மதுராந்தகம் வட்டம் நடராஜபுரம் கிராமத்தில் இயங்கி வரும் கோயாஸ் பாஸ்னர்ஸ் ஆட்டோமொபைல் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் 64 நிரந்தர தொழிலாளர்கள் உள்ளனர். தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான தொழிற்சங்க உரிமையை நிர்வாகம் முடக்கும் போக்கோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது சங்கத்தின் முன்னனி தொழிலாளர்களை பணியிடை மாற்றம், பணி இடைநீக்கம் செய்வது வேலை நீக்கம் செய்வது என தனது அராஜக போக்கை நிர்வாகம் தொடர்ந்து வருகிறது.ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையும் மூன்று ஆண்டுகள் நிலுவையில் உள்ளது. இதை கண்டித்து கடந்த 15 நாட்களாக தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிர்வாகம் வேலை நிறுத்தத்தை முறியடிக்க ஒற்றுமையை குலைக்க பல்வேறு வழிகளில் செயல்பட்டு வருகிறது. வட மாநில ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு சட்ட விரோதமாக உற்பத்தியில் ஈடுப்பட்டு வருகிறது. எனினும் உற்பத்தியில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை என தெரிகிறது.
தொழிலாளர்துறை முன்னிலையில் அடுத்த கட்ட பேச்சு வார்த்தையில் கிடைக்கும் முடிவின் அடிப்படையில் அடுத்த கட்ட போராட்டம் இருக்கும் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.சுமுகமான ஒரு முடிவு ஏற்படும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
