கிராமசபை மீட்புப் பயணம் 2021

பயணத்தின் 7வது நாள் (கடைசி மக்கள் சந்திப்பு) 17/09/2021

கோதண்டபுரம் கிராமம், புளியந்துறை ஊராட்சி, கொள்ளிடம் ஒன்றியம், மயிலாடுதுறை மாவட்டம்.

இன்று பிற்பகல் அளவில் புளியந்துறை ஊராட்சியில் கொள்ளிடம் ஒன்றியம் ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த கூட்டத்தில் பேசினோம். பெண்களும் இளைஞர்களும் கலந்து கொண்ட கூட்டத்தில் ஒன்றியத்தைச் சார்ந்த ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும், தோழன் அமைப்பில் இருந்து திரு சிவச்சந்திரன் அவர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இருந்த மக்களிடம் கிராமசபையைப் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் முன்மாதிரி கிராமங்கள் பற்றியும் எடுத்துக் கூறியதோடு தடைபட்டு இருக்கும் கிராமசபையை நடத்த வேண்டிய அவசியம் பற்றியும் விளக்கிக் கூறினோம்.

மேலும் மூன்று வருடமாக சிறப்பு அலுவலர்களான வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமிருந்த ஊராட்சி நிர்வாகம், தேர்தலுக்குப் பிறகும்அவர்களிடமே இருக்கும்படியான அதே நடைமுறை பெரும்பாலான இடங்களில் பின்பற்றப்படுவதால் மக்கள் பிரதிநிதிகளான ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து வந்திருந்த ஊராட்சிப் பிரதிநிதிகள் சிலர் கருத்து தெரிவித்தனர். அப்போது மக்களின் ஆதரவும் ஊராட்சிப் பிரதிநிதிகளுக்கு முக்கியமாகத் தேவைப்படுவது பற்றியும் உரையாடினோம்.

பிறகு வந்திருந்த மகளிர், ஊராட்சியில் தாங்கள் சார்ந்த பிரச்சினைகள் பற்றி கேள்விகள் எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஊராட்சித் தலைவர் நாம் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தினார். வரும் அக்டோபர் 2 கிராம சபையை நாம் அனைவரும் இணைந்து நடத்திக் காட்டுவோம் என்று வந்திருந்த பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும் மக்களும் உறுதிமொழி எடுத்ததோடு கூட்டம் நிறைவடைந்தது.

இன்று இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் ஊராட்சித் தலைவர்களின் கூட்டமைப்பிற்கும், அதன் தலைவருக்கும் மற்றும் புளியந்துறை ஊராட்சி மக்களுக்கும் நன்றிகள் பல.

வேண்டும்_கிராமசபை

கிராமசபைமீட்புப்பயணம்

தன்னாட்சி
9445700758

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *