8ஆவது நாளாக எங்களின் #அறவழி போராட்டம் தொடர்கிறது.
எங்களின் #கோரிக்கை இதுவே – கடந்த டிசம்பர் மாதத்தோடு #குஜராத் தொழிற்சாலையை மூடுவதாகவும், இந்த வருடம் ஜூன் மாதம் சென்னை தொழிற்சாலையை மூடுவதாகவும் சென்றவருடம் அறிவித்தது.
2021 டிசம்பர் மூடவேண்டிய குஜராத் தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களுக்கு கடந்த 6 மாதமாக #சம்பளம் கொடுத்து, நிர்வாகமும் அரசாங்கமும் இணைந்து தொழிலாளர்களை #டாடாவிடம் கைமாற்றி அவர்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றி உள்ளது.
சென்னை தொழிற்சாலையில் பெற்ற லாபத்தை வைத்து ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த குஜராத் தொழிற்சாலை கடந்த இரண்டு வருடங்களாக #நஷ்டத்தில் இயங்கி வந்த குஜராத் தொழிற்சாலைக்கு சென்னை தொழிற்சாலையில் வரும் லாபத்தை வைத்து சம்பளம் கொடுத்து வந்தார்கள்.
அதுபோல சென்னை தொழிற்சாலையை #வாங்குவோர் வரும்வரை நிர்வாகம் எங்களுக்கு சம்பளம் கொடுத்து எங்கள் #வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே எங்களின் முதல் தலையாய கோரிக்கை.

தமிழக_அரசும் எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் 30 ஆயிரம் குடும்பங்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் இது மேலும் #காலதாமதம் ஏற்படுத்தாமல் விரைந்து ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.

  • Ashok ak
    ஃபோர்டு தொழிலாளர்

Leave a Reply

Your email address will not be published.