1955 இல், அமெரிக்கா ஹிரோசிமா (ஜப்பான்) மீது அணுகுண்டு வீசிய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, துருக்கியக் கவிஞர் நசீம் இக்மத் அமெரிக்காவின் அந்த பயங்கரச் செயலால் மரணித்த ஏழு வயது சிறுமியின் குரலில் ஒரு கவிதையை எழுதினார். அந்தக் கவிதை பின்னர் நொபுயுகி நகமோடோ ஜப்பானியமொழியில் ‘ஷின்டாஒன்னானோகோ’ என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்தார். அந்தக் கொடூரச் செயலின் நினைவின் பொதெல்லாம் அந்தப்பாடல் பாடப்படுகிறது. போரின் கொடுமை மற்றும் இன்று உக்ரெய்னில் நடக்கும் மோதல் சூழலில், சிந்தையில் சுழன்று சுழன்று வரும் நசீம் இக்மத்தின் அக்கவிதையை எதிரொலிப்பது பொருத்தமாக இருக்கிறது.
—————————–
ஒவ்வொருவீட்டின்வாசலிலும்
நான் வந்துநிற்கிறேன்
மௌனமான என் காலடி
ஓசையாருக்கும் கேட்கவில்லை
கதவைத்தட்டினாலும் என்னைக் காண்பாரில்லை
ஏனென்றால்நான் இறந்துவிட்டேன்,
வெகுநாட்களுக்குமுன்பாக ஹிரோசிமாவில்
நான் இறந்துவிட்டேன்
அன்றைக்குப்போலவே இப்போதும்
எனக்குவயதுஏழுதான்
குழந்தைகள்இறந்துவிட்டால் அவர்கள் வளர்வதில்லை
சுழன்றடித்ததீச்சுவாலை எனது முடியைக்கருக்கிவிட்டது
எனதுபார்வைமங்கி எனதுவிழிகள்இருண்டுவிட்டன
மரணம்வந்துஎனதுஎலும்புகளைச் சாம்பலாக்கியது
அதுவும்வீசியகாற்றில் பறந்து பரந்தது
எனக்கு பழம் தேவையில்லை சோறும்தேவையில்லை
இனிப்பும்தேவையில்லை, ரொட்டியும்கூடவேண்டியதில்லை.
எனக்காக நான் எதையும் கேட்கப்போவதில்லை
ஏனென்றால் நான் இறந்துவிட்டேன், நான் இறந்துவிட்டேன்
நான் கேட்பதெல்லாம் அமைதிஒன்றுதான்
இன்று நீங்கள் போரிடுங்கள்
உலகின் குழந்தைகள் உயிர்வாழவும்
வளரவும் சிரித்து விளையாடவும்.
இன்றுநீங்கள் போரிடுங்கள்.
ஆங்கிலத்திலிருந்துதமிழில்
நிழல்வண்ணன்
நன்றி: Janatha Weekly.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *