சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு வெற்றி! LTUC-க்கு வெற்றி!

சென்னை மாநகராட்சி NULM தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்குண்டான சம்பளம் அளிக்க 12 வாரகாலத்திற்குள் திட்டம் உருவாக்கவும், அதுவரை குறைந்தபட்ச கூலி சட்டத்தின் படிசம்பளம் வழங்கவும், சென்னை உயர்நீதிமன்றம் W.P.no.8281/2021 என்ற வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. அம்பத்தூரில் 1454 NULM தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இத்தீர்ப்பு அமல்படுத்தப்பட்டால் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ7,000 வரை ஊதியம் உயரும். கொரானா, ஒமைக்ரான் காலத்தில் தங்கள் உயிரை பணயம்
வைத்து மக்கள் உயிரை காப்பாற்றும், தமிழகம் முழுவதுமுள்ள நிரந்தரமாக்கப்படாத தூய்மை பணி தொழிலாளர்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கும் தீர்ப்பாகும். இந்த வழக்கு உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநில தலைவரும், ஜனநாயக வழக்கறிஞர் சங்க மாநில தலைவர் கு.பாரதி தாக்கல் செய்திருந்தார். வழக்கில் க.சுரேஷ், M.K.நிவேதா வழக்கறிஞர்களாக இருந்து தொழிலாளர் தரப்பு மூத்த வழக்கறிஞர் எஸ்.குமாரசாமி நடத்தினார். தூய்மை பணியாளர்கள் சமவேலைக்கு சம ஊதியம் பெற, பணிநிரந்தரம் பெற தொடர்ந்து நீதிக்கான போராட்டம் தொடரும்.

செய்தி வெளியீடு:

உழைப்போர் உரிமை இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *