காஞ்சிபுரம் மாவட்டம் ஒரக்கடத்தில் அமைந்துள்ள ரெனால்ட் நிசான் ஆலையில் தொழிற்சங்க தேர்தல் ஆகஸ்ட் 20 ஆம் தேதி சனிக்கிழமை ரகசிய வாக்கெடுப்பு மூலமாக நடந்தது. ஒய்வு பெற்று நீதிபதி திரு.பார்திபன் அவர்கள் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். 3523 தொழிலாளர்கள் கொண்ட தொழிற்சங்கத்திற்கான தேர்தலில் சுமார் 3300 தொழிலாளர்கள் வாக்களிதனர். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் பாலாஜி கிருஷ்ணன் , செயலாளர் மூர்த்தி, பொருளார் பார்த்தசாரதி ஆகியோரை கொண்ட அணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.புதிதாக ஐந்து தொழிலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கபட்டு அவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த முறை 96% வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற அணி இந்த முறை 60% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகள் ஊதிய உயர்வு பிரச்சினை, நிர்வாகத்தின் ஆட்குறைப்பு திட்டங்கள் பணிநீக்கம், பணியிடைநீக்கம் மற்றும் கொரோன காலகட்ட பிரச்சினை அதை தொடர்ந்து செமிகண்டேக்டர் பற்றாக்குறையால் ஏற்பட்ட வேலைநாள் இழப்பு , போன்ற பல பிரச்சனைகளை தொழிற்சங்கம் எதிர்கொண்டுள்ளது. இதனால் தொழிற்சங்கத்தில் இயல்பாக ஏற்படும் பிரச்சனைகளை நிர்வாகம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி பிரிவினைகளை ஏற்படுத்தியது இது தேர்தல் நேரத்தில் பல குழுக்களாக வெடித்தது . ஊதிய உயர்வு ஆர்பிடேசன் மூலமாக நடந்து வந்த நிலையில் நடந்த இந்த தேர்தல் முக்கியமானதாக இருந்தது பல நெருக்கடிகளுக்கு மத்தியில் மீண்டும் ஒரே அணி அனைத்து (11)பதவிகளையும் பெருபான்மையான தொழிலாளர்களின் ஆதரவுடன் கைப்பற்றியது. நிர்வாகத்திற்கு எதிராக இது மிகப்பெரிய வெற்றிதான் இருப்பினும் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு இது சவலான காலகட்டமாக இருக்கும் இந்த பிரிவினைகளை தொழிற்சாலை நிர்வாகம் வளர்தெடுக்கவே விருப்பும் தொழிற்சங்க நிர்வாகிகள் பிரிவினைகளை ஒருங்கிணைக்கும் பணிகளை செய்ய வேண்டும். தொழிலாளர்களை அரசியல் ரீதியாக தயார் படுத்த வேண்டும் . புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகள் தமிழ்நாட்டில் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் நடைமுறைபடுத்த வாய்ப்புள்ளது .விவசாய சட்டத்திற்கு எதிராக தீர்கமாக போராடிய விவசாயிகள் போல எந்த தொழிற்சங்கமும் தொழிலாளர்களை தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக போராட ஒருங்கிணைக்கவில்லை. ஒவ்வொரு தொழிற்சாலை தொழிலாளர்களும் தொழிற்சங்க வேறுபாடுகளை கடந்து அரசியல் ரீதியாக ஒற்றினைந்தால் மட்டுமே எதிர்காலத்தில் அரசாங்கத்தையும் , கார்ப்பரேட்டயும் எதிர்கொள்ள முடியும். ஆனால் தமிழ்நாட்டில் நடப்பது ஒரு சங்கத்தை உடைத்து இன்னொரு சங்கத்தை உருவாக்கும் போக்குதான் அதிகமாக உள்ளது.இப்படி "குழாய் அடி சண்டையாக" தொழிற்சங்க அரசியல் நடந்தால் எப்படி மக்களை ஒருங்கிணைக்க முடியும்? இதில் சில முண்ணெனி தொழிற்சங்கங்கள் ஈடுபடுவது ஏற்புடையதாக இல்லை. எப்படி இருப்பினும் ரெனால்ட் - நிசான் தொழிற்சங்க வெற்றி நிர்வாகத்திற்க்கு எதிரான முக்கியமான வெற்றியாகும். 1. தலைவர்: பாலாஜி கிருஷ்ணன், 2. பொதுசெயலாளர்: மூர்த்தி,3. பொருளார்: பார்த்தசாரதி 4. இணை செயலாளர்கள்: 5. அருள் ,6.காமராஜன்,7.செல்வகார்திக், 8. சிவராமன்.9 தமிழ்குமரன்,10. தமிழரசன், 10.வேலு ,11. விஜிகுமார்.
வெற்றிபெற்ற தொழிற்சங்க தோழர்களுக்கு வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published.