசை நெருக்கடிக்கு உள்ளாக வேண்டிய மக்கள் சக்தியான தொழிலாளர் வர்க்கம் சிதறுண்டு கிடப்பதே இதுபோன்ற கார்ப்பரேட் அடவாடிகளுக்கு காரணம். தொழிலாளர் வர்க்கம் தனது கடந்தகால வரலாற்றை அறிவதும் நிகழ்கால அரசியல் சூழ்ச்சிகளை கலைந்து ஒன்றினைவதும் மட்டுமே தொழிலாளர் வர்க்கம் நெருக்டியில் இருந்து மீள வழியாகும்.